Untitled Document
October 26, 2026 [GMT]
 
சினம்கொள் - ஈழத்துத் தமிழ்த்திரைப்பட காட்சிகள் பற்றிய விபரம்: அவுஸ்திரேலியா! Top News Top News
[Saturday 2020-02-29 09:00]

எமது மக்களின் வாழ்வையும் உறைந்துபோயுள்ள உன்னதமான உணர்வுகளையும் திரையில் கொண்டு வருகிறது 'சினம்கொள்' என்ற முழுநீள திரைப்படம். ஈழத்து தமிழ் கலைஞர்களால் உருவாக்கப்பட்டு தமிழர்கள் வாழும் அனைத்து நாடுகளிலும் பெரு ஆதரவுடன் வெளியீடப்பட்ட இத்திரைப்படம், ஒஸ்ரேலியாவின் பெருநகரங்களிலும் வெளியாகின்றது. இத்தகைய முயற்சிகளை ஊக்குவிக்கும் வண்ணம், உங்கள் முழுமையான ஆதரவை வழங்குமாறு அனைவரையும் அன்புடன் கேட்டுக் கொள்ளுகின்றோம். நன்றி.


நோர்வே தமிழ் திரைப்பட விழாவில் பொய்யாவிளக்கு திரைப்படத்திற்கு விருது! Top News
[Friday 2020-02-28 18:00]

நோர்வே தமிழ் திரைப்பட விழாவில் சிறந்த ஆவணம் சார்ந்த திரைப்படத்துக்கான விருது பொய்யாவிளக்கு திரைப்படத்திற்கு கிடைத்த து முள்ளிவாய்க்கால் இனவழிப்புப் போர் சார்ந்த முதல் திரைப்படம் இதுவாகும். சிறீலங்கா இனவாத அரசின் போர்க்குற்றங்களை வெளியுலகிற்கும் எங்கள் வருங்கால சந்ததிக்கும் எடுத்துச் செல்லவிருக்கின்ற இந்தத் திரைப்படத்தினை ஒரு ஆவணப் பொக்கிசம் எனச் சில விமர்சகர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். இது உண்மையினை உள்ளபடி எடுத்து வந்திருக்கிறது என்பதுவும், போலிகளற்ற யதார்த்த சினிமாவாக இருக்கின்றதென்பதுவும் அனைவராலும் மெச்சப்பட்டு வருகிறது. ஈழ சினிமா தன் பாதையில் எவ்வாறு பயணிக்க வேண்டும் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டாக பொய்யா விளக்கு இருக்கப் போகின்றது.


10வது ஆண்டாக சிறப்பாக இடம்பெற்ற பிரித்தானிய தமிழ் இளையோர் அமைப்பின் “கற்க கசடற 2020”! Top News
[Tuesday 2020-02-25 17:00]

“கற்க கசடற கற்பவை கற்றபின். நிற்க அதற்குத் தக” என்ற திருவள்ளுவரின் குறளை பின்பற்றி பிரித்தானிய தமிழ் இளையோர் அமைப்பினரால் நடாத்தப்படட கற்க கசடற 10 வெகு சிறப்பாக நடைபெற்றது.புலம் பெயர்ந்து வாழ்ந்தாலும் எம் மொழியின் பெருமைகளை விட்டுக் கொடுக்காது எமது எதிர்கால சந்ததியினருக்கும் எங்கள் தமிழ் மொழியின் அருமை பெருமையை எடுத்துரைத்து எம் தேசிய தலைவரின் கனவை நினைவாக்கும் வண்ணம் மொழித்திறனாய்வுப் போட்டியினை செவ்வனே செய்திருந்தார்கள். உலகத் தாய்மொழி தினத்தை முன்ணிட்டு இடம்பெற்ற இந்த போட்டி பல சங்க கால இலக்கியங்களை உள்ளடக்கி இடம்பெற்றது. அதில் முக்கியமாக திருவள்ளுவர் இயற்றிய திருக்குறள், தொல்காப்பியர் இயற்றிய தொல்காப்பியம் மற்றும் ஔவையார் இயற்றிய ஆத்திசூடி நூல்களும் அடங்கும். வருங்கால சந்ததியினரை ஊக்குவிற்பதே இந்த கற்க கசடற என்னும் போட்டியின் நோக்கமாகும். கற்க கசடற என்னும் இன் நிகழ்வு வட கிழக்கு லண்டன் தொடங்கி, தொடர்ந்து தென் மேற்கு, வட மேற்கு, தென் கிழக்கு என நான்கு இடங்களிலும் அரைச்சுற்று இடம் பெற்றது.


சமூக ஆர்வலர்கள் ஒன்றுகூடல் – 2020 - தீர்மானங்கள் | நாம் தமிழர் கட்சி – தகவல் தொழில்நுட்பப் பாசறை! Top News
[Monday 2020-02-24 17:00]

இன்று 23-02-2020 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியளவில் காஞ்சிபுரம் மாவட்டம், கிழக்கு தாம்பரம், சி.எஸ்.ஐ. தேவாலயம் எதிரிலுள்ள அன்னை அருள் திருமண அரங்கத்தில் நாம் தமிழர் கட்சியின் தகவல் தொழில்நுட்பப் பாசறை சார்பாக “சமூக ஊடக ஆர்வலர்கள் ஒன்றுகூடல்-2020” நிகழ்வு, தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.


மக்களின் கேள்விகளுக்கு பதில் சொன்ன நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்! Top News
[Sunday 2020-02-23 09:00]

பத்து ஆண்டுகளை முள்ளிவாய்க்கால் தமிழினஅழிப்பு தொட்டுவிட்ட நிலையில், ஈழத்தமிழர்களின் அரசியல் போராட்டத்தின் எதிர்காலம் என்னவென்ற மக்களின் கேள்விக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் பதில் அளித்துள்ளது. மக்கள் அரங்கம் என்ற பெயரில் சந்திப்புக்களை நடாத்தி வருகின்ற நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், சமீபத்தில் ஜேர்மனியின் ஸ்ருட்காட், டோர்ட்முன்ட் ஆகிய நகரங்களில் கூட்டங்களை நடாத்தியிருந்தது. அமெரிக்காவிலும் நடாத்தியிருந்தது. 2009க்கு பின்னரான ஈழவிடுதலைப் போராட்டத்தடத்தில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் வகிபாகம் பற்றி அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சர் சுதன்ராஜ் கருத்துரையினை வழங்க, சமஅரசியல் நிலைவரம் குறித்த உரையோடு பொதுமக்களின் கேள்விகளுக்கு பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் இணையவழி பரிவர்த்தனையூடாக பதில் அளித்திருந்தார். புலம்பெயர் அமைப்புக்களிடையே ஒற்றுமை, தாயக மக்களுக்காக உதவிகள், முன்னாள் போராளிகளுக்கான வாழ்வாதார உதவிகள், அரசியல் தீர்வு, இனப்படுகொலைக்கான நீதி, புலம்பெயர் இளையோர்களின் பங்களிப்பு, சர்வதேசத்தின் நிலைப்பாடு, சிறிலங்கா அரசின் போக்கு என்று பொதுமக்களின் கேள்விகளுக்கு விளக்கமாக பதில்கள் அளிக்கப்பட்டது.


மட்டக்களப்பு மாவட்டத்தில் போக்குவரத்துக்காக செயலி அறிமுகம்: Top News
[Saturday 2020-02-22 20:00]

மட்டக்களப்பு மாவட்டத்தின் வரலாற்றில் முதன்முறையாக போக்குவரத்துகளை ஒழுங்குபடுத்தும் வகையிலான வலையமைப்பு செயலி (Application) ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. 2030ஆம் ஆண்டின் மட்டக்களப்பு மாவட்டத்தின் இலக்கு (Vision for Batticaloa 2030) என்னும் அமைப்பின் அனுசரணையுடன் மயூ சைபர் சொலுஷன் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தினால் ‘சவாரி’ என்னும் பெயரில் இந்த செயலி உருவாக்கப்பட்டுள்ளது.


தமிழ்க்கல்விச்சேவை சுவிற்சர்லாந்து - பொங்கல் விழா! Top News
[Saturday 2020-02-22 09:00]

செங்காளன் மாநிலத் தமிழ்ப்பள்ளிகளின் பொங்கல் விழாவும் செங்காளன் தமிழ்ப்பள்ளி மற்றும் சென்மார்க்கிறேத்தன் தமிழ்ப்பள்ளி ஆகியவற்றின் வெள்ளிவிழாவும் 02.02.2020 அன்று மிகச் சிறப்பாக நடைபெற்றது. முன்னாள் பள்ளிமுதல்வர்கள், ஆசிரியர்களுடன் இப்போது பணியாற்றும் மாநில இணைப்பாளர், பள்ளிமுதல்வர்கள், துணைமுதல்வர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர்கள் என அரங்கம் நிறைந்த மக்களோடு சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் தமிழ்க்கல்விச்சேவை சார்பாக ஒருங்கிணைப்பாளர், நிர்வாகக்குழுத் தலைவர், விளையாட்டுத்துறைப் பொறுப்பாளர் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர். SPD கட்சியின் செங்காளன் மாநிலங்கள் அவை உறுப்பினர் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றினார்.


பன்முக ஆளுமை கொண்ட நித்தியானந்தன் அவர்களுக்கு சேவை நலன் பாராட்டு விழா நடைபெற்றது! Top News
[Friday 2020-02-21 17:00]

வவுனியா தவசியா குளம் அ.த.க பாடசாலையின் அதிபர் திரு நித்தியானந்தன் அவர்களுக்கு 20.02.2020 அன்று சேவை நலன் பாராட்டு விழா பாடசாலை உப அதிபர் திருமதி மகேஸ்வரி பாலச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்வில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன்,முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் இந்திரராசா,வவுனியா வடக்கு பிரதேச சபை தவிசாளர் தனிகாசலம்,அயல் பாடசாலை அதிபர்கள்,வலயக்கல்வி பணிமனையின் பிரதிநிதிகள்,வவுனியா வடக்கு பிரதேச சபை உறுப்பினர் ஜெயரூபன்,வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியலாயத்தின் ஓய்வு பெற்ற அதிபர் திரு பத்மநாதன்,தவசியாகுளம் அ.த.க பாடசாலையில் ஆசிரியர்கள்,பெற்றோர்கள்,மாணவர்கள்,பழைய மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டு திரு நித்தியானந்தன் அவர்களுக்கு நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்தனர்.


பிப்ரவரி 22,23,29-ம் திகதிகளில் இலண்டன், டொரோண்டோ திரைகளில் பொய்யா விளக்கு! Top News Top News
[Thursday 2020-02-20 17:00]

பொய்யா விளக்கு திரைப்படத்தினை உலகின் பல பாகங்களிலும் திரையிடும் முன்னெடுப்புகளை வெண்சங்கு கலைக்கூடம் ஆரம்பித்துள்ளது. இது தொடர்பான தொடர்ச்சியான தகவல்களை வாரம் தோறும் தமிழ் ஊடக நண்பர்களுக்கு ஒவ்வொரு புதன் கிழமையும் தொடர்ச்சியாக வழங்க இருக்கிறோம். இந்தத் திரைப்படத்தினை அடுத்த தலைமுறை மற்றும் பிற சமூகத்தினருக்கும் கொண்டு சேர்ப்பதற்கான பெரு முயற்சிகளை இந்த வருட பிற்பகுதியில் எடுக்க உள்ளோம். தற்போது புலம் பெயர் தமிழ் மக்களின் ஆதரவு இதற்குத் தேவைப்படுகிறது. சென்ற கிழமை Toronto, இலங்கை தமிழ் சங்க ஆதரவில் New Jersey, மற்றும் New York ஆகிய நகரங்களில் பொய்யாவிளக்கு திரையிடப்பட்டது. பார்த்தவர்களால் பெரிதும் நன்றியுடன் பாராட்டினை பெற்றது.


அபுதாபியில் நடந்த ஓட்டப் போட்டியில் முதல் இடம் பெற்ற தமிழர்! Top News
[Wednesday 2020-02-19 09:00]

அபுதாபி : அபுதாபியில் அக்ட்வெட் டாக் ரன் என்ற ஓட்டப்போட்டி கடந்த 10.02.2020 அன்று நடைபெற்றது. இந்த ஓட்டப்போட்டியில் தமிழகத்தின் நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்த செய்யது அலி என்ற இளைஞர் முதல் இடத்தை பெற்றார். இவர் 5 கிலோ மீட்டர் போட்டியில் முதல் இடத்தை பெற்றார்.


சுதந்திரத்திற்கான விருந்து: விருந்து மூலம் தஞ்சக்கோரிக்கையாளர்களுக்கு உதவும் முயற்சி! Top News
[Monday 2020-02-17 07:00]

புதிய உணவு ருசித்து, புதிய கலாச்சாரங்களை அறிந்து தஞ்சம் கோருபவர்களுக்கு நிதி சேகரிக்கும் நோக்கத்தில் விருந்து ஏற்பாடு செய்யப்படுகின்றது. தனது தாயகமான ஈரானிலிருந்து வெளியேறுவதற்கு முன்னர், ‘ஹமித் அல்லாஹயரி’ டெஹ்ரானில் பாரம்பரிய உணவகத்தை நடத்தி வந்தார். ஆஸ்திரேலியாவின் மெல்பேர்ன் நகரில் புதிய வாழ்க்கையை ஹமித் தொடங்கியபோது, சமையல் கலைஞராக பணியாற்ற 50 உணவகங்களுக்கு மேல் பார்வையிட்டிருக்கிறர். ஆனால், அவருக்கு சமையலறையை பராமரிக்கும் வேலையே கிடைத்திருக்கிறது. இந்த நிலையில், தஞ்சக்கோரிக்கையாளர் வள மையத்தில் தன்னார்வ ரீதியாக 250 பேருக்கு சமைக்கும் பணியை மேற்கொண்டிருக்கிறார் ஹமித். இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு, சமையலறை மேலாளராக பதவி உயர்வு பெற்ற ஹமித் இன்று கேட்டரிங் நிறுவனத்தை நடத்தும் நிலைக்கு உயரந்திருக்கிறார்.


கனடா தமிழர் தகவல் 29வது ஆண்டு விருது விழாவும் இளமதிச் சுவடு மலர் வெளியீடும்!.. Top News
[Sunday 2020-02-16 19:00]

கனடாவிலிருந்து 29 ஆண்டுகளைக் கடந்து வெளிவரும் கனடிய மூத்த தமிழ் இதழான தமிழர் தகவலின் 29வது ஆண்டு விருது விழா இந்த மாதம் (பெப்ரவரி) 9ம் திகதி ரொறன்ரோ நகரசபையின் அங்கத்தவர் சபாபீடத்தில் நடைபெற்றது. அரச அவை போன்று காட்சியளித்த இம்மண்டபம் பார்வையாளர்களால் நிரம்பியிருந்தது. முன்னாள் நகரசபை உறுப்பினரும் கல்விச்சபை உறுப்பினருமான திரு. நீதன் சண்முகராஜா தலைமையில் இவ்விழா நடைபெற்றது. கனடாவில் ஒவ்வொரு ஜனவரி மாதத்தையும் தமிழர் மரபுரிமை மாதமாக பிரகடனம் செய்யும் மசோதாவை 2014ம் ஆண்டு ஒன்ராறியோ பாராளுமன்றத்தில் முன்மொழிந்து அதனைச் சட்டமாக்கிய தற்போதைய சமூகசேவைகள் அமைச்சர் திரு. ரொட் சிமித் இவ்விழாவில் பிரதம விருந்தினராகப் பங்குபற்றி தமிழர்களின் விசேட சிறப்புகளையும் அவர்கள் தங்கள் விழுமியங்களை பாதுகாப்பதில் காட்டும் அக்கறையையும் எடுத்துரைத்தார். இவருக்கு இவ்விழாவில் ஷசரித்திரம் படைத்தவர்ஷ விருது (ர்ளைவழசல ஆயமநச யுறயசன) வழங்கி கௌரவம் செய்யப்பட்டது.


சர்வதேச ரீதியில் நடாத்தப்பட்ட Google Code-In 2019 போட்டியில் Grand Prize Winner பட்டத்தை வென்ற யாழ் மாணவன்!
[Wednesday 2020-02-12 07:00]

நித்தியானந்தன் மாதவன் சர்வதேச ரீதியில் Google Code-In 2019 போட்டியில் Grand Prize Winner பட்டத்தை வென்றுள்ளார். யாழ் இந்துக் கல்லூரியில் உயிரியல் பிரிவில் கல்வி கற்கும் மாணவன் நித்தியானந்தன் மாதவன் சர்வதேச ரீதியில் நடாத்தப்பட்ட Google Code-In 2019 போட்டியில் Grand Prize Winner பட்டத்தை வென்றுள்ளார்.


டொரோண்டோ - மற்றும் நோர்வேயில் "பொய்யா விளக்கு" திரையிடல் - மருத்துவர் வரதராஜாவின் உண்மைக் கதை! Top News Top News
[Wednesday 2020-02-12 07:00]

11வது நோர்வே தமிழ்த் திரைப்பட விழாவுக்கு பல படைப்புகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் ஈழத்தின் கதை பேசும் திரைப்படம். "பொய்யா விளக்கு" திரையிடல் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 16.02.2020, டொரோண்டோ - மற்றும் நோர்வேயில் பொய்யா விளக்கு. எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 16ம் திகதி கனடா டொரோண்டோவில் Woodside Square Cinemas, 1571 Sandhurst Cir, Scarborough திரை அரங்கில் மதியம் 1:30 மணி பிற்பகல் மற்றும் நோர்வேயில் "Rommen Scene " திரையரங்கில் மாலை 17.00 மணிக்கும் திரையிடல் நடைபெற உள்ளது .


கனடா டொரோண்டோவில் 2வது தமிழர் மரபு மாநாடு 2020 சிறாப்பாக நடைபெற்றது! Top News
[Tuesday 2020-02-11 17:00]

கடந்த சனிக்கிழமை பிப்ரவரி 1ம் தேதி கனடா டொரோண்டோவில் 2வது தமிழர் மரபு மாநாடு 2020 மிகவும் சிறப்பாக நடைபெற்றது. அன்று மிக அதிகமாகப் பனிப்பொழிவு இருந்த போதிலும் சுமார் 800க்கும் மேற்பட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மாநாட்டினை சிறப்பித்தனர். மாநாடு சரியாக மாலை 6:00 மணியளவில் கனடிய தேசியகீதம், தமிழ் மொழி வாழ்த்து பாடல்களை கனடா அன்னைத் தமிழ் ஒன்றிய குழந்தைகள் பாட, அடுத்து தமிழ்த் தாய் வாழ்த்து பாடலை கனடா தமிழ்ச் சங்கத்தின் மகளிர், குழந்தைகள் குழு பாடியதும், ஒரு நிமிடம் உலக மக்கள் சமாதானதிற்காக மௌனம் அனுசரிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து கலை நிகழ்ச்சிகள் முதல் பகுதியாகவும் இலக்கிய நிகழ்ச்சிகள் இரண்டாம் பகுதியாகவும் மாநாடு நடைபெற்றது. 150க்கும் மேற்பட்ட நிகழ்ச்சி பங்கேற்பாளர்கள் இந்த நிகழ்ச்சிகளில் பங்குபெற்றது மாநாட்டின் சிறப்பு. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இந்தியாவில் இருந்து பிரபல அரசியல் தலைவரும், இலக்கியவாதியுமான "நளினச் சொல் நாயகர்" திரு.நாஞ்சில் சம்பத் அவர்களும், விஜய் தொலைக்காட்சி புகழ் நடிகர் மற்றும் நாட்டிய கலைஞருமான திரு.அமுதவாணன் அவர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.


‘குக்கூவென...’ ஹைக்கூ கவிதை குறுநூல் வெளியீட்டு விழாவில் மேனாள் மருத்துவ இணை இயக்குநர் பேச்சு! Top News
[Monday 2020-02-10 17:00]

வந்தவாசி.09. வந்தவாசியை அம்மையப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த கவிஞர் மு.முருகேஷ் எழுதிய ‘குக்கூவென...’ ஹைக்கூ கவிதை குறுநூல் வெளியீட்டு விழாவில் மேனாள் மருத்துவ இணை இயக்குநர் டாக்டர் எஸ்.குமார் பேசும்போது, “அன்றாடம் செய்தித்தாளையும் புத்தகங்களையும் படிப்பதே ஒரு மனிதனின் சமூக அக்கறைக்கு அடித்தளமிடும் செயலாகும்” என்று குறிப்பிட்டார். வந்தவாசி அரசுக்கிளை நூலகத்தின் நூலக வாசகர் வட்டமும் வந்தவாசி ரோட்டரி சங்கமும் இணைந்து நூலக வாசகர் வட்டத் தலைவர் கவிஞர் மு.முருகேஷ் எழுதிய உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பெறுவதற்கான ‘குக்கூவென...’ 4.8 செ.மீ உயரமும், 4.5 செ.மீ அகலமும் கொண்ட மிகச் சிறிய ஹைக்கூ கவிதை குறுநூல் வெளியீட்டு விழா வந்தவாசி நூலகத்தில் நடைபெற்றது. இவ்விழாவிற்கு வந்தை வட்டக் கோட்டைத் தமிழ்ச் சங்கத் தலைவர் அ.மு.உசேன் தலைமையேற்றார்.


ஶ்ரீலங்காவின் சுதந்திரதினத்தை புறக்கணித்து லண்டனில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்! Top News
[Thursday 2020-02-06 08:00]

இலங்கை சிங்கள அரசின் 72 ஆவது சுதந்திர தினமானது தமிழ் மக்களின் கரி நாளாக 04/02/2020 அன்று அனுஷ்டிக்கபட்டது. உலகளாவிய ரீதியில் பல்வேறு விதமான ஆர்ப்பாட்டங்களினை தமிழ் மக்கள் நடாத்தினர். இதில் குறிப்பாக பிரித்தானியாவில் இலங்கை தூதரகத்திற்கு முன்னால் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம், தமிழர் ஒருங்கிணைப்பு குழு மற்றும் தமிழ் சொலிடரிடி ஆகிய அமைப்புக்கள் இணைந்து காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை பாரிய போராட்டத்தினை ஏற்பாடு செய்திருந்தனர். இப்போராடத்தில் பெருந்திரளான பொதுமக்கள், புத்திஜீவிகள், செயற்பாட்டாளர்கள் போராட்டத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரை கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. தமிழீழம் கேட்பவர்களை பயங்கரவாதிகள் என முத்திரை குத்தி அவர்களை கொன்றொழிப்பதிலேயே இலங்கை அரசாங்கம் சுதந்திரம் அடைந்த காலத்திலிருந்து செய்து வருகின்றது.


வெங்கலச் செட்டிக்குளம், பிரதேச செயலகமும் கலாசார அலுவல்கள் திணைக்களமும் இணைந்து நடாத்திய தைத்திருநாள் விழா! Top News
[Monday 2020-02-03 17:00]

வவுனியா வெங்கல செட்டிக்குளம், பிரதேச செயலகமும் கலாசார அலுவல்கள் திணைக்களமும் இணைந்து நடாத்திய தைத்திருநாள் விழா நேற்று வீரபுரம் ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலய அறநெறி மண்டபத்தில் பிரதேச செயலாளர் திரு. க.சிவகரன் தலைமையில் நடைபெற்றது. ஆரம்ப நிகழ்வாக பொங்கல் நிகழ்வும் வழிபாடுகளும் நடைபெற்றன. அதனைத்தொடர்ந்து முட்டி உடைத்தல் கிளித்தட்டு முதலான பல பாரம்பரிய விளையாட்டுக்களும், கலை நிகழ்வுகள் சொற்பொழிவுகள் இடம்பெற்றன.


வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் குறித்து சிறிலங்கா ஜனாதிபதியின் பொறுப்புத் துறப்பு! பிரித்தானிய மக்கள் ஒன்றுபட்ட கண்டன ஆர்ப்பாட்டம்! Top News
[Friday 2020-01-31 18:00]

நிலைமையின் முக்கியத்துவம் கருதி பிரித்தானிய பிரதமர் அலுவலகத்தின் முன் அமைப்புகள் ஒன்றுபட்டு குறுகிய கால அவகாசத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் உணர்வுடன் கலந்து கொண்டனர். வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தை புறம் தள்ளி பொறுப்புக் கூறலை கைவிட முற்படும் சிறிலங்கா அரசின் செயலைக் கண்டிப்பதுடன் சிறிலங்கா அரசினை “சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில்” அல்லது அதற்கு நிகரான “சர்வதேச நீதிப் பொறிமுறை”ஒன்றின் முன் நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையை போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தமது கோரிக்கையாக முன்வைத்து 29 ஜனவரி 2020 அன்று 4 மணியிலிருந்து 7 மணி வரை பிரித்தானிய பிரதமரின் அலுவலகத்தின் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இவ் ஆர்ப்பாட்டத்தில் தமிழ் தகவல் நடுவம் (TIC), நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் (TGTE), பிரித்தானிய தமிழர் பேரவை (BTF) மற்றும் பல்வேறு புலம்பெயர் அமைப்புகள், பொதுமக்கள் மற்றும் இறுதி யுத்தத்தில் பல இன்னல்களை சந்தித்து சாட்சியாளர்களாக இருப்பவர்கள் உணர்வுடன் கலந்து கொண்டனர். 11 வருடங்களின் முன் இதே தினத்தில் (29 ஜனவரி 2009) தன்னை தற்கொடையாக்கிய தமிழ்நாட்டு உறவு தியாகி முத்துகுமாரனின் நினைவுகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.


யாழ்பாணத்தை ஆண்ட மன்னர்களின் சிலையுடன் “சிவபூமி யாழ்ப்பாணம் அரும்பொருள் காட்சியகம்” உருவாக்கப்பட்டுள்ளது!
[Tuesday 2020-01-28 08:00]

யாழ்பாணத்தை ஆண்ட மன்னர்களின் சிலையுடன் யாழ்ப்பாணத்தின் வரலாற்றில் முதன்முறையாக “சிவபூமி யாழ்ப்பாணம் அரும்பொருள் காட்சியகம்” உருவாக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தின் நுழைவாயிலான நாவற்குழியில் எதிர்வரும் 25 ஆம் திகதி சனிக்கிழமை இந்த அரும்பொருள் காட்சியகம் பொதுமக்கள் பார்வைக்காகத் திறக்கப்படவிருக்கிறது.


லண்டனில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஏற்பாட்டில் சிறப்பாக நடைபெற்ற பொங்கல் விழா! Top News
[Monday 2020-01-27 08:00]

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஏற்பாட்டில் பொங்கல் விழா லண்டனில் நடைபெற்றுள்ளது. ‘தமிழர்களின் தொன்மையான கலை கலாசார பண்பாடுகளை உலகிற்கு பறைசாற்றுவோம்’ என்னும் கருப்பொருளில் ‘தமிழ் மரபுத் திங்கள்’ என்ற பெயரில் இந்த பொங்கல் விழா இடம்பெற்றது. லண்டன், மிடில்செக்ஸ் நகரில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை முதல் மாலை வரை பொங்கல் விழாவும் அதனுடன் கூடிய நிகழ்வுகளும் நடைபெற்றன.


ஆஸ்திரேலியாவில் வெளிநாட்டுத் தொழிலாளர்களை சுரண்டி வந்த சீனர் கைது!
[Saturday 2020-01-25 08:00]

மேற்கு ஆஸ்திரேலியாவில் உணவு பதப்படுத்தும் தொழிலில் வெளிநாட்டுத் தொழிலாளர்களை சுரண்டி வந்ததாக 28 வயது சீனரை ஆஸ்திரேலிய எல்லைப்படை கைது செய்துள்ளது. போலி நிறுவனங்களை உருவாக்கி தொழிலாளர்களை வேலைக்கு எடுப்பது போன்று, அந்நிறுவனங்களைக் கொண்டு 4 மில்லியன் டாலர்கள் பணப்பரிமாற்றத்தை இவர் மேற்கொண்டதாகக் கூறப்படுகின்றது. வெளிநாட்டுத் தொழிலாளர்களை சுரண்டப்பட்டு வரும் நிலையை கட்டுப்படுத்தும் விதமாக மேற்கொள்ளப்பட்டு Battenrun எனும் நடவடிக்கையின் கீழ் இந்நபருக்கு கைதாணை வழங்கப்பட்டு, இந்த சீனர் கைது செய்யப்பட்டுள்ளார்.


மலேசியாவுக்கு செல்ல முயன்ற இந்தோனேசியர்கள் கைது! Top News
[Saturday 2020-01-25 08:00]

இந்தோனேசியாவின் வடக்கு Sebatik பகுதியிலிருந்து மலேசியாவின் சாபா பகுதிக்கு சட்டவிரோதமாக செல்ல முயன்ற 13 இந்தோனேசியர்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். இந்தோனேசியர்கள் மலேசியாவுக்கு சட்டவிரோதமாக செல்வது பற்றி கிடைத்த தகவலின் அடிப்படையில், மலேசியாவை இணைக்கக்கூடிய Sebatik மாவட்டத்தின் Bambangan துறைமுகத்தில் இந்தோனேசிய அதிகாரிகள் விசாரித்துள்ளனர்.


பிரான்ஸ் ஸ்ராஸ்பூர்க் தமிழ்ச்சோலை நடாத்திய பொங்கல் விழா! Top News
[Thursday 2020-01-23 21:00]

பிரான்ஸ் ஸ்ராஸ்பூர்க் நகரில் தமிழ்ச்சோலையின் பொங்கல் விழா 19.01.2020 அன்று ஞாயிற்றுக் கிழமை ஸ்ராஸ்பூர்க் salle de la bourse மண்டபத்தில் காலை 11.30மணி அளவில் ஆரம்பமாகியிருந்தது. வழமைபோன்று கதிரவனுக்கு பொங்கல் பொங்கி படைக்கும் நிகழ்வை தமிழ்ச்சோலை ஆசிரியர் திரு. ம. தலீபராஜா, திருமதி. கன்சிகா தலீபராஜா தம்பதியினர் நடாத்தியிருந்தனர். பிரதமவிருந்தினர்களாக ஸ்ராஸ்பூர்க் நகரமேயர் சார்பாக சூசான் கெம்வ் அவர்கள், பாராளுமன்ற ஆலோசனை உறுப்பினர் திரு.மோறர் அவர்கள், சில்ரிகைம் நகர மேயர் அவர்கள், பச்சைக் கட்சியின் சார்பில் திருமதி. முன்சன்பாக் அவர்கள், அருட்தந்தை கலான் அவர்கள், ஜெர்மனி மற்றும் பெல்ஜியம் நகர தமிழ் உறவுகள் பொங்கல் விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தனர். தமிழ்ச்சோலை மாணவர்களின் எழுச்சி நடனங்கள், கவிதை அரங்கம், காத்தவராயன் கூத்து, பாடல்கள் போன்ற கலை, கலாச்சார, பண்பாட்டு நிகழ்வுகள் அனைத்து மக்களின் கவனத்தையும் ஈர்த்திருந்தது.


வைத்தியசாலைகளை மேம்படுத்த முதலீடு செய்யும் ஒன்ராரியோ அரசு! Top News Top News
[Thursday 2020-01-23 08:00]

ஒன்ராரியோ அரசு முக்கியமாக வைத்தியசாலைகளின் மேம்படுத்தலுக்கும் மற்றும் திருத்த வேலைகளுக்கும் முதலீடுகளைச் செய்கின்றது. ஒன்ராரியோ மாகாணத்திலுள்ள நோயாளிகளின் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பை பேணுவதற்காக 131 வைத்தியசாலைகளை விரைந்து நவீனமயப்படுத்துவதற்காக ஒன்ராரியோ அரசினால் முதலீடு மேற்கொள்ளப்படுகிறது. சென்ரநெறி வைத்தியவளாகத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் MPP Vijay Thanigasalam அவர்களுடன் இணைந்து MPP Raymond Cho வும் MPP Aris Babikian னும், நோயாளிகளின் சுகாதார மற்றும் பாதுகாப்பை மேம்படுத்தும் முகமாக Scarborough வலயத்திற்கு $ 5,923,465 தொகை முதலிடப்பட்டுள்ளதாக அறிவித்திருந்தார்கள்.


தமிழர் தாயகத்தில் பண்பாட்டு எழுச்சி வடிவமாக அமைந்த தமிழர் திருநாள்! Top News
[Tuesday 2020-01-21 09:00]

இலங்கைத்தீவின் தமிழர் தாயகப் பகுதியில் தமிழர் தேசத்தின் பண்பாட்டு அரசியலின் எழுச்சிவடிமாக 'தமிழர் திருநாள்' நிகழ்வுகள் சிறப்பாக இடம்பெற்றுள்ளன. யாழ் முற்றவெளியில் இடம்பெற்றிருந்த இந்நிகழ்வானது தமிழர் தாயக உறவுகள், மலையக உறவுகள் அனைவரதும் பொதுப் பொங்கலிடலாக 108 பானைகள் வைக்கப்பட்ட தமிழர் திருநாளாக அமைந்திருந்தது. இதனை தமிழ் இளையோர் மக்கள் இயக்கத்தின் ஏற்பாட்டு செய்திருக்க,வடக்கு, கிழக்கு மற்றும் மலையக இளைஞர்கள் ஒருங்கிணைத்திருந்தனர்.2009ம் ஆண்டுக்கு முன்னர் கிளிநொச்சி பகுதியில் தமிழர் தரப்பினால் பண்பாட்ட எழச்சி நிகழ்வாக முன்னெடுக்கப்பட்டிருந்தது. 2009க்கு பின்னராக தற்போது பத்து ஆண்டுகளின் பின் தற்போது கூட்டுப்பொங்கலாக இது அமைந்துள்ளது. யாழ்பாணத்துக்கு சுற்றுலாச்சென்றிருந்த பல வெளிநாட்டினரும் உற்சாகத்தோடு, தமிழர் திருநாள் நிகழ்வில் பங்கெடுத்துள்ளனர். பண்பாட்டு தளத்தில் தமிழர்களாய் ஒருங்கிணைவது காலத்தின் கட்டயமாக அமைந்துள்ளதோடு, பண்பாட்டு எழுச்சியே தமிழர்களின் அரசியல் எழச்சிக்கும் சமூக விழிப்புக்கு அவசியமாக உள்ளது என 'தமிழர் திருநாள்' ஏற்பாட்டுக்குழு தெரிவித்துள்ளது.


டயகம பகுதியில் பெற்றெடுத்த சிசுவை வீசி எறிந்த தாயை தேடி பொலிஸார் வலை விரிப்பு! Top News
[Sunday 2020-01-19 08:00]

டயகம பகுதியில் பெற்றெடுத்து ஆண் சிசுவை வீசி எறிந்த தாய் தேடி பொலிஸார் வலை விரித்துள்ளனர். டயகம பொலிஸ் பரிவுக்குட்பட்ட டயகம வேவர்லி தோட்டத்திற்கு சொந்தமா ஆட்லி பரிவில் நேற்று (18) திகதி மாலை 5.00 மணிளவில் ஆண் சிசு ஒன்றின் சடலம் கண்டு பிடிக்ப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். பற்றை நிறைந்த கால்வாய் பகுதியில் சிசுவின் சடலம் கிடப்பதனை கண்ட பொது மகன் ஒருவர் டயகம பொலிஸாருக்கு அறிவித்ததனை தொடர்ந்தே குறித்த சிசுவின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த சிசு ஓரிரு நாளுக்கு முன் பிறந்துள்ளதாக பொலிஸார் சந்தேகம் தெரிவிக்கின்றனர். குறித்து சிசு யாருடையது என்பது தொடர்பாகவும் இது வரை அடையாளம் காணப்படவில்லை.


ரொரான்ரோ தமிழ் திரைப்பட விழா 2020 பற்றிய அறிவித்தல்! Top News
[Friday 2020-01-17 13:00]

ரொரான்ரோ தமிழ் திரைப்பட விழா இவ்வருடம் (2020) செப்டம்பர் மாதம் (September 11 - 13, 2020) மிகவும் பிரமாண்டமாக நடைபெறவுள்ளது. இதற்கான பணிகள் சகல மட்டங்களிலும் ஆரம்பமாகி திரைப்பட விழாவுக்கான திரைப்படங்களும் பல்வேறு பிரிவுகளில் கோரப்பட்டுள்ளன. உலகில் பல முன்னணி திரைப்பட விழாக்கள் நடைபெற்றாலும், தமிழருக்கான திரைப்பட விழாக்கள் என்பது மிகவும் குறைவானதாகவே காணப்படுகின்றன. இந்திய மற்றும் இலங்கைக்கு அப்பால், தமிழர்கள் அதிகம் வாழும் கனடாவில் இந்நிகழ்வு ஒழுங்குசெய்யப்படுவது மிகவும் சிறப்பானதாக கருதப்படுகின்றது. கனடிய அரசு கனடாவில் வாழும் தமிழர்களை சகல வழிகளிலும் அவர்களது கலை, கலாச்சார நிகழ்வுகளை அங்கீகரித்து, அதற்க்கான சகல ஒத்துழைப்பை வழங்குவதோடு அரசு தலைவர்கள் வரை தமது பங்களிப்பினை சிறப்பாக செய்துவருகின்றார்கள். எனவே, கனடாவில் நடைபெறும் இவ் திரைப்பட விழா, உலக தமிழ் திரைப்படங்களுக்கும், கலைஞர்களுக்கும் மிகப்பெரும் அங்கீகாரமாக அமையும் என்பது உண்மை.


ஓஸ்ரேலியா மெல்பேணில் கேணல் கிட்டு உட்பட பத்து மாவீரர்களின் நினைவான ”தமிழர் விளையாட்டு விழா 2020” பற்றிய செய்தியறிக்கை! Top News
[Friday 2020-01-17 13:00]

வங்கக்கடலில் 16-01-1993 இல் வீரகாவியமாகிய மூத்த தளபதி கேணல் கிட்டு உட்பட பத்து மாவீரர்களின் நினைவாக ஆண்டுதோறும் விக்ரோறியா தமிழர் ஒருங்கிணைப்புக்குழு-வினால் நடாத்தப்படுகின்ற தமிழர் விளையாட்டுவிழா இந்த வருடமும் ஓஸ்ரேலியா மெல்பேர்ண் நகரில் மிகவும் சிறப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. கடந்த 12_01_2020 ஞாயிற்றுக்கிழமையன்று பேர்வூட் றிஸேவ் (East Burwood Reserve) மைதானத்தில் காலை 9.00 மணிமுதல் இரவு 8.00 மணிவரையும் ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் மத்தியில் மிகவும் கோலாகாலமாக நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. காலை 9.00 மணியளவில் தேசியக்கொடியேற்றல்களுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின. முதலில் ஓஸ்ரேலியத் தேசியக்கொடியினை விளையாட்டுவிழா செயற்பாட்டாளர் திரு அருணகிரிநாதன் அவர்கள் ஏற்றிவைக்க, தமிழீழ தேசியக்கொடியை மற்றுமொரு நீண்டகால செயற்பாட்டாளர் திரு அன்ரன் வேதநாயகம் அவர்கள் ஏற்றிவைத்தார். தொடர்ந்து மூத்ததளபதி கேணல் கிட்டு உட்பட பத்து மாவீரர்-களின் திருவுருவப்படத்திற்கு தமிழ் தேசியச் செயற்பாட்டாளர் திரு பரணி அவர்கள் ஈகைச்சுடரேற்றி மலர்வணக்கம் செலுத்தினார். அகவணக்கத்தைத் தொடர்ந்து மைதான விளையாட்டுக்கள் ஆரம்பமாகின. சிறுவர்களுக்கான மெய்வல்லுனர் போட்டிகளில் ஓட்டப்போட்டிகள், சமநிலை ஓட்டம், தவளைப்பாய்ச்சல், தேசிக்காய் கரண்டியில் வைத்து ஓடுதல் அத்தோடு சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரையிலான சங்கீதக்கதிரை என்பனவும் இடம்பெற்றது.


மத்திய மாகாண தமிழ் மாணவர்கள் தரம் 01 உள்வாங்கும் நிகழ்வு ஹட்டன் ஹைலன்ஸ் கல்லூரியில் மிக சிறப்பாக நடைபெற்றது! Top News
[Friday 2020-01-17 09:00]

தரம் 01 மாணவர்களை உள்வாங்கும் நிகழ்வு நாடுகெங்லும் இன்று (16) திகதி முன்னெடுக்கப்பட்டன. தேசிய நிகழ்வு மாத்தளையில் கல்வி அமைச்சர் தலைமையில் நடைபெற்றது. அதற்கு இணையக பல நிகழ்வுகள் பாடசாலைகளில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன. மத்திய மாகாண தமிழ் மாணவர்களை தரம் ஒன்றுக்கு உள்வாங்கும் நிகழ்வு இன்று (16) ஹைலன்ஸ் கல்லூரியில் ஹட்டன் வலயக் கல்விப்பணிப்பாளர் பி.ஸ்ரீதரன் தலைமையில் கல்லூரியின் அதிபர் ஆர்,ஸ்ரீதரன் அவர்களின் ஏற்பாட்டில் மிக சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் அதிதிகள் மற்றும் தரம் 01 மாணவர்கள் பேண்ட் வாத்தியங்கள் முழங்க ஹட்டன் பாடசாலையின் பிரதான மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டன. அதனை தொடர்ந்து மாணவர்கள் மகிழ்ச்சி படுத்தும் வகையில் பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.

Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Vaheesan-Remax-2016
Kugeenthiran-200-2022-seithy
Karan Remax-2010
Asiaan-Salon-2022-seithy
 gloriousprinters.com 2021
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா