Untitled Document
November 3, 2026 [GMT]
 
மட்டன் பிரியாணியை மிஞ்சும் வித்தியாசமான முட்டை புலாவ்!
[Wednesday 2026-10-28 15:00]

மட்டன் பிரியாணியை மிஞ்சும் சுவையில் முட்டையை வைத்து வித்தியாசமான புலாவ் எவ்வாறு செய்யலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். பொதுவாக மதிய உணவாக சாதம், பிரியாணி, புலாவ் என்று சாப்பிடும் நிலையில், புலாவ் பிரியர்களுக்கு சற்று வித்தியாசமான முறையில் முட்டையை வைத்து புலாவ் செய்து அசத்தலாம். அதாவது மட்டன் பிரியாணி சுவையை விட அசத்தலான சுவையில் முட்டையை வைத்து வித்தியாசமான புலாவ் எவ்வாறு செய்யலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.

தீபாவளி ஸ்பெஷல்: பச்சை மிளகாய் தயிர் முறுக்கு!
[Tuesday 2026-11-03 16:00]

தீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில் பச்சை மிளகாய் தயிர் முறுக்கு எவ்வாறு செய்வது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். பொதுவாக தீபாவளி பண்டிகை வந்துவிட்டாலே புதிய ஆடை, பட்டாசு என்று தான் குழந்தைகளுக்கு ஞாபகம் வரும். ஆனால் பெரியவர்கள் பலகாரம் செய்வதை குறித்து தான் யோசித்துக் கொண்டிருப்பார்கள். இன்றைய காலத்தில் பெரும்பாலான மக்கள் பலகாரங்களை வீட்டில் செய்யாமல் கடையிலேயே வாங்கி முடித்து விடுகின்றனர். ஆனால் நமது வீட்டு பெரியவர்கள் வீட்டில் மட்டுமே செய்து குழந்தைகளுக்கு கொடுத்தனர்.


இதயத்தை ஆரோக்கியமாக வைக்க வேண்டுமா? - பூசணி விதை செய்யும் அற்புதம்!
[Monday 2026-11-02 16:00]

ஆரோக்கியத்தை அள்ளிக்கொடுக்கும் பூசணி விதையினை 30 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டால் என்னென்ன அற்புதங்கள் நடக்கும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். இன்றைய காலத்தில் மக்கள் தங்களது உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதற்கு முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர். இதனால் சத்துக்கள் நிறைந்த உணவுகளை தவறாமல் எடுத்துக் கொள்ள அதிகமாக ஆர்வம் காட்டி வருகின்றனர். அவ்வாறு சத்தான உணவுகளில் ஒன்று தான் பூசணி விதை ஆகும். பூசணி விதையில் புரதச்சத்து, நார்ச்சத்து, மக்னீசியம், இரும்புச்சத்து மற்றும் நல்ல கொழுப்புகள் போன்றவை இருக்கின்றது.


தீபாவளி ஸ்பெஷல் நெய் மைசூர் பாக்!
[Sunday 2026-11-01 18:00]

தீபாவளி பலகாரமாக நெய் மைசூர் பாக் கடையில் வாங்காமல் வீட்டிலேயே எவ்வாறு செய்யலாம் என்பதை தெரிந்து கொள்வோம். தீபாவளி நெருங்கும் நிலையில் மக்கள் வீட்டில் இனிப்பு வகைகளை செய்ய யோசனை செய்து வருகின்றனர். பொதுவாக தீபாவளி என்றாலே முதலில் நினைவிற்கு வருவது பட்டாசு, புத்தாடை, இனிப்பு மற்றும் கார பலகாரங்கள் தான்.


முருங்கைக்கீரை கொள்ளு குழம்பு: எடையை குறைக்க சரியான ரெசிபி!
[Saturday 2026-10-31 16:00]

முருங்கைக்கீரையுடன் கொள்ளு சேர்த்து குழம்பு எவ்வாறு வைப்பது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். பொதுவாக முருங்கைக்கீரையில் எண்ணற்ற சத்துக்கள் அடங்கியிருக்கின்றது. ரத்த குறைபாடு உள்ளவர்களுக்கு சிறந்த உணவாக முருங்கை கீரை இருக்கின்றது. இதில் இரும்புச்சத்து மட்டுமின்றி வைட்டமின்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகளும் அதிகமாக இருக்கின்றது. உடம்பிலுள்ள நச்சுக்களை நீக்குவதுடன், எலும்பு மற்றும் இதய ஆரோக்கியத்தினையும் மேம்படுத்துகின்றது.


செட்டிநாடு ஸ்டைலில் வெங்காய ரசம்!
[Friday 2026-10-30 16:00]

ரசம் விரும்பி சாப்பிடுபவர்களுகள் செட்டிநாடு ஸ்டைலில் வெங்காய ரசம் எவ்வாறு செய்து சாப்பிடலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். பொதுவாக வீடுகளில் சமையல் என்றால் அங்கு ரசமும் கட்டாயமாகவே இருக்கும். ஆனால் சிலருக்கு ரசம் என்பது பிடிக்காத உணவாகவும் இருக்கின்றது. ஆனால் ரசம் உடலில் பல நோய்களுக்கு தீர்வாகவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்வதில் ரசம் முக்கியமானதாக இருக்கின்றது. எப்பொழுதும் மிளகு, சீரகம், பூண்டு, தக்காளி இவற்றினை சேர்த்து ரசம் வைக்கும் நிலையில், தற்போது வெங்காய ரசம் எவ்வாறு செய்யலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.


ஹோட்டல் சுவையில் சின்ன வெங்காய சட்னி வேண்டுமா?
[Thursday 2026-10-29 16:00]

இட்லி, தோசை, ஊத்தப்பம் போன்ற தென்னிந்திய உணவுகளுக்கு ஹோட்டலில் பரிமாறப்படும் சுவையான சின்ன வெங்காய சட்னியின் சுவை பெரும்பாலானவர்களுக்கு பிடிக்கும். அதே சுவையில் வீட்டிலேயே எளிதாகத் சின்னவெங்காய சட்னி தயாரிக்கலாம் என்பது உங்களுக்குத் தெரியுமா? சின்ன வெங்காயத்தின் இயற்கையான இனிப்புச் சுவையுடன், வரமிளகாயின் காரமும், புளியின் புளிப்பும் கலந்து இந்தச் சட்னிக்கு தனித்துவமான சுவையை கொடுக்கின்றது.


தீபாவளிக்கு குலாப் ஜாமூன் செய்யப் போறீங்களா? - உருளைக்கிழங்கில் கூட செய்யலாம்!
[Tuesday 2026-10-27 16:00]

உருளைக்கிழங்கினை வைத்து குலாப் ஜாமூன் ரெசிபி எவ்வாறு செய்வது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். இந்தியாவில் மிகவும் முக்கிய பண்டிகையாக இருக்கும் தீபாவளி இன்னும் சில வாரங்களில் கொண்டாடப்படுகின்றது. தீபாவளி வந்துவிட்டாலே பலகாரம் செய்வதற்கு ஏற்பாடுகளை வீட்டில் செய்ய ஆரம்பித்துவிடுவார்கள். இவ்வாறு செய்யப்படும் இனிப்பு வகைகளில் குலாப் ஜாமூன் ஆகும். அவ்வாறான குலாப் ஜாமூன் உருளைக்கிழங்கில் எவ்வாறு செய்வது என்பதை தெரிந்து கொள்வோம்.


காபி அருந்துவதால் உடல் கொழுப்பு குறையுமா?
[Monday 2026-10-26 16:00]

பெரும்பாலான நபர்களுக்கு மிகவும் பிடித்த பானமாக காபி திகழ்கின்றது. காபி குடிக்காம நாளே விடியாது' என சொல்லும் நபர்கள் தான் அதிகம் இப்படி உலகம் முழுவதும் காபி பிரியர்கள் ஏராளம். இதற்கு மிக முக்கிய காரணம் காபி குடித்தவுடன் உடலுக்கு கிடைக்கும் அதீத புத்துணர்வு தான். காபியில் இருக்கும் காபீன் எனும் வேதிப்பொருள் தான் இரத்தத்தில் ஆண்டி ஆக்ஸிடண்ட்களை அதிகரித்து காபியை குடித்தவுடனேயே உடனடியாக இரத்த செல்களுக்கு புத்துணர்வு வழங்கி நமது மூளையில் சுறுசுறுப்பு உணர்வை தூண்டுகின்றது.


கிராமத்து ஸ்டைல் மட்டன் மிளகாய் தொக்கு: எப்படி செய்யனும் தெரியுமா?
[Sunday 2026-10-25 17:00]

சுவையான மட்டன் மிளகாய் தொக்கு கிராமத்து ஸ்டைலில் எப்படி செய்வது என்று இந்த பதிவில் விரிவாக காணலாம். பொதுவாக அசைவ பிரியர்களின் உணவுப்பட்டியலில் அதிகமாக இருக்கும் உணவு என்றால் அது மட்டன் தான். அதிக சத்துக்களை கொண்ட மட்டனை மிகவும் வித்தியாசமாக சமைத்து சாப்பிடுவதை தான் பலரும் விரும்புகின்றனர். சாதாரணமாக குழம்பு வைப்பதை விட, சுக்கா, வறுவல் என சமைப்பதையே விரும்புகின்றனர். குறிப்பாக இந்த வறுவலுக்கு தனியாக மசாலா வறுத்து அரைத்து செய்வதால், சுவை வேற லெவலில் இருக்கும்.


மீந்து போன சாதத்தில் சப்பாத்தி செய்யலாமா?
[Saturday 2026-10-24 15:00]

வீட்டில் மீதமான சாதத்தில் அசத்தலான சப்பாத்தி எவ்வாறு செய்யலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். பொதுவாக வீட்டில் சாதம் மீதமாகிவிட்டால் அதில் தண்ணீர் ஊற்றி வைத்துவிட்டு பழைய சாதமாக மாற்றி சாப்பிடும் வழக்கம் நம்மில் பலரிடம் இருந்து வருகின்றது. அவ்வாறு இல்லையெனில் மீதமான சாதத்துடன் சில பொருட்களை சேர்த்து மிக்ஸியில் அரைத்து அதனை வடகமாகவும் செய்வார்கள்.


மழைகாலத்தில் கமகமக்கும் நண்டு மசாலா: செட்டிநாடு சுவையில் எப்படி செய்வது?
[Friday 2026-10-23 16:00]

மழைக்காலத்திற்கு ஏற்ப நண்டு மசாலா செட்டிநாடு ஸ்டைலில் எவ்வாறு செய்யலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். பொதுவாக மழைக்காலம் வந்துவிட்டால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சளி, இருமல் இவற்றினால் அவதிப்படுவார்கள். இவ்வாறு சளி மற்றும் இருமலுக்கு சிறந்த நிவாரணம் அளிக்கும் உணவாக நண்டு இருக்கின்றது. நண்டு சூப் மட்டுமின்றி நண்டு மசாலாவும் மழைக்காலத்திற்கு ஏற்ற உணவாக இருக்கின்றது. செட்டிநாடு ஸ்டைலில் நண்டு மசாலா எவ்வாறு செய்வது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.


உள்ளிருந்து கூந்தலைப் பராமரிக்க உதவும் 6 ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள்!
[Thursday 2026-10-22 16:00]

அழகான, அடர்த்தியான மற்றும் வலிமையான கூந்தலைப் பெற வேண்டும் என்பது பலரின் விருப்பம். ஆனால், கூந்தலின் ஆரோக்கியம் என்பது நாம் பயன்படுத்தும் எண்ணெய்கள், ஷாம்புகள் மற்றும் தலைமுடிப் பராமரிப்புப் பொருட்களை மட்டும் சார்ந்ததல்ல. நாம் அன்றாடம் உட்கொள்ளும் உணவுகளும் கூந்தலின் வளர்ச்சியிலும் வலிமையிலும் முக்கியப் பங்கு வகிக்கின்றன. கூந்தல் வளர்ச்சிக்குத் தேவையான புரதம், வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் உடலுக்குக் கிடைப்பது அவசியம்.


கேஸ் அடுப்பின் அருகில் வைக்கக்கூடாத 6 பொருட்கள்!
[Wednesday 2026-10-21 16:00]

வாஸ்து சாஸ்திரத்தின்படி, வீட்டின் செல்வம், அமைதி மற்றும் நிம்மதியைப் பராமரிப்பதில் சமையலறைக்கு முக்கியப் பங்கு உள்ளது. சமையலறையில் நெருப்பின் ஆதாரமாக இருக்கும் கேஸ் அடுப்பின் அருகில் சில பொருட்களை வைப்பதைத் தவிர்க்க வேண்டும் என்று கூறப்படுகிறது. வாஸ்து நம்பிக்கைகள் மட்டுமின்றி, பாதுகாப்பு மற்றும் சுகாதாரக் காரணங்களுக்காகவும் சில பொருட்களை அடுப்பிலிருந்து தள்ளி வைப்பது அவசியம்.


தினமும் எலுமிச்சை நீர் அருந்துவது நல்லதா?
[Tuesday 2026-10-20 17:00]

பொதுவாகவே பலரும் தங்களது நாளை ஒரு கிளாஸ் எலுமிச்சை நீர் அருந்துவதன் மூலம் தொடங்குகின்றனர். எலுமிச்சையில் வைட்டமின் சி சத்து நிறைந்துள்ளதுடன், தண்ணீர் உடலில் நீர்ச்சத்தைப் பேணவும் உதவுகிறது. தினமும் மிதமான அளவில் எலுமிச்சை நீர் அருந்துவது ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தின் ஒரு பகுதியாக கருதப்படுகின்றது. குறிப்பாக, உடலுக்குத் தேவையான நீர்ச்சத்தைப் பேணுவதற்கு இது பெரிதும் துணைப்புரிகின்றது.


ஒருமுறை மட்டன் சுக்கா இப்படி செய்து பாருங்க!
[Monday 2026-10-19 15:00]

மட்டன் சுக்கா தேங்காய் சேர்த்து எப்படி செய்வது என்று இந்த பதிவில் விரிவாக காணலாம். பொதுவாக அசைவ பிரியர்களின் உணவுப்பட்டியலில் அதிகமாக இருக்கும் உணவு என்றால் அது மட்டன் தான். அதிக சத்துக்களை கொண்ட மட்டனை மிகவும் வித்தியாசமாக சமைத்து சாப்பிடுவதை தான் பலரும் விரும்புகின்றனர். சாதாரணமாக குழம்பு வைப்பதை விட, சுக்கா, வறுவல் என சமைப்பதையே விரும்புகின்றனர். குறிப்பாக இந்த வறுவலுக்கு தனியாக மசாலா வறுத்து அரைத்து செய்வதால், சுவை வேற லெவலில் இருக்கும்.


நோயெதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும் நெல்லிக்காய்!
[Saturday 2026-10-17 17:00]

உடலின் இயற்கையான நோயெதிர்ப்பு மண்டலம் சிறப்பாகச் செயல்படுவதற்கு, சத்தான உணவுகளை அன்றாட உணவுப் பழக்கத்தில் சேர்த்துக்கொள்வது முக்கியப் பங்கு வகிக்கிறது. அந்த வகையில், உடலுக்குத் தேவையான பல்வேறு ஊட்டச்சத்துகளை வழங்கும் இயற்கை உணவுகளில் நெல்லிக்காய்க்கு தனித்துவமான இடம் உண்டு. சிறிய அளவில் காணப்பட்டாலும், நெல்லிக்காயில் வைட்டமின் சி, பாலிஃபீனால்கள், ஃபிளாவனாய்டுகள் மற்றும் டானின்கள் போன்ற உடலுக்கு நன்மை பயக்கும் சேர்மங்கள் நிறைந்துள்ளன.


தொப்பையை கரைக்கும் சௌசௌ காய் குழம்பு!
[Friday 2026-10-16 16:00]

பொதுவாகவே காய்கறிகள் மற்றும் பழங்கள் பல்வேறு ஊட்டச்சத்துக்களையும், ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டுள்ளன. அந்த வகையில், சௌசௌ காயிலும் ஏராளமான நன்மைகள் நிறைந்துள்ளன. குறிப்பாக, கலோரிகள் குறைவாகவும், நார்ச்சத்து நிறைந்தும் இருப்பதால், உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்களுக்கு சௌசௌ ஒரு சிறந்த உணவுத் தேர்வாகும். மேலும், இதில் உள்ள ஃபோலேட் (வைட்டமின் B9) உள்ளிட்ட சத்துக்கள் புதிய ரத்த அணுக்கள் உருவாகவும் உதவுகின்றன. இத்தனை நன்மைகள் நிறைந்த சௌசௌ காயை வைத்து, சுவையான பொரிச்ச குழம்பை எளிமையாக எப்படிச் செய்வது என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்!


நாவூரும் சுவையில் காரசாரமான பூண்டு ஊறுகாய்!
[Thursday 2026-10-15 16:00]

பொதுவாகவே, நாம் அன்றாடம் சாப்பிடும் உணவுகளுக்கு கூடுதல் சுவையையும், தனித்துவமான மணத்தையும் சேர்ப்பதில் ஊறுகாய்களுக்கு எப்போதுமே ஒரு தனி இடம் உண்டு. எலுமிச்சை ஊறுகாய், அன்னாசி ஊறுகாய், மாங்காய் ஊறுகாய், நெல்லிக்காய் ஊறுகாய் எனப் பலவிதமான ஊறுகாய்கள் இருந்தாலும், ஒவ்வொன்றுக்கும் தனித்துவமான சுவையும் ரசிகர்களும் இருக்கிறார்கள்.


அவித்த முட்டையில் ஆம்லெட் செய்ய முடியுமா?
[Wednesday 2026-10-14 16:00]

முட்டையை அவித்த பின்பு அதனை ஆம்லேட்டாக செய்வது எவ்வாறு என்பதை குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். புரதச்சத்து நிறைந்த முட்டையை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுகின்றனர். அதிலும் முட்டை என்றால் ஆம்லெட் தான் முதலில் நினைவிற்கு வருகின்றது. வீட்டில் என்னதான் சுவையாக குழம்பு இருந்தாலும் அருகில் ஒரு முட்டையை ஆம்லெட் போட்டு வைத்து சாப்பிட்டால் சாப்பாடு 5 நிமிடத்திற்குள் தட்டில் காலியாகிவிடும்.


வீட்டிலேயே சுத்தமான தேங்காய் எண்ணெய் தயாரிப்பது எப்படி?
[Tuesday 2026-10-13 16:00]

தேங்காய் எண்ணெய் என்பது நம் அன்றாட வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்த ஒரு இயற்கையான பொருள். தலைமுடியைப் பராமரிக்கவும், சருமத்தை மென்மையாக வைத்திருக்கவும், சமையலுக்குப் பயன்படுத்தவும் என இது தொன்று தொட்டு பயன்பாட்டில் இருந்து வருகின்றது. நம் பாட்டி, அம்மா காலத்திலிருந்தே வீட்டிலேயே தேங்காய் எண்ணெய் தயாரித்துப் பயன்படுத்தும் பழக்கம் இருந்து வருகிறது. ஆனால் தற்காலத்தில், கடைகளில் கிடைக்கும் தேங்காய் எண்ணெயின் தரம், தயாரிப்பு முறை ஆகியவற்றில் சற்று ஐயம் இருக்கத்தான் செய்கின்றது. அதிக விலை கொடுத்து வாங்கினாலும், இந்த தேங்காய் எண்ணெய் சுகாதாரமான முறையில் தயாரி்கப்படுகின்றதா என்பதும் கவப்படம் அற்றதா என்பதும் சந்தேகம் தான்.


தலையனைக்கு அடியில் பூண்டை வைத்து தூங்கினால் கிடைக்கும் நன்மைகள்!
[Monday 2026-10-12 16:00]

இரவில் தூங்கும் போது பூண்டை தலையனைக்கு அடியில் வைத்து தூங்கினால் கிடைக்கும் நன்மையைக் குறித்து தெரிந்து கொள்வோம். பொதுவாக சமையலுக்கு பழங்காலம் முதலே பூண்டை பயன்படுத்தி வருகின்றனர். ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பின் அடையாளமாக பூண்டு பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இந்தியா, எகிப்து, கிரீஸ் போன்ற பழங்கால மக்கள் பூண்டை ஒரு மருந்தாகவே பார்த்தார்கள். இது நோய் எதிர்ப்பு சக்தியையும் செரிமானத்தையும் அதிகரிக்கும் என்று உறுதியாக நம்புகின்றனர்.


கேரளா ஸ்டைல் சிக்கன் மப்பாஸ்!
[Sunday 2026-10-11 16:00]

அசைவ உணவில் அனைவருக்கும் பிடித்த சிக்கனை வைத்து கேரளா ஸ்டைலில் சிக்கன் மப்பாஸ் எவ்வாறு செய்வது என்பதை தெரிந்து கொள்வோம். அசைவ பிரியர்கள் அதிகமாக விரும்பி சாப்பிடும் உணவுகளில் ஒன்று சிக்கன் ஆகும். சிக்கனை கிரேவி, ப்ரை, 65 என பல விதமாக சமைத்து சாப்பிட்டிருப்போம். ஆனால் கேரள ஸ்டைலில் சற்று வித்தியாசமான ரெசிபியான மப்பாஸ் செய்வது எப்படி என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.


சிக்கனில் ரசம் வைத்து சாப்பிட்டதுண்டா?
[Saturday 2026-10-10 17:00]

அசைவ பிரியர்கள் விரும்பும் சிக்கனில் ரசம் வைப்பது குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். அசைவ பிரியர்களுக்கு விருப்பமாக இருக்கும் சிக்கன் குழம்பு மற்றும் கிரேவி செய்வதை நாம் அவதானித்திருப்போம். சிக்கனை வைத்து ரசம் சமைப்பது குறித்து பலருக்கும் தெரிந்திருக்காது. இந்த பதிவில் சிக்கனில் ரசம் எவ்வாறு செய்வது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.


நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்க ஆசையா?
[Friday 2026-10-09 16:00]

காலை வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாத உணவுகளைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். ஆரோக்கியமாக வாழ்வதற்கு நாம் அன்றாடம் செய்யும் சின்ன சின்ன தவறுகள் கூட தடையாக இருக்கலாம். மேலும் காலை வெறும்வயிற்றில் எடுத்துக் கொள்ளும் உணவுகள் மிகவும் முக்கியமானவைகள். நாம் சாப்பிடும் உணவுகளில் உள்ள சத்துக்கள் உறிஞ்சப்பட்டு, நம்மை ஆரோக்கியமாக வைப்பதில் முக்கியமாகும். இதற்கு சரியான உணவாக தெரிவு செய்வது மிகவும் முக்கியமாகும்.


வெறும் வயிற்றில் எலுமிச்சை தண்ணீர் குடிங்க: உடல் எடை கடகடவென குறையும்!
[Thursday 2026-10-08 16:00]

காலை வெறும்வயிற்றில் வெதுவெதுப்பான எலுமிச்சை தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மையைக் குறித்து தெரிந்து கொள்ளலாம். பொதுவாக காலை எழுந்ததும் நாம் செய்யும் சில செயல்கள் நாள் முழுவதும் நம்மை ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும் வைத்திருக்கின்றது. அதிலும் காலையில் நாம் எடுத்துக் கொள்ளும் பானங்கள் மிக முக்கியமாக இருக்கின்றது. ஆதலால் ஆரோக்கிய பழக்கங்களை நாம் பின்பற்றுவது அவசியம் ஆகும்.


வீடுகளிலே எளிதாக இயற்கையான பன்னீர் தயாரிக்கலாம்!
[Wednesday 2026-10-07 16:00]

பன்னீர் என்பது எல்லோருக்கும் பிடித்தமான உணவாக இருக்கிறது. தொடர்ந்து ஒரே மாதிரியான உணவு சாப்பிடுவதற்கு பன்னீர் ஒரு நல்ல மாற்றமான சத்தான உணவாகவும் இருக்கிறது. அந்த வகையில், வீடுகளிலேயே தண்ணீர் தயாரிப்பது எப்படி என்று பார்ப்போம். அடிகனமான பாத்திரத்தில் முழு கொழுப்புள்ள பாலை ஊற்றி மிதமான தீயில் நன்றாக கொதிக்க விட வேண்டும். பிறகு பால் பொங்கி வரும் பொழுது தீயை குறைத்து விட்டு எலுமிச்சை சாற்றுடன் கொஞ்சம் தண்ணீர் கலந்து அதனை மெதுவாக பாலில் ஊற்ற வேண்டும்.


சூடான சாதத்தில் ஒரு ஸ்பூன் நெய்: கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் என்னென்ன?
[Tuesday 2026-10-06 16:00]

நெய் வெண்ணெயிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட ஒன்றாகும். நெய்யில் கொழுப்பில் கரையும் வைட்டமின்களும் ஆரோக்கியமான கொழுப்பு அமிலங்களும் நிறைந்துள்ளன. சூடான சாதத்துடன் ஒரு ஸ்பூன் நெய் சேர்த்து சாப்பிடுவது இந்தியர்களின் பாரம்பரிய உணவுப் பழக்கங்களில் ஒன்றாகும். நெய், உணவுக்கு சுவையை அதிகரிப்பதுடன், சில ஆரோக்கிய நன்மைகளையும் தரும்.


எலும்புகள் பலவீனமாக இருக்கின்றதா? பிரண்டையை இப்படி சாப்பிட்டு பாருங்க!
[Monday 2026-10-05 16:00]

எலும்பு ஆரோக்கியத்திற்கு உதவும் பிரண்டையை எவ்வாறு சமைத்து சாப்பிடுவது என்பதை குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். சாதாரணமாக கொடி போன்று வளரும் பிரண்டையை சரியான முறையில் சமைத்து சாப்பிட்டால் நல்ல பலனை பெற முடியும். அதிக கால்சியம் சத்து கொண்ட பிரண்டையை துவையலாக சாப்பிடலாம். எலும்பு ஆரோக்கியத்தினை அள்ளித்தரும் பிரண்டையை எவ்வாறு துவையலாக சாப்பிடுவது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.


தரை துடைப்பது முதல் பாத்திரம் கழுவுவது வரை – அசத்தும் புதிய தலைமுறை ரோபோக்கள்!
[Monday 2026-10-05 09:00]

அமெரிக்காவின் சான் ஃபிரான்சிஸ்கோ நகரைச் சேர்ந்த ‘டாவ் ரோபோடிக்ஸ்’ நிறுவனம், வீட்டு வேலைகளைச் செய்யக்கூடிய அதிநவீன ரோபோக்களை அறிமுகப்படுத்தியுள்ளது. சுமார் 4.4 அடி உயரமும் 35 கிலோ எடையும் கொண்ட இந்த ரோபோக்கள், படிக்கட்டுகள், கார்பெட்கள் மற்றும் பல்வேறு தரைகளில் எளிதாகச் சென்று வேலை செய்யும் திறன் கொண்டவை.

Kugeenthiran-200-2022-seithy
Vaheesan-Remax-2016
Karan Remax-2010
Asiaan-Salon-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
 gloriousprinters.com 2021
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா