Untitled Document
June 22, 2026 [GMT]
இன அழிப்பின் உயிர்வாழும் ஆதாரங்கள்
[Monday 2020-10-19 21:00]

வைத்தியர் சி. யமுனானந்தா

செம்மொழி எனப் போற்றப்படும் தமிழ் மொழியின் சொந்தக்காரர்கள் வரலாற்றுக்காலம் முழுவதும் அந்நியரால்அழிக்கப்பட்டு வந்தனர். ஆனால், தமிழ் மொழியின் செழுமையோ அதன் பண்பாட்டுப் பரிமானமோ மாறாது இயற்கை உற்பவம் காத்து வந்தது. அவ்வாறே 2009இல் ஏற்பட்ட அழிவுகளையும் தமிழ் மக்கள் எதிர்கொள்ளத் தலைப்பட்டனர்.

தமிழ் மக்களுக்கு எதிரான முஸ்லிம் அரசியல்வாதிகளின் வரலாற்றுத் துரோகங்கள்!
[Monday 2026-06-22 16:00]

இது அனைவரும் படிக்க வேண்டிய ஒரு வரலாற்றுப் பதிவு. இலங்கை சுதந்திரம் பெற்றதிலிருந்து, முஸ்லிம் அரசியல் சக்திகள் முன்னெடுத்துவரும் தமிழர்களுக்கு எதிரான மற்றும் துரோக அரசியல் குறித்த வரலாற்றுப் பதிவுகளின் தொகுப்பே இதுவாகும். ஆங்கிலேயர் நாட்டை விட்டு வெளியேறினால், பெரும்பான்மைப் பலத்தைக் கொண்டு சிங்களத் தலைவர்கள் சிறுபான்மையினரை ஒடுக்குவார்கள் என்ற நியாயமான அச்சம் தமிழ் தலைவர்கள் மத்தியில் உருவானது. இந்த ஆதிக்கத்தைத் தடுப்பதற்கான ஒரு அரசியல் கவசமாகவே 50:50 சமபலப் பிரதிநிதித்துவக் கோரிக்கை உருவானது. சோல்பரி ஆணைக்குழு 1944-இல் இலங்கைக்கு வந்தபோது, ஜி.ஜி. பொன்னம்பலம் இந்தச் சமபலப் பிரதிநிதித்துவக் கோரிக்கையை மிக வலுவான சட்ட மற்றும் தர்க்க ரீதியான வாதங்களுடன் முன்வைத்திருந்தார்.


கனடாவின் புதிய போர் விமானத் தயாரிப்புத் திட்டம்:அவ்ரோ (Avro) காலத்து நினைவுகளும் அமெரிக்காவிற்கு ஏற்படும் சவால்களும்
[Wednesday 2026-02-25 21:00]

கனடாவின் வான்வெளிப் பாதுகாப்பு வரலாற்றில் ஒரு புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. ஸ்வீடன் நாட்டின் சாப் (Saab) நிறுவனம், தனது கிரிப்பன் (Gripen E) போர் விமானங்களை கனடாவிலேயே முழுமையாகத் தயாரித்து, 7-க்கும் மேற்பட்ட வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் ஒரு பிரம்மாண்ட திட்டத்தை முன்வைத்துள்ளது. இது கனடாவை மீண்டும் ஒரு உலகளாவிய போர் விமான உற்பத்தி மையமாக மாற்றும் முயற்சியாகும். அவ்ரோ (Avro) பாரம்பரியமும் கசப்பான நினைவுகளும் கனடா போர் விமானங்களைத் தயாரிப்பது இது முதன்முறை அல்ல. 1950-களில் கனடா "அவ்ரோ ஆரோ" (Avro Arrow) என்ற அதிநவீன போர் விமானத்தைத் தயாரித்து உலகையே வியக்க வைத்தது. ஆனால், பல காரணங்களால் அந்தத் திட்டம் கைவிடப்பட்டது. இருப்பினும், கனடாவின் அவ்ரோ (Avro Canada) நிறுவனம் தயாரித்த விமானங்கள் உலகெங்கும் பரவின.


முன்னோர்கள் யாழ்ப்பாணத்து மண்ணில் விதைத்த "கல்வி" எனும் விதை!
[Monday 2026-01-05 07:00]

உலக வரலாற்றில் ஒரு இனம் அதன் அறிவுத்திறனுக்காகவும் பொருளாதார செழுமைக்காகவும் வேட்டையாடப்பட்ட கதைகள் பல உண்டு. அதில் முதன்மையானது ஐரோப்பாவில் யூதர்களுக்கு நேர்ந்த கதி. இன்று அதே வரலாற்றுப் பக்கங்களை ஈழத்தமிழர்களின் வாழ்வியலோடு ஒப்பிட்டுப் பார்க்கையில், பல திடுக்கிடும் உண்மைகள் புலனாகின்றன. ஜேர்மனியில் யூதர்கள் சிறுபான்மையினராக இருந்தாலும், கல்வியிலும் வர்த்தகத்திலும் அவர்கள் அசைக்க முடியாத சக்தியாக இருந்தனர். வங்கித்துறை, மருத்துவம், சட்டம் என அனைத்து உயர் பதவிகளிலும் யூதர்களே கோலோச்சினர்.


உலகின் அதிகார மையமாக திகழும் அமெரிக்கா! Top News
[Monday 2026-01-05 07:00]

உலகின் அதிகார மையமாக அமெரிக்கா கடந்த 50 ஆண்டுகளாகத் திகழ்வதற்கு அதன் ராணுவ பலத்தை விடவும் அதன் "டொலர்" என்ற ஆயுதமே முக்கியக் காரணியாக இருந்து வருகிறது. இன்று வெனிசுலாவில் நடக்கும் நிகழ்வுகள், வெறும் ஒரு நாட்டின் உள்நாட்டுப் பிரச்சினை அல்ல, இது உலகப் பொருளாதாரத்தின் அச்சாணியாக இருக்கும் 'பெற்றோ-டாலர்' அமைப்பைக் காப்பதற்கான ஒரு சர்வதேச சதுரங்க வேட்டை எனவும் கூறலாம். முதலில் பெற்றோ-டாலர் (Petrodollar) என்றால் என்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.


மாமன் விதைத்த நஞ்சு, மருமகன் வளர்த்த வஞ்சகம், தமிழரசுக்கட்சியின் துரோகம்: இலங்கையை அரித்துத் தின்னும் அரசியல்!
[Wednesday 2025-12-03 07:00]

இலங்கைத் தீவு இன்று இயற்கை அனர்த்தத்தாலும், பொருளாதாரச் சிதைவாலும் நிலைகுலைந்து போயிருக்கிறது. இன்று ஆட்சியில் அனுர குமார திஸாநாயக்க அமர்ந்திருந்தாலும், நாடு இந்த மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டதற்கான வேர்கள் மிக ஆழமானவை. அந்த வேர்களைத் தேடிச் சென்றால், அது "மாமா ஜே.ஆர் - மருமகன் ரணில்" எனும் மையப்புள்ளியிலும், அவர்களுக்குக் காலங்காலமாக முண்டுகொடுத்த "தமிழரசுக்கட்சியின் சந்தர்ப்பவாதத்திலும்" வந்து நிற்கிறது. இயற்கை அனர்த்தம் ஒருபுறம் மக்களைக் கொன்று கொண்டிருக்க, இந்த இக்கட்டான நேரத்திலும் தங்கள் அரசியல் இருப்பை மட்டுமே யோசிக்கும் 'பொறுக்கித்தனம்' மிக்க அரசியலைத் தோலுரிக்கும் கட்டுரை இது.


இது ஒரு புதிய நெருக்கடி அல்ல: பல தசாப்தங்களாகப் பயன்படுத்தப்பட்ட பழைய அரசியல் விளையாட்டு!
[Thursday 2025-11-20 07:00]

திருகோணமலை புத்தர்சிலை விவகாரம் தொடர்பாக தமிழ், சிங்கள செய்தி ஊடகங்கள், சமூகவலைத்தள கருத்துகள் மூலம் அதன் இறுதிக்கட்டமே எனக்கு தெரிந்திருந்தது. ஆனால், அதன் ஆரம்பம், இடைநிலை கட்டங்களில் என்ன நடந்தது என்ற விளக்கம் எனக்கில்லாதபடியினால் அதனை பெற, இணையத்தில் இருந்த தகவல்களை தொகுத்து நான் வாசிக்க தயாரித்த "short notes" இது. திருகோணமலை சிலை விவகாரம் ---ஒரு சிலையையும் தாண்டி நாம் பார்க்க வேண்டிய 5 அதிர்ச்சியூட்டும் உண்மைகள் உலகம் விஞ்ஞானத்திலும் தொழில்நுட்பத்திலும் எங்கோ முன்னேறிச் சென்று கொண்டிருக்க, நம் நாட்டின் 'சிஸ்டம்' மட்டும் ஏன் இப்படி தேங்கிப் போயிருக்கிறது? இதுதான் மாற்றவே முடியாத நமது விதியா?


கனடாவின் புதிய பிரதமர் Mark Carney.
[Monday 2025-03-10 22:00]

இன்று நடைபெற்ற Liberal கட்சியின் தலைமைக்கான தேர்தலில் வெற்றி பெற்று Liberal கட்சித் தலைவராக தெரிவான Mark Carney கனடாவின் புதிய பிரதமராகவும் நியமிக்கப்படுகின்றார். கனேடிய பிரதமர் Justin Trudeau வின் பதவி விலகலுக்கும் இவருக்கும் இடையில் நெருக்கமான தொடர்புகள் இருக்கின்றன. சரிவடைந்துள்ள கனேடிய பெருளாதாரத்தை துக்கி நிறுத்துவார் என்ற நம்பிக்கையுடன் கனேடிய அரசியலுக்குள் வலிந்து அழைத்துவரப்பட்டவர் Mark Carney.


ஒரு இமாலய முட்டாள்தனம் Top News
[Tuesday 2024-01-02 09:00]

பொறுப்புக்கூறல் மற்றும் அரசியல் மறுசீரமைப்புகளில் கால் இழுப்பதற்கு உலகத் தமிழர் பேரவை அரசாங்கத்திற்கு இன்னுமொரு காரணத்தை வழங்கியுள்ளது.


இமாலயப் பிரகடனம் யாருக்குச் சேவகம் செய்யும்....? Top News
[Friday 2023-12-29 01:00]

இமாலயப் பிரகடனத்தைச் செய்ததன் மூலம், உலகத் தமிழர் பேரவை புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புகள் மத்தியில் பெருமளவுக்குத் தனிமைப்படுத்தப்பட்டு விட்டது. அந்த அமைப்புடன் இணைந்து மகிந்தவைச் சந்தித்த கனேடியத் தமிழ்க் காங்கிரஸின் சில உறுப்பினர்கள் கனடாவில் கடுமையாக விமர்சிக்கப்படுகின்றார்கள்.


ஏழ்மையைக் கண்டு ஒதுங்குவதும் துன்பத்தைக் கண்டு விலகுவதும் மனித பண்பல்ல என்றனர் ஆன்றோர். Top News
[Friday 2023-09-29 20:00]

எமது தாயகத்திலே அரவணைப்போர் என்று எவரும் இன்றி அனாதரவாகவும் நிற்கதியாகவும் போரின் வடுக்களுக்களைச் சுமந்தவாறும் பொருளாதார வெறுமையில் சிக்கித் தவித்த வாறும் உடலியல் உழவியல் என்ற வகையிலும் சொல்லொணா உபாதைகளுக்கு உள்ளாகி எவரேனும் மனமிரங்கி கை தூக்க வாராரோ எனும் அங்கலாய்ப்புடனும் ஏக்கங்களுடனும் அன்றாடம் துயருற்றிருக்கும் எம் பிறந்த மண் உடன் பிறப்புக்களோ எண்ணற்றவை.


இலங்கையில் சர்வாதிகார சனாதிபதிக்குப் பதிலாக ஒரு கொடுங்கோலன் நியமனம்!
[Saturday 2022-08-27 08:00]

பல ஆண்டுகளாக எண்பித்துக் காட்டியது போல், தற்போதைய அரசியல்வாதிகளுக்கு, வாக்காளர்கள் மற்றும் நாட்டின் நலனில் அக்கறை இல்லை. எவரும் நாட்டை முதன்மைப் படுத்துவதாகத் தெரியவில்லை. சரியான திட்டமிடல் மற்றும் நாட்டை அபிவிருத்தி செய்வதற்கும், அதற்கு ஆதரவான சட்டத்தைக் கொண்டு வருவதற்கும் பதிலாக, இளைஞர்கள் மற்றும் வயதான அரசியல்வாதிகள் திட்டமிட்ட முறையில் இன மற்றும் மதப் பிளவுகளையும் குழுக்களுக்குள் விரோதங்களையும் சுயலாபத்திற்காக திசைதிருப்பும் தந்திரோபாயங்களாக ஊக்குவித்தார்கள்.


அரசியலில் நிரந்தர நண்பர்களும் இல்லை- நிரந்தர எதிரிகளும் இல்லை! - கனடா நக்கீரன்
[Friday 2022-07-22 22:00]

கொடுக்கிற தெய்வம் கூரையைப் பிச்சுக் கொண்டு கொடுக்குமாம். புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் சனாதிபதி இரணில் விக்கிரமசிங்க அவர்களைப் பொறுத்தளவில் வியாழன் பட்டையிலும் வெள்ளி துலாவிலும் இருக்கின்றன.


13வது திருத்த சட்டம் யாருக்கு தேவை? ச. வி. கிருபாகரன், பிரான்ஸ்
[Saturday 2022-01-29 18:00]

மிக அண்மையில் ஓர் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற காணோளியை பார்வையிட்டடேன். அதில் ஓரு பேச்சாளர், ‘யார் மக்களின் சமூக பொருளதார நலன்களில் அக்கறை கொண்டவர்களென்ற’வினாவை முன்வைத்து உரையாற்றினார். இவரின் உரையின் பிரகாரம், அரசியல்வாதிகள் என்பவர்கள் தினமும் தமது அடுத்த தேர்தலை பற்றிய சிந்தனை கொண்டவர்ளே தவிர, மக்களின் நலன்களிலோ எதிர்காலத்திலோ அக்கறை கொண்டவர்கள் அல்ல என்ற விடயத்தை முன்வைத்தார்.


‘ரொறோண்டோ சமர்’ | பின்னடி விமர்சனம்!
[Tuesday 2021-11-23 13:00]

கடந்த சனியன்று (நவம்பர் 20) ரொறோண்டோவில் நடைபெற்ற சுமந்திரனெதிர்ப்புப் போராட்டம் இப்போது ஒரு உலக சமாச்சாரம். விடுதலைப் புலி ஆதரவாளர்களையும், பொதுவாக ஈழத்தமிழர் சமூகத்தையும் நகைப்பிற்கிடமாக்கிய இச் சம்பவம் ஒருவகையில் இலங்கையில் அரசியல் தீர்வொன்றுக்காகப் போராடிவரும் சக்திகளுக்கு வெற்றியைத் தேடித் தந்திருக்கிறது.


யாழ்-உதயன் பத்திரிகையின் ஞாயிறு பதிப்பில் வெளிவந்த பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்களது செவ்வி.
[Wednesday 2021-09-22 18:00]

"ஐ.நா மனித உரிமைச்சபை ஆணையாளரின் அறிக்கை ஏமாற்றத்தை தந்துள்ளது." எம்மைப் பொறுத்தவரை விடுதலைப்புலிகள் போர்குற்றம் புரியவில்லை என்பதனை நிருபிக்க நாங்கள் தயாராக இருப்பதோடு, சிறிலங்கா இனப்படுகொலையினை புரிந்த அரசு என்பதனையும் நிருபிக்க தயாராகவுள்ளோம்.”— பிரதமர் வி.உருத்திரகுமாரன்JAFFNA,


இலங்கை தமிழ் வானொலிகளின் இன்றையபோக்கு: -சிறிமதன்
[Thursday 2021-03-18 19:00]

தெற்காசியாவிலேயே மிகவும் புகழ்பெற்ற வானொலி சேவை இலங்கையில் தான் அன்று இருந்தது. தொலைக்காட்சி ஊடகம் தொடங்கப்படாத காலம் அது. வேறு எந்த கேளிக்கை மாசும் மனதில் படியாத வசந்த காலம் அது. அப்போது தமிழ் ரசிகர்கள் மனங்களில் முழுக்க முழுக்க ஆக்கிரமித்திருந்தது இலங்கை வானொலி ஒன்றுதான்.


முத்தையா முரளிதரனை நாம் அவரது வர்க்க குணாம்சத்தை வைத்தே அளவிட வேண்டும்:
[Sunday 2020-10-18 14:00]

முத்தையா முரளிதரனுடைய வாழ்க்கை வரலாற்றை படமாக்கப்படுவது தொடர்பாகவும் அதில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பது தொடர்பாகவும் கடந்த சில நாட்களாக இடம்பெற்றுவரும் வாதப் பிரதிவாதங்களை அவதானித்த பின்னர் சில குறிப்புகளை எழுதலாம் என்று எனக்குத் தோன்றுகிறது.


ஈழ தமிழர்களுக்கான நீதி வேண்டி கனேடியர்களின் நெடுநடைப் பயணம்: Top News
[Thursday 2020-09-17 20:00]

நான்கு கனேடிய தமிழர்கள் நீண்ட நெடுந்தூரம் நீதிக்கான நடை பயணத்தை வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட ஈழ தமிழர்களுக்காக Auguest 31, 2020 இல் Brampton நகரில் இருந்து ஒட்டாவா நோக்கி ஆரம்பித்தனர். அவர்களுக்கு ஆதரவாக September 7 ஆம் நாள் Montreal இலிருந்து மூன்று தமிழ் கனேடியர்கள் ஒட்டாவா நோக்கி தமது நடை பயணத்தை தொடங்கினர். கடினமான பாதையில் கால்கள் வீங்க பாதங்கள் வேக அவர்களின் நீதிக்கான நடை பயணம் தொடர்ந்தது. மக்களின் ஆதரவு வழி நெடுக இருந்தது. கனேடிய பூர்வீக குடிமக்கள் தமது ஆதரவை தெரிவித்திருந்தனர்.


தலைமைப் பதவிக்காக சக உறுப்பினர்களை பலியாக்கும் சுமந்திரன்?
[Thursday 2020-03-19 18:00]

தலைமைப் பதவிக்காக கட்சி உறுப்பினர்களை பலியாக்கும், தம்மை அரசியலுக்கு அழைத்து வந்த தலைவர்களின் உணவிலே விசம் வைக்கும் அரசியல்வாதிகளை தமிழக திரைப்படங்களிலும் தமிழக அரசியலிலும் பார்த்திருக்கிறோம். ஆனால் உன்னதமான ஈழ விடுதலைப் போராட்டம் நடந்த மண்ணில் அத்தகைய அதிர்ச்சிகரமான முயற்சிகள் நடப்பது பற்றி உங்களுக்கு தெரியுமா? மனதை நடுங்க வைக்கும் மிக கேவலமான அரசியல் சூழ்ச்சிகள் இந் நாடாளுமன்றத் தேர்தலில் இடம்பெறுவது மக்களுக்குத் தெரியுமா? அதைப் பற்றியதுதான் இந்தப் பத்தி.


ராக்கிங் : தமிழ்த் தேசிய நோக்கு நிலையிலிருந்து!...
[Monday 2020-02-17 07:00]

பல ஆண்டுகளுக்கு முன்பு கிழக்கு பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக பேராசிரியர் ரவீந்திரநாத் இருந்த காலத்தில் ராக்கிங் தொடர்பாக ஒரு சந்திப்பு ஒழுங்கு செய்யப்பட்டது. ஆசிரியர்களும் மாணவர்களும் அதில் கலந்து கொண்டு ராக்கிங்கை எப்படி நிறுத்தலாம் என்பது குறித்து சிந்தித்தார்கள். அதன் போது ஒரு மூன்றாம் வருட மாணவன் எழுந்து ஆசிரியர்களை பார்த்து பின்வருமாறு கேட்டிருக்கிறார் “உங்களுடைய காலத்தில் ராக்கிங் செய்யாத யாராவது ஒருவர் என்னுடைய கேள்விக்கு பதில் சொல்லுங்கள்” என்று. அங்கு கூடியிருந்த ஆசிரியர்களில் ஓர் இளம் விரிவுரையாளரைத் தவிர வேறு யாருமே அந்த மாணவருக்கு பதில் சொல்லக் கூடியதாக இருக்கவில்லை. ஏன் பதில் சொல்ல முடியவில்லை? ஏனெனில் ராக்கிங் பெரும்பாலான உயர் கல்வி நிறுவனங்களில் ஓர் உப பண்பாடாக வளர்த்தெடுக்கப்பட்டிருக்கிறது. அது ஒரு பண்பாடாக இருப்பதனால்தான் இன்று வரையிலும் அதை சட்டத்தின் மூலம் மட்டும் கையாள்வது கடினமாக இருக்கிறது. ஜனநாயகம் ஒரு பெரும் பண்பாடாக செழிப்பாக வளர்த்தெடுக்கப்படாத ஒரு சமூகத்தில் ராக்கிங் ஓர் உப பண்பாடாக தொடர்ந்தும் நிலைத்திருக்கும். எமது கல்விப் புலத்தில் பல்கலைக்கழகங்களில் மட்டும் அல்ல தொழில்நுட்ப கல்லூரிகள் பாடசாலைகள் முதலாக பெரும்பாலான வளைந்தோருக்கான கல்விப் பரப்புகளில் அதுவோர் உப பண்பாடாகப் பேணப்ப்படுகிறது. எனவே ராகிங்கை கட்டுப்படுத்துவது என்பது தனிய ஒரு சட்ட விவகாரம் மட்டும் அல்ல. அதற்கும் அப்பால் அது ஒரு பண்பாட்டு விவகாரம்.


தமிழ் மரபுத் திங்கள் உருவான வரலாறு - (கனடா) Tamil heritage month Canada Top News
[Wednesday 2020-01-01 07:00]

கனடா நாடானது குடிவரவாளரின் நாடாகும். பல நாடுகளில் இருந்து வருகை தந்து, எமக்கு முன்னர் இங்கு குடியேறிய பல இனக்குழுக்கள் கனடாவின் பெரும்பான்மைப் பண்பாட்டோடு இணைந்து, தமது அடையாளத்தையும் இழக்காமல், இருப்பைத் தக்க வைத்துள்ளன. அதே வேளையில் தமது மரபுகளையும் பேணி முன்னெடுக்கின்றன. அவ்வகையில் நாமும் நமது அடையாள இருப்புக்கான, எமது மரபுகளையும் பேண வேண்டும்.

Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Kugeenthiran-200-2022-seithy
Karan Remax-2010
 gloriousprinters.com 2021
Asiaan-Salon-2022-seithy
Vaheesan-Remax-2016
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா