Untitled Document
June 17, 2024 [GMT]
வடக்கு காஸாவில் இஸ்ரேல் விமானத் தாக்குதலில் பாலஸ்தீனியர் பலி!
[Thursday 2016-01-14 07:00]

வடக்கு காஸா பகுதியில் இஸ்ரேல் எல்லையில் வெடிகுண்டு வைக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டிருந்த பாலஸ்தீன கிளர்ச்சிக் குழுவொன்றின் மீது இஸ்ரேலிய விமானம் குண்டு வீசி தாக்குதல் நடத்தியுள்ளது. தாக்குதலில் ஒருவர் உயிரிழந்ததுடன், மேலும் மூவர் படுகாயமடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது. பாலஸ்தீனியர்களின் குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் கிடைத்த புலனாய்வுத் தகவல்களின் அடிப்படையில் தேடுதல் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.


வளரும் நாடுகளின் முன்னுரிமைகள் மற்றும் தேவைகள் மீதே கவனம் செலுத்தப்பட வேண்டும்: - ஐ.நா. சபையில் இந்தியா
[Thursday 2016-01-14 07:00]

2030ஆம் ஆண்டு வளர்ச்சி செயல்திட்டம் அமல்படுத்தப்பட உள்ள நிலையில், வளரும் நாடுகளின் முன்னுரிமைகள் மற்றும் தேவைகள் மீதே கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று ஐ.நா. சபையில் இந்தியா வலியுறுத்தியுள்ளது.ஜி-77 கூட்டமைப்புக்கான தலைமைப் பொறுப்பை தென் ஆப்பிரிக்காவிடம் இருந்து தாய்லாந்திடம் வழங்குவதற்கான நிகழ்ச்சி ஐ.நா. சபையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், ஐ.நா.வுக்கான புதிய நிரந்தர இந்தியப் பிரதிநிதியான சையது அக்பருதீன் கலந்துகொண்டு பேசியதாவது:நிலையான வளர்ச்சிக் கொள்கைகளைக் கொண்ட 2030ஆம் ஆண்டு செயல்திட்டமானது, விரைவாகவும், நல்லதொரு நம்பிக்கையுடனும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.


உலகம் மீண்டும் ஒரு நிதி நெருக்கடியை நோக்கிச் செல்லக் கூடும்! - முதலீட்டு வல்லுநர் எச்சரிக்கை!
[Wednesday 2016-01-13 22:00]

உலகம் மீண்டும் ஒரு நிதி நெருக்கடியை நோக்கிச் செல்லக் கூடும் என முன்னணி முதலீட்டு வல்லுநர் ஒருவர் எச்சரித்துள்ளார். கடந்த 2008 ஆம் ஆண்டு ஏற்பட்ட பன்னாட்டு நிதி நெருக்கடி போல இந்த நெருக்கடியும் இருக்கக் கூடும் என சொசையிட்டி ஜெனரால் எனும் நிதி நிறுவனத்தைச் சேர்ந்த ஆல்பர்ட் எட்வர்ட்ஸ் கூறுகிறார். பன்னாட்டுப் பொருளாதாரத்தில் ஏற்படும் பல வளர்ச்சிகள் அமெரிக்கப் பொருளாதாரத்தை பின்னடைவை நோக்கி தள்ளும் என அவர் எதிர்வு கூறுகிறார்.


எட்டு ஆண்டுகளுக்கு முன்பு சேகரிக்கப்பட்ட கரு முட்டை மூலம் குழந்தை பெற்ற உலக அழகி!
[Wednesday 2016-01-13 20:00]

முன்னாள் உலக அழகியான இந்தியாவின் டயானா ஹைடன் எட்டு ஆண்டுகளுக்கு முன்பு சேகரிக்கப்பட்ட தனது கரு முட்டை மூலம், தற்போது ஒரு பெண் குழந்தைக்கு தாயாகியுள்ளார். ஆங்கிலோ இந்தியன் வம்சத்தைச் சேர்ந்த ஹைடன் கடந்த 1997 ஆம் ஆண்டு இந்திய அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். பின்னர் அதே ஆண்டு அவர் உழக அழகியாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது அவருக்கு வயது 24.ஹைதரபாத்தை பூர்விகமாக கொண்ட ஹைடன் நடிப்பு, விளம்பரம், மாடலிங் உள்ளிட்ட வேலைகளில் ஈடுபட்டதால் தனது திருமணத்தை தள்ளிவைத்தார்.


பேஸ்புக் பிறந்த நாளான பிப்ரவரி 4-ம் தேதியை நண்பர்கள் தினமாக கொண்டாடுங்கள்: - மார்க் ஸக்கர்பெர்க்
[Wednesday 2016-01-13 19:00]

பேஸ்புக் பிறந்த நாளான பிப்ரவரி 4-ம் தேதியை நண்பர்கள் தினமாக கொண்டாடும்படி பேஸ்புக் நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்க் வேண்டுகோள் விடுத்துள்ளார்.இது தொடர்பாக அவர் தனது பேஸ்புக் பக்கத்தில்


கனடாவில் முதலாவது கை மாற்று அறுவை சிகிச்சை வெற்றி! மருத்துவ உலகின் மகத்தான சாதனை !
[Wednesday 2016-01-13 12:00]

கனடாவில் முதலாவது கை மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக Toronto-இல் நடைபெற்றுள்ளது. இதில் 4 மிகபெரிய வைத்தியசாலைகளை கொண்ட The University Health Network ஐ சேர்ந்த 18 அறுவை சிகிச்சை நிபுணர்கள் பங்கேற்றனர். இதற்கு தலைமை வகித்தவர் Toronto Western Hospital இன் தலைவர் Dr. Steven McCabe - இவர் USA- இல் 1999-இல் முதன்முதலில் கை மாற்று அறுவை சிகிச்சை நடந்தபோது பங்கேற்றவர்களில் ஒருவர். 49 வயதான பெண்மணி விபத்து ஒன்றில் தனது கையை முழங்கைக்கு கீழே இழந்திருந்தார். அவருக்கு 14 மணி நேர அறுவை சிகிச்சை நடைபெற்று கை மீண்டும் பொருத்தப்பட்டுள்ளது.


அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான இரு படகுகளை சிறைபிடித்த ஈரான் கடற்படையினர்!
[Wednesday 2016-01-13 11:00]

ஈரான் நாட்டு கடற்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்ததாக அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான இரு படகுகளை ஈரான் கடற்படையினர் சிறைபிடித்துள்ளனர்.குவைத்-பஹ்ரைன் நாடுகளுக்கு இடையில் சென்றுகொண்டிருந்த அந்தப் படகுகள் திடீரென பழுதாகி, திசைமாறி ஈரான் கடற்பகுதிக்குள் நுழைந்ததாகவும், அதில் இருந்த பத்து அமெரிக்க கடற்படையினருடன் அந்த இரு படகுகளையும் ஈரான் கடற்படையினர் கைது செய்துள்ளதாகவும் ஈரான் வெளியுறவுத்துறை மந்திரி ஜாவத் ஷரிப் அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி ஜான் கெர்ரியிடம் தொலைபேசி மூலம் தெரிவித்துள்ளதாகவும் அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


பாகிஸ்தானில் போலியோ தடுப்பு மையம் அருகே இடம்பெற்ற குண்டு வெடிப்பு தாக்குதலில் 14 பேர் பலி!
[Wednesday 2016-01-13 07:00]

பாகிஸ்தானில் போலியோ தடுப்பு மையம் அருகே பயங்கர குண்டுவெடிப்பு தாக்குதல் நடைபெற்றுள்ளது. குவாட்டா நகரில் அரசு நடத்தி வரும் போலியோ முகாம் அருகில் இந்த குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளதாக போலீசார் மற்றும் மீட்புக் குழுவினர் தெரிவித்தனர். இந்த குண்டுவெடிப்பில் 14 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சுகாதார பணியாளர்கள் மற்றும் காவலர்கள் சிலர் இந்த தாக்குதலில் உயிரிழந்துள்ளனர். பலர் படுகாயமடைந்துள்ளனர். இவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. முதல் கட்டமாக போலியோ தடுப்பு குழுவின் உறுப்பினர்கள் உட்பட 5 பேர் உயிரிழந்ததாக கூறப்பட்டது. காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.


மதம் மற்றும் இனத்தின் அடிப்படையில் மக்களை குறிவைத்து நடத்தப்படும் அரசியலை நாம் புறக்கணிக்க வேண்டும்: - ஒபாமா
[Wednesday 2016-01-13 07:00]

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட ஆதரவு திரட்டிவரும் சில வேட்பாளர்கள் பிறமதத்தினரின் மனங்களை காயப்படுத்தும் வகையிலான பிரச்சாரபாணியை கடைபிடித்து வருவதற்கு வெளிப்படையாக எதிர்ப்பு தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் ஒபாமா, மதவாத அரசியலை புறக்கணிக்க நாம் முன்வர வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.இரண்டாவது அதிபர் பதவிக் காலத்தில் தனது இறுதி பாராளுமன்ற உரையை நிகழ்த்திய பராக் ஒபாமா பேசியதாவது:-


ஆப்கானிஸ்தானில் உள்ள இந்திய துணை தூதரகம் அருகே குண்டுவெடிப்பு!
[Wednesday 2016-01-13 07:00]

ஆப்கானிஸ்தானில் உள்ள ஜலாலாபாத் பகுதியில் இந்திய துணை தூதரகம் அருகே நிகழ்ந்த குண்டுவெடிப்பால் பரபரப்பு நிலவி வருகிறது.காபூலில் உள்ள இந்திய தூதரகத்தின் மீது பயங்கரவாத தாக்குதல் நிகழ்த்தப்பட்டிருந்த நிலையில், இந்திய துணை தூதரகங்களின் அருகே குண்டுவெடிப்பு நிகழ்வது தொடர்கதையாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.


பெண்களை ஆண்மைத்தன்மை கொண்டவர்களாக மாற்றிவிடும் பீட்ஸா பெட்டிகள்: - ஆய்வில் அதிர்ச்சி தகவல்
[Tuesday 2016-01-12 19:00]

போன் செய்த 15 நிமிடங்களில் வீடு தேடிவரும் பீட்ஸாவின் பின்னணியில் பாலின மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய ஆபத்தான மூலக்கூறுகள் இருப்பது சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. பீட்ஸாவில் உள்ள வெண்ணை போன்ற வழவழப்பான பொருட்கள் அவற்றை பேக்கிங் செய்து எடுத்துச்செல்ல பயன்படுத்தப்படும் கார்ட்போர்ட் பெட்டிகளின் வெளிப்பக்கத்தில் கசியாமல் இருக்க ஒருவகையான ரசாயனப்பூச்சு அட்டைப்பெட்டிகளில் பூசப்படுகிறது. அவ்வகையிலான அட்டைப்பெட்டிக்குள் பெண் நத்தைகளை அடைத்துவைத்து பரிசோதித்ததில் அந்த நத்தைகளுக்கு மெல்ல,மெல்ல ஆணுறுப்புகள் வளர்வதைக் கண்ட ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சியடைந்தனர். இவ்வகையில், வெளியேறும் அந்த ரசாயனம் எத்தனை வாடிக்கையாளர்களுக்கு பீட்ஸாவிலும் கலந்து சென்று சேர்ந்துள்ளதோ..? என அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.


அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் பனிக்கட்டிச் சிற்பமாக மாறிய கார்!
[Tuesday 2016-01-12 19:00]

காலையில் வெளியே கிளம்பும் அவசரத்தில் காரை சீக்கிரமாக ஸ்டார்ட் செய்யச் செல்லும் நீங்கள், காரை நிறுத்திய இடத்தில் ஒரு பனிக்கட்டிச் சிற்பம் நிற்பதைக் கண்டால் என்ன செய்வீர்கள்? அப்படியான அனுபவம்தான் அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் உள்ள பஃபலோ (Baffalo) நகரவாசிகளுக்கு நிஜமாகவே ஏற்பட்டது.ஆமாம் அவர்களது கார்களை பல அங்குலங்கள் அடர்த்தியான பனி போர்த்திவிட்டது. நியூயார்க் மாகாணத்தில் மிகக் கடுமையான குளிர் நிலவிவருகிறது.


நிர்வாண செல்பிகளின் மூலம் ஆயிரம் டொலர்களை சம்பாதித்த 15 வயது சிறுமி: - அமெரிக்காவில் சம்பவம்
[Tuesday 2016-01-12 19:00]

அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலத்தில் உள்ள கெய்னஸ் நகரைச் சேர்ந்த 15 வயது சிறுமியின் நடவடிக்கைகள் சமீபகாலமாக மர்மமாக இருப்பதால் அவர்மீது சந்தேகப்பட தாயார், மகளின் செயல்பாடுகளை உன்னிப்பாக கவனிக்க தொடங்கினார். அவ்வபோது, தனது அறையின் கதவை மூடி, தாளிட்டுக்கொள்ளும் அந்த சிறுமி எப்போது பார்த்தாலும் கம்ப்யூட்டரே கதியாக கிடப்பதை கண்டு அவரது சந்தேகம் மேலும் வலுவடைந்தது. அவள் வெளியே சென்றிருந்தபோது மகளின் கம்ப்யூட்டரை ஆராய்ந்த தாயார் திகைத்துப் போனார். இதுதொடர்பாக, அவர் போலீசில் புகார் அளித்ததால் அந்த சிறுமியை போலீசார் விசாரித்தபோது பல திடுக்கிடும் உண்மைகள் தெரியவந்தது.


சுவிஸ் நாட்டில் 18 ஆயிரம் வெளிநாட்டவர் வெளியேற்றப்படும் ஆபாயம்:
[Tuesday 2016-01-12 19:00]

சுவிஸ் மக்கள் கட்சி முன்னெடுக்கும் முயற்சியால் ஆண்டுக்கு 18 ஆயிரம் வெளிநாட்டவர் வெளியேற்றப்படும் ஆபாயம் உள்ளதாக எதிர்க்கட்சிகள் எச்சரித்துள்ளன. கொலை,கற்பழிப்பு, ஆயுதங்கள் உதவியுடன் கொள்ளையடித்தல், போதை பொருட்கள் கடத்துதல் போன்ற செயல்களில் ஈடுபடும் வெளிநாட்டினரை சுவிட்சர்லாந்தில் இருந்து வெளியேற்றும் யோசனையை சுவிஸ் மக்கள் கட்சி(SVP) முன்வைத்துள்ளது. மேலும் இது தொடர்பாக பொதுமக்களின் கருத்தை அறியும் விதமாக பிப்ரவரி மாதம் 28ம் திகதி வாக்கெடுப்பையும் நடத்தவுள்ளது. இந்நிலையில் SVPயின் இந்த திட்டத்துக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.


துருக்கியின் இஸ்தான்புல் நகரில் குண்டுத் தாக்குதல்: - பத்து பேர் பலி
[Tuesday 2016-01-12 19:00]

துருக்கியின் இஸ்தான்புல் நகரில் பெரும் குண்டொன்று வெடித்துள்ளது.நகருடைய பழைய பகுதியின் மையத்தில் அமைந்துள்ள சுல்தானஹ்மட் சதுக்கத்தை இந்த குண்டுவெடிப்பு அதிரவைத்துள்ளது.சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வருகின்ற ஒரு இடம் இது.குண்டுவெடிப்பை அடுத்து தற்போது அப்பகுதியை பொலிசார் அடைத்துள்ளனர்.குண்டுவெடிப்பில் பத்து பேர் உயிரிழந்துள்ளதாகவும், பதினைந்து பேர் காயமடைந்துள்ளதாகவும் இஸ்தான்புல் ஆளுநர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இது தற்கொலை குண்டுத் தாக்குதல் என்று சில செய்திகள் கூறினாலும் அதனை இன்னும் உறுதிசெய்ய முடியவில்லை.


வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த முன்னாள் சீன துணை பொது பாதுகாப்பு அமைச்சருக்கு 15 ஆண்டு கால சிறை!
[Tuesday 2016-01-12 13:00]

சீனாவின் முன்னாள் துணை பொது பாதுகாப்பு அமைச்சர் லீ டொங்ஷெங்கிற்கு (Li Dongsheng) பதினைந்து ஆண்டு கால சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக சீன அரச ஊடகமொன்று இன்று (செவ்வாய்க்கிழமை) செய்தி வெளியிட்டுள்ளது.தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக சீன அரசு அவர் மீது வழக்குப்பதிவு செய்திருந்தது.


பரபரப்பான விற்பனையில் ஹிட்லரின் சுயசரிதை!
[Tuesday 2016-01-12 12:00]

ஹிட்லரின் சுயசரிதையான "மெயின் காம்ப்' (எனது போராட்டம்) இரண்டாம் உலகப் போருக்குப் பின் முதல்முறையாக பிரசுரமாகி, பரபரப்பாக விற்பனையாகி வருகிறது.இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:1923-ஆம் ஆண்டு ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட்டு சிறையில் இருந்தபோது, ஹிட்லர் எழுதிய சுயசரிதை "மெயின் காம்ப்'. யூதர்களுக்கும், கம்யூனிஸ்டுகளுக்கும் எதிரான தனது தேசிய இனவாதத் கொள்கையை அந்த நூலில் ஹிட்லர் வெளிப்படுத்தியிருந்தார்.


பதன்கோட் விமான படை தள தாக்குதலை இந்தியா பெரிதுபடுத்துகிறது: - பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷரப்
[Tuesday 2016-01-12 07:00]

கடந்த 2


பதன்கொட் விமானப்படைத் தள தாக்குதல்: ஐவரை கைது செய்த பாகிஸ்தான் புலனாய்வுத்துறை!
[Tuesday 2016-01-12 07:00]

பதன்கொட் விமானப்படைத் தள தாக்குதல் சம்பவம் தொடர்பில் பாகிஸ்தான் அதிகாரிகள் முன்னெடுத்த சோதனை நடவடிக்கைகளில் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளதாக புலனாய்வுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தின் குஜரான்வாலா, பஹவால்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. அதன்போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.


அமெரிக்காவில் தலையில் அபூர்வமான விதத்தில் பற்களைக் கொண்ட சிங்கம் உயிரிழப்பு!
[Tuesday 2016-01-12 07:00]

தலையில் அபூர்வமான விதத்தில் பற்களைக் கொண்ட சிங்கமொன்று, அமெரிக்காவின் உதா மாகாணத்தில் உள்ள இதாகோ மலைப் பிரதேசத்தில் வைத்து கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறித்த சிங்கத்திற்கு வழக்கத்திற்கு மாறாக, அதன் சாதாரண பற்களுக்கு மேலதிகமாக, அதன் தலையின் பின்புறத்திலும் இன்னும் பற்கள் இருந்தமை அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.குறித்த மலைப்பகுதிக்கு ஒருவர் தனது நாயுடன் அண்மையில் வேட்டைக்குச் சென்றுள்ளார். அப்பொழுது அந்த சிங்கம் நாயை வேட்டையாடிக் கொலை செய்துள்ளது. பின்னர், குறித்த விலங்கு அமெரிக்க அரசின் உத்தரவிற்கு அமைய சுட்டுக் கொல்லப்பட்டுள்ளது.


சிரியாவில் ரஷியா விமானங்கள் குண்டு வீச்சு: -பள்ளிக்குழந்கைள் 12 பேர் பலி
[Tuesday 2016-01-12 07:00]

சிரியாவில் கடந்த 4 ஆண்டுகளுக்கு மேலாக உள்நாட்டு போர் நடைபெற்று வருகிறது. இதற்கிடையே அங்கு ஐ.எஸ்.தீவிரவாதிகளும் அரசுக்கு எதிராக தாக்குதல் நடத்தி பெரும்பாலான பகுதிகளை கைப்பற்றி தன்வசம் வைத்துள்ளனர். அதிபர் பஷர் அல்


ஜெர்மனியில் குற்றச் சம்பவங்கள் தொடர்பான புகார்கள் 500 ஐ தாண்டியது!
[Tuesday 2016-01-12 07:00]

ஜெர்மனியில் புத்தாண்டுக் கொண்டாட்டங்களின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் அசம்பாவிதங்கள் தொடர்பில் பதிவாகியுள்ள புகார்களின் எண்ணிக்கை 516 ஆக உயர்வடைந்துள்ளதாக ஜெர்மன் காவல்துறை தெரிவித்துள்ளது. இவற்றில் 40 வீதமானவை பாலியல் ரீதியான தாக்குதல்கள் தொடர்பானவை.இதனிடையே, நேற்று ஞாயிற்றுக்கிழமை மேற்கு ஜெர்மனியில் பாகிஸ்தானியர்கள் 6 பேரும் சிரிய நாட்டவர் ஒருவரும் தாக்கப்பட்டுள்ளனர். தாக்கப்பட்டவர்களில் இரண்டு பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இன்னொரு சம்பவத்தில் 5 பேர் கொண்ட குழு ஒன்று சிரிய நாட்டவர் ஒருவரை தாக்கியுள்ளது.


வடகொரியாவில் கிறிஸ்தவ போதகரின் சிறை அனுபவம்!
[Monday 2016-01-11 22:00]

ஆட்சிக் கவிழ்ப்பு மூலம் வடகொரியாவை மதச்சார்பு நாடாக மாற்றுவதற்கு திட்டம் தீட்டியதாக குற்றம்சாட்டப்பட்டு ஆயுள் தண்டனை அளிக்கப்பட்டதுவடகொரியாவில் கடந்த மாதம் கடூழிய-ஆயுள் சிறைத் தண்டனை அளிக்கப்பட்ட கனேடிய கிறிஸ்தவ போதகர், அவரது முதல் வார சிறை அனுபவங்களை வெளிப்படுத்தியுள்ளார்.கடுமையான வேலைகளை செய்வது மிகவும் சிரமமாக இருப்பதாக லிம் ஹையோன்-ஸூ அமெரிக்காவின் சிஎன்என் ஊடகத்துக்கு தெரிவித்துள்ளார். ஒரு நாளைக்கு 8 மணி நேரம் வீதம் வாரத்தில் 6 நாட்கள் வேலை செய்ய வேண்டியுள்ளதாகவும், தான் மட்டுமே கைதியாக உள்ள பழத்தோட்ட சிறை முகாம் ஒன்றில் குழி வெட்டும் வேலை தனக்கு கொடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.


உலகளவில் நீலப்படங்களை பார்ப்பதில் அமெரிக்கா முதலிடம்!
[Monday 2016-01-11 22:00]

போர்ண் ஹப் எனும் இணையதளம் வெளியிட்டுள்ள இந்த ஆய்வறிக்கையின் படி மிக அதிகப்படியாக நீலப்படம் பார்ப்பவர்களின் எண்ணிக்கையில் முதலிடத்தில் அமெரிக்காவும் அடுத்த இடத்தில் பிரிட்டனும் உள்ளன. பெண்கள் இப்படியான படங்களை பார்ப்பது அதிகரித்துள்ளது எனவும் அந்த ஆய்வு கூறுகிறது.அதிகப்படியானவர்கள் நீலப்படம் பார்க்கும் நாடுகளின் பட்டியலின் முதல் இருபது இடங்களில் 11 நாடுகள் ஐரோப்பாவில் உள்ளன.முதல் பத்து இடங்களில் உள்ள நாடுகளில் இருப்பவர்கள் சராசரியாக நாளொன்றுக்கு பத்து நிமிடங்களுக்கும் குறைவான நேரத்தையே இதற்கு செலவிடுகின்றனர் எனவும், எனவே இப்படியான படங்களுக்கு மக்கள் அடிமையாகியுள்ளனர் எனக் கூற முடியாது எனறும் புகழ்பெற்ற உளவியல் மற்றும் பாலியல் சிகிச்சை வல்லுநர் டாக்டர் லாரி பெடீட்டோ தெரிவித்துள்ளார்.


சவுதி அரேபியா-அமெரிக்காவுக்கு மிரட்டல் விடுத்த அல்கொய்தா இயக்கம்!
[Monday 2016-01-11 18:00]

சவுதியில் சமீபத்தில் ஏராளமான தீவிரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதற்கு பழிவாங்கப்போவதாக சவுதி அரசுக்கும் அல்கொய்தா மிரட்டல் விடுத்துள்ளது. ஏமனில் உள்ள அல்கொய்தா பிரிவின் வெடிகுண்டு தயாரிப்பு நிபுணர் இப்ராகிம் பின் ஹசன் அல் அசிரி இந்த மிரட்டலை அனுப்பியிருக்கிறார். இதுதொடப்பாக அவர் வெளியிட்டுள்ள ஆடியோ பதிவில்,


கனடாவில் பிள்ளைகளை அடித்தால் அடுத்து என்ன நடக்கும் தெரியுமா
[Monday 2016-01-11 18:00]

அதிகாரம் சூழ்நிலைக்கு அதிகமானதாக இல்லாமல் இருக்குமானால் மாணவரை திருத்தும் வழி பாடசாலை ஆசிரியர் பெற்றோர் அல்லது ஒருவர் தங்கள் பராமரிப்பின் கீழ் இருக்கும் ஒரு மாணவர் அல்லது பிள்ளையை திருத்தும் போது சூழ்நிலைக்கு அதிகமாக மீறாத பட்சத்தில் நியாயமானதென குற்றவியல் சட்ட பிரிவு 43 தெரிவிக்கின்றதென கூறப்படுகின்றது.


கவச ஆடையை பரீட்சிக்கும் சோதனை! ! - கத்திக் குத்தினால் ஊடகவியலாளர் காயமடைந்தார்
[Monday 2016-01-11 14:00]

இஸ்ரேலிய ஊடகவியலாளர் ஒருவர், கவச ஆடையொன்றை பரீட்சிக்கும் நிகழ்வின்போது கத்தியால் குத்தப்பட்டு காயமடைந்துள்ளார். இஸ்ரேலியர்கள் பலர் கத்திக்குத்து தாக்குதல்களுக்கு இலக்காகி வரும் நிலையில், கத்திக்குத்திலிருந்து பாதுகாக்கும் வகையில் நிறுவனமொன்றினால் தயாரிக்கப்பட்ட கவச ஆடையொன்று தொடர்பான விவரண செய்தித் தயாரிப்பில் இஸ்ரேலின் சனல் 2 தொலைக்காட்சி அலைவரிசை ஈடுபட்டிருந்தது. இதற்கான ஒளிப்பதிவின் போது அந்த அலைவரிசையின் ஊடக வியலாளரான எய்தாம் லசோவர் மேற்படி கவச ஆடையை அணிந்து அந்த ஆடையின் திறனை செயற்படுத்திக் காட்டுவதற்கு முன்வந்தார்.


வட கொரியாவை மிரட்டும் அமெரிக்க போர் விமானங்கள்!
[Monday 2016-01-11 10:00]

ஹைட்ரஜன் குண்டை வெடித்து பரிசோதித்ததாக சமீபத்தில் வடகொரியா அறிவித்துள்ள நிலையில் தென்கொரிய வான் எல்லையில் வட்டமிட்ட அமெரிக்காவின் அதிநவீன போர் விமானம் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த ஹைட்ரஜன் குண்டு சோதனைக்குப் பிறகு அமெரிக்காவின் அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதற்காக அணு ஆயுத திட்டங்களை மேலும் வலுப்படுத்துவோம் என வடகொரியா வெளிப்படையாக அறிவித்துள்ளது.

Airlinktravel-2020-01-01
 gloriousprinters.com 2021
Kugeenthiran-200-2022-seithy
Vaheesan-Remax-2016
Mahesan-Remax-169515-Seithy
Asayan-Salon-2022-seithy
NKS-Ketha-04-11-2021
Ambikajewellers-01-08-2021-seithy
Rajeef sebarasha 2023/04/19
Karan Remax-2010
Logan-Kumaresh-Homelife-02-02-2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா