Untitled Document
June 17, 2024 [GMT]
முன்னாள் போராளிகளுக்கு வாழ்வாதாரத் திட்டம்! - காசோலைகள் வழங்கப்பட்டன. Top News
[Friday 2016-01-15 19:00]

புனர்வாழ்வு பெற்ற போராளிகள், பிள்ளைகளை பறி கொடுத்த பெற்றோர்கள் ஆகியோருக்கான வாழ்வாதாரத் திட்டத்தின் கீழ் மூன்றாம் கட்டமாக நேற்று காசோலைகள் வழங்கப்பட்டன. தேவைகளின் அடிப்படையில் ஐந்து மாவட்டங்களிலும் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கான காசோலைகள் வழங்கும் நிகழ்வுகள் அனைத்து மாவட்ட பிரதேச செயலகங்களிலும் உள்ள கிராம அபிவிருத்தி திணைக்களத்தால் வழங்கப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், மன்னார் மாவட்டத்தை சேர்ந்த பயனாளிகளுக்கான காசோலைகளை, மாகாண அமைச்சர் பா.டெனிஸ்வரன் வழங்கினார்.


தமிழீழத்துக்காக சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டும்! - நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்
[Friday 2016-01-15 19:00]

தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகள் தொடர்பில் ஐக்கிய நாடுகளின் கண்காணிப்பின்கீழ் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டும் என்று மீண்டும் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி. உருத்திரகுமாரன் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார். நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் சர்வதேச பேரவையும் சர்வதேச தமிழ் இளைஞர் அமைப்பும் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்தக்கோரிக்கை வலியுறுத்தப்பட்டுள்ளது. 1976 வட்டுக்கோட்டை தீர்மானத்தின்படி தமிழீழம் பிரகடனப்படுத்தப்பட்டு 40 வருடங்கள் கடந்துள்ளன. இந்த பிரகடனத்தின் மூலம் தமிழர்களின் சுயநிர்ணய உரிமை மற்றும் தமிழர் தாயகம் என்பன அடிப்படையாக கொள்ளப்பட்டன.


தமிழகத்தில் இருந்து மேலும் அகதிகள் நாடு திரும்புகின்றனர்!
[Friday 2016-01-15 19:00]

தமிழக அகதி முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள 41 இலங்கை அகதிகள் எதிர்வரும் 19ஆம் திகதி நாடு திரும்பவுள்ளனர். 15 ஆண்கள், 26 பெண்கள் அடங்களாக 41 பேர் நாடு திரும்பவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் உயர் ஸ்தானிகராலயத்தின் ஒத்துழைப்பில் அவர்கள் இலங்கைக்கு அழைத்து வரப்படவுள்ளனர். மிஹின் லங்கா விமான நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று அவர்களை அழைத்துவருவதற்காக சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளது.


பிறக்கும் தமிழ்ப் புத்தாண்டில் எமது மக்களின் துன்பங்கள் தொலைந்து இன்பங்கள் வந்தெய்த வேண்டும்!
[Friday 2016-01-15 19:00]

மாதங்களில் சிறந்தது தை மாதம். தை பிறந்தால் வழி பிறக்கும் அல்லவை கழிந்து நல்லவை மலரும் என்பது தமிழர்களின் நம்பிக்கை. காரணம் தை மாதமே அறுவடை மாதமாகும். தை முதல் நாள் பொங்கல் நாளாகும். தை முதல்நாளே தமிழ்ப் புத்தாண்டாகவும் கொண்டாடப் படுகிறது. தமிழ்ப் புத்தாண்டு திருவள்ளுவர் பிறந்த நாளில் (கிமு 31) தொடங்குகிறது. இந்த ஆண்டு திருவள்ளுவர் ஆண்டு 2047 ஆகும். களனி திருத்தி, வயல் உழுது, வரம்பு கட்டி, எரு இட்டு, நீர் பாய்ச்சி, நெல் விதைத்து, களை எடுத்து, விளைந்த கதிர்களை உழவர்கள் அறுவடை செய்கிறார்கள்.


புலிகளைப் போன்று ஓய்வுபெறும் இராணுவத்தினருக்கும் புனர்வாழ்வு!
[Friday 2016-01-15 19:00]

விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்கள் புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகத்துடன் இணைக்கப்பட்டதை போல ஓய்வுபெறவுள்ள இராணுவ வீரர்களுக்கும் பயிற்சியளித்து சமூகத்துடன் இணைக்கவுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். பலாலி உயர்பாதுகாப்பு வலயத்தில் இன்று இடம்பெற்ற தேசிய தைப்பொங்கல் வைபத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போது அவர் இதனை கூறினார்.


அனைத்து இலங்கையருக்கும் சம உரிமை வழங்கும் தீர்வுக்கு பிரித்தானியா உதவும்!
[Friday 2016-01-15 19:00]

அனைத்து இலங்கையர்களுக்கும் சமமானதும் பொருந்தக் கூடியதுமான அரசியல் தீர்வினை பெற்றுக் கொடுக்க எதிர்ப்பார்த்துள்ள இலங்கை அரசாங்கத்திற்கு தம்மால் இயன்ற அனைத்து உதவிகளையும் வழங்க தயாராக உள்ளதாக பிரித்தானிய வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் ஹியூகோ ஸ்வையர் தெரிவித்துள்ளார்.


பயங்கரவாதத் தடைச்சட்டம் காலாவதியானது! - என்கிறார் ரணில்!
[Friday 2016-01-15 19:00]

நாட்டில் தற்போது யுத்தம் இல்லை. பயங்கரவாத தடைச்சட்டம் காலாவதியாகி விட்ட ஒன்றாகும். அதனை நீக்குவதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். பலாலி உயர்பாதுகாப்பு வலயத்தில் இன்று இடம்பெற்ற தேசிய தைப்பொங்கல் வைபத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போது அவர் இதனை கூறினார்.


காணி விடுவிப்பை வலியுறுத்தவே பொங்கல் வழிபாடுகளில் பங்கேற்றேன்! - என்கிறார் மாவை Top News
[Friday 2016-01-15 19:00]

பலாலியில் இன்னும் விடுவிக்கப்படாது உள்ள பகுதிகளை விடுவிக்குமாறு பிரதமரிடம் நேரடியாக வலியுறுத்தவே தேசிய பொங்கல் விழாவில் கலந்துக் கொண்டதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.


பலாலியில் தேசிய பொங்கல் விழா - ஜனாதிபதி வரவில்லை! Top News
[Friday 2016-01-15 19:00]

பலாலியில் இன்று இடம்பெற்ற தேசிய பொங்கல் விழாவில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்து கொள்ளவில்லை . இறுதிவரை ஜனாதிபதியின் வருகை எதிர்ப்பார்க்கப்பட்டிருந்த போதிலும் அவர் வருகை தரவில்லை. எனினும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன், இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.


ஜப்பானும், இலங்கையும் கடற்பாதுகாப்பில் இணைந்து செயற்பட இணக்கம்!
[Friday 2016-01-15 19:00]

கடல் பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்து இலங்கையும் ஜப்பானும் இணைந்து செயற்பட தீர்மானித்துள்ளன. அத்துடன் இரண்டு நாடுகளுக்கும் இடையில் பரஸ்பர புரிந்துணர்வை மேம்படுத்திக் கொள்ளவும் இணக்கம் காணப்பட்டுள்ளது. பாதுகாப்பு அமைச்சு இன்று வெளியிட்ட செய்தியிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மன்னாரில் ஆயுதக் கிடங்கைத் தேடி நிலத்தை அகழ்ந்த அதிரடிப்படை! Top News
[Friday 2016-01-15 18:00]

யுத்த காலப்பகுதியில் விடுதலைப் புலிகளினால் நிலத்துக்கு அடியில் ஆயுதங்கள் புதைக்கப்பட்டிருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து மன்னார் தோட்டக்காடு பிரதேசத்தில் நேற்று அகழ்வு பணிகள் இடம்பெற்றன. மன்னார் பொலிசாரினால் தகவல் வழங்கப்பட்டதையடுத்து, மன்னார் நீதவான் நீதிமன்ற நீதிபதி அலெக்ஸ்ராஜா அகழ்வு நடவடிக்கைகளுக்கான அனுமதியை வழங்கியுள்ளார்.


தைப்பொங்கலை முன்னிட்டு இந்திய மீனவர்கள் 55 பேர் விடுதலை:
[Friday 2016-01-15 13:00]

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு தடுதது வைக்கப்பட்டிருந்து 55 இந்திய மீனவரகள் நேற்று வியாழக்கிழமை விடுதலை செய்யப்பட்டுள்ளனர். தைப்பொங்கலை முன்னிட்டு நல்லிணக்க அடிப்படையில் குறித்த மீனவர்கள் விடுதலைசெய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


வாசகர்கள் அனைவருக்கும் எமது இனிய தைப்பொங்கல் நல் வாழ்த்துக்கள்!
[Friday 2016-01-15 12:00]

தமிழர்களுக்கு என்று ஒரு சிறப்பு பண்பாடு உண்டு மற்றவர்களுக்கு நன்றி பாராட்டுவது. அதே போன்று பொங்கலிட்டுப் எம்மை வாழவைக்கும் சூரியனுக்கு படைத்து மகிழ்வது தமிழர் வரலாற்றுவளி பண்பாடு. வாசலில் தோறணம் கட்டி,மாக்கோலம் போட்டு, மண் அடுப்பில், பானை வைத்து பொங்கலிட்டு சூரியனை வணங்கி படைத்து, ஊர் உறவோடு வயலும் வாழ்வும் செழிக்க ,சுற்றமும் சொந்தமும் கூடி பேதங்கள் மறந்து,தை பிறந்தால் வழிபிறக்கும் என்ற நம்பிக்கையில்,வெடிகொளுத்திகொண்டாடும் இப்பொங்கல்நாளில். எல்லோருடைய வாழ்வும் வளமும் செழிக்க அன்புடனும் பாசத்துடனும் வாழ அனைவரையும் அன்போடு வாழ்த்துகின்றோம்.


இலங்கை வந்துள்ள பிரித்தானிய வெளிவிவகார அமைச்சருடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் சந்திப்பு:
[Friday 2016-01-15 12:00]

இலங்கை வந்துள்ள பிரித்தானிய வெளிவிவகார மற்றும் பொதுநலவாய பணியக இணை அமைச்சர், ஹியூகோ ஸ்வைருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கும் இடையிலான சந்திப்பு நேற்று இடம்பெற்றுள்ளது. இதன்போது, இலங்கையில் தமிழர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராயப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. அத்துடன், பொறுப்புக்கூறல் மற்றும் அரசியல் அமைப்பு மீள் உருவாக்கம் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டதாக கூட்டமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


வடக்கு கிழக்கு மாகாணங்களில் 64 ஏக்கர் நிலப்பரப்பில் கண்ணி வெடி அகற்றும் பணிகள் ஆரம்பம்!
[Friday 2016-01-15 12:00]

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் 64 ஏக்கர் நிலப்பரப்பில் கண்ணி வெடி அகற்றும் பணிகள் ஆரம்பமாகியுள்ளன. போரினால் பெரிதும் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு , முகமாலை மற்றும் திருகோணமலையில் சிறிய பகுதியொன்றில் கண்ணி வெடிகளை அகற்றும் பணிகள் முன்னெடுக்கப்படுவதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ஜயனாத் ஜயவீர கூறினார். சர்வதேச கண்ணி வெடி அகற்றும் குழு மற்றும் இராணுவத்தின் விசேட குழுவொன்றும் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன. மேலும் 2,000 ஏக்கர் நிலப்பரப்பில் கண்ணி வெடிகளை அகற்றியுள்ளதாக இராணுவப் பேச்சாளர் குறிப்பிட்டார்.


மனிதாபிமான உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் பண்டிகை: - ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தைப்பொங்கல் வாழ்த்து
[Friday 2016-01-15 12:00]

மனிதாபிமான உணர்வுகளுக்கு மதிப்பிளிக்கும் பண்டிகையே தைப்பொங்கல் என்று தெரிவித்துள்ள இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மனிதாபிமான உணர்வு சகல இனத்தவர்களின் உள்ளங்களிலும் பொங்கிப் பிரவாகிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். தமிழர் திருநாள் தைப்பொங்கலை முன்னிட்டு விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியிலேயே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,


மீண்டும் பாணின் விலையை குறைப்பதற்கு பேக்கரி உரிமையாளர்களின் சங்கம் தீர்மானம்:
[Friday 2016-01-15 12:00]

ஒரு ரூபாவினால் அதிகரிக்கப்பட்ட ஒரு இறாத்தல் பாணின் விலையை மீண்டும் குறைப்பதற்கு அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்களின் சங்கம் தீர்மானித்துள்ளது. தேச நிர்மாண வரி 2 வீதத்திலிருந்து 4 வீதம் வரை அதிகரிக்கப்பட்டமையினால் அனைத்து பேக்கரி உற்பத்திகளின் செலவும் அதிகரித்திருந்ததாக பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என் கே ஜயவர்த்தன தெரிவித்துள்ளார் இதனடிப்படையில் பாண் இறாத்தலொன்றின் விலை ஒரு ரூபாவினால் அதிகரிக்கப்பட்டது. அரசாங்கத்தினால் மீண்டும் தேச நிர்மாண வரி குறைக்கப்பட்டமையினால் அதன் நன்மையை மக்களுக்கு வழங்க முடிந்துள்ளதாக ஜயவர்த்தன கூறினார்.


தை பிறந்தால் வழி பிறக்கும்' என்ற நம்பிக்கையுடன் ஈழத்தமிழர் விடுதலை பெற போராடுவோம்: - அமைச்சர் நிமால் விநாயகமூர்த்தி !
[Friday 2016-01-15 12:00]

'தை பிறந்தால் வழி பிறக்கும்' என்ற முதுமொழிக்கமைய பிறக்கப் போகும் தைத்திங்கள் தமிழ் மக்கள் அனைவருக்கும் எல்லா நன்மைகளையும் கொண்டு வர வேண்டுமென தெரிவித்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அமைச்சர் நிமால் விநாயகமூர்த்தி, தமிழீழ மக்களின் பெருவிருப்பான சுதந்திர தமிழீழத்தை நோக்கிய நகர்வை விரைவுபடுத்தப்படும் என நம்புகின்றேன் எனத் தெரிவித்துள்ளார். தமிழர் திருநாளாம் தைத்திருநாளை கொண்டாடும் முகமாக உலகலாவிய தமிழர் மரபுரிமைத் திங்கள் பெருவிழாவினைக் கொண்டாடுவதற்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஏற்பாடுகளைச் செய்துள்ளது. இந்நிலையில் தமிழர் திருநாளினையொட்டி நா.தமிழீழ அரசாங்கத்தின் புலம்பெயர் விவகாரங்களுக்கான அமைச்சர் நிமால் விநாயகமூர்த்தி விடுத்துள்ள அறிக்கையின் முழுவடிவம் :


இலங்கைக்கு பாதுகாப்பு ஆலோசகர் ஒருவரை நிமியக்க உள்ளதாக பிரித்தானியா தெரிவிப்பு!
[Friday 2016-01-15 12:00]

பிரித்தானியா இலங்கைக்கு பாதுகாப்பு ஆலோசகர் ஒருவரை நிமியக்க உள்ளதாக, தற்போது இலங்கைக்கு விஜயம் செய்துள்ள பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் ஹியூகோ ஸ்வாயார் தெரிவித்துள்ளார். இலங்கையின் பாதுகாப்பு தரப்பினருக்கு ஆலோசனைகளை வழங்கும் நோக்கில் விசேட ஆலோசகர் ஒருவரை பிரித்தானிய அரசாங்கம் நியமிக்க உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். கொழும்பு கிங்ஸ்பெரி ஹோட்டலில் பிரித்தானிய வர்த்தகர் பேரவையினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு மோல்டாவில் நடைபெற்ற பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகளின் போது இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் ஆகியோருக்கு இடையில் சந்திப்பொன்று நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.


வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் நாற்பதாவது ஆண்டினை மையப்படுத்திய கூட்டுச் செயற்பாடு: - புலம்பெயர் தமிழர் அமைப்புக்கள் கூட்டறிக்கை ! Top News
[Friday 2016-01-15 12:00]

நாற்பது ஆண்டுகளை எட்டியிருக்கும் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தினை வலுவூட்டியும், அத்தீர்மானத்தினை அரசியல் ரீதியாக முழுவீச்சுடன் அடுத்த கட்டத்துக்கு இவ்வாண்டு எடுத்துச் செல்வதற்கும் கூட்டாக இணைந்து செயற்படத் தீர்மானித்துள்ளதாக புலம்பெயர் அமைப்புக்கள் கூட்டாக அறிவித்துள்ளன. நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை, அனைத்துலக தமிழ் இளையோர் அமைப்பு ஆகிய அமைப்புகள் விடுத்துள்ள இக்கூட்டறிக்கையில், வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் நாற்பதாவது எழுச்சியாண்டில் அதன் அரசியல் முக்கியத்துவத்தை ஒரு முகமாக வெளிப்படுத்தும் வகையில் ஒற்றை இலச்சினையினைப் பயன்படுத்துவதெனத் தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளன.


தமிழ்மக்கள் அனைவருக்கும் தைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்: - ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு
[Friday 2016-01-15 12:00]

ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பாகிய நாம் தமிழ்மக்கள் அனைவருக்கும் எமது தைப்பொங்கல் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்ளுகின்றோம். தமிழர்களின் தேசிய திருநாளாம் தைத்திருநாளை கொண்டாடும் அனைத்து தமிழ் மக்களுக்கும் எமது பொங்கல் வாழ்த்துக்களைத் தெரிவித்து கொள்ளுகின்றோம். இத் தைத்திருநாளில் எமது மக்களுக்கு விடுதலையையும், நீதியையும் பெற்றுத்தரவேண்டும் என்றும் மனதில் நினைத்துக்கொண்டு எமது பணியை தொடருவோம். அரசியல் கைதிகள் விடுதலை, இராணுவ ஆக்கிரமிப்பில் இருந்து இராணுவம் வெளியேற வேண்டும் எமது மக்கள் மீளவும் தமது சொந்த நிலங்களுக்கு சென்று அடுத்த ஆண்டு தைப்பொங்கலாவது சொந்த நிலத்தில் நடைபெறச் செய்யவேண்டும் என்பதை நினைத்து தமிழ்மக்களின் தலைவர்கள் போராட வேண்டும்.


பிரகீத் எக்நெலிகொட கடத்தல் தொடர்பில் இராணுவத்தினர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் வாபஸ்!
[Friday 2016-01-15 12:00]

பிரபல பெரும்பாண்மையின ஊடகவியலாளர் பிரகீத் எக்நெலிகொட காணாமல் போன சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள இராணுவ புலனாய்வு உத்தியோகத்தர்கள் சார்பில் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டிருந்த நான்கு மனுக்கள் வாபஸ் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. இராணுவ உத்தியோகத்தர்களின் குடும்ப உறுப்பினர்கள் சட்டத்தரணிகளின் ஊடாக, ஆட்கொணர்வு மனுக்களை தாக்கல் செய்திருந்தனர். இவ்வாறு தாக்கல் செய்யப்பட்டிருந்த ஆட்கொணர்வு மனுக்களே வாபஸ் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட இராணுவ உத்தியோகத்தர்கள் நீதிமன்றில், முன்னிலைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் இந்த மனுக்களை வாபஸ் பெற்றுக் கொள்வதாக, மனுதாரர்கள் சார்பில் நீதிமன்றில் முன்னிலையான சட்டத்தரணி ரணில் சமரசூரிய நேற்று மேன்முறையீட்டு நீதிமன்றில் கோரியிருந்தார்.


ஆனையிறவில் கடுகதி ரயிலில் மோதுண்டு இராணுவ வீரர் மரணம்! - பொலிசார் விசாரணை
[Friday 2016-01-15 11:00]

ஆனையிறவு பகுதியில் இன்று காலை ரயில் மோதி இராணுவ பொலிஸ் படைப்பிரிவு வீரர் உயிரிழந்துள்ளார். இன்று காலை யாழிலிருந்து கொழும்பு நோக்கி சென்று கொண்டிருந்த கடுகதிப் புகையிரதத்தில் மோதுண்டே குறித்த இராணுவ வீரர் பலியாகியுள்ளார். குறித்த சம்பவத்தில் புத்தளம், ஆனமடுவ பகுதியை சோ்ந்த 42வயதான மா.நந்தசூரிய என்ற இராணுவ வீரரே உயிரிழந்துள்ளார். குறித்த இராணுவ வீரரின் சடலத்தை இராணுவ பொலிஸார் பொறுப்பேற்றுள்ளனர். உயிரிழந்த நபர் ஆனையிறவு இராணுவ பொலிஸ் படைமுகமாமை சோ்ந்தவர் எனவும் இவர் தற்கொலைக்காக ரயிலின்முன் பாய்ந்தாரா அல்லது வீதியை கட்க்கமுற்படுகையிர் மோதுண்டாரா என்பது தொடர்பில் விசாரணைகள் இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகிறது.


எங்களுடைய முதலமைச்சராகவே இருக்க வேண்டும் ! - கால்கட்டுப் போடும் மாகாணசபை உறுப்பினர்கள்
[Thursday 2016-01-14 20:00]

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாண முதலமைச்சராகவே நீங்கள் செயற்பட வேண்டும். இந்தப் பெயரைப் பயன்படுத்திக் கொண்டு வேறு தளங்களில் நீங்கள் இயங்குவதை நாம் விரும்பவில்லை. எங்களுடைய முதலமைச்சராகவே இருக்க வேண்டும் இவ்வாறு வடக்கு மாகாணசபையின் ஆளுங்கட்சி உறுப்பினர்கள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எடுத்துரைத்துள்ளனர்.


சொந்த இடங்களில் உறவுகளோடு தைப்பொங்கலை கொண்டாடும் நிலை உருவாக வேண்டும்! - சம்பந்தன்
[Thursday 2016-01-14 20:00]

தமது சொந்த இடங்களிலும் தமது உறவுகளோடும் தைப்பொங்கலை கொண்டாடக் கூடியதாக நிலைமை மாறவேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் வெளியிட்டுள்ள தைப்பொங்கல் வாழ்த்துச் செய்தியிலேயே தெரிவித்துள்ளார். அவரது வாழ்த்துச் செய்தியின் முழு விவரம் வருமாறு:-


ஜனாதிபதி மைத்திரியின் பொங்கல் வாழ்த்து! Top News
[Thursday 2016-01-14 20:00]

தமிழர் தைத்திருநாளாம் தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வாழ்த்துச் செய்தியை வெளியிட்டுள்ளர். அவரது வாழ்த்துச் செய்தியில், இன்றைய தினம் பொங்கிப் பிரவாகிக்கும் பாற்குடத்தைப் போன்று மற்றவர் மீதான மானிட அன்பும் எம்மக்களின் உள்ளங்களில் பொங்கிப் பிரவாகிக்கவும். ஏற்றப்படும் ஒளி விளக்குகள் இருளை நீக்கி உண்மையான நல்லிணக்கத்திற்கு வழிவகுக்கவும் எனது பிரார்த்தனைகளை தெரிவிப்பதோடு அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.


ஜெனிவா தீர்மானத்தை ஜூனுக்கு முன் நடைமுறைப்படுத்தக் கோருகிறது பிரித்தானியா!
[Thursday 2016-01-14 20:00]

ஐ.நா மனித உரிமைப் பேரைவயினால் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் எதிர்வரும் ஜூன் மாதத்திற்கு முன்னதாக அமுல்படுத்தப்பட வேண்டுமென பிரித்தானியா கோரியுள்ளது. கடந்த ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கை உள்ளிட்ட நாடுகள் இணை அணுசரணை வழங்கி நிறைவேற்றிய தீர்மானம், மனித உரிமைப் பேரவையின் ஜூன் மாத அமர்வுகளுக்கு முன்னதாக அமுல்படுத்தப்படும் என பிரித்தானிய எதிர்பார்ப்பதாக அந்நாட்டுக்கான வெளிவிவகார அமைச்சர் ஹியூகோ ஸ்வயர் தெரிவித்துள்ளார்.


லிபியா, உகண்டாவிலுள்ள தூதரகங்களை மூடுகிறது இலங்கை!
[Thursday 2016-01-14 20:00]

உள்நாட்டுப் போரால், தூதரக சேவை அதிகாரிகள் லிபியா மற்றும் உகண்டா நாடுகளில் பணிபுரிய விரும்புவதில்லை என்பதால், இந்நாடுகளில் உள்ள தூதரகங்களை மூட தீர்மானித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

NKS-Ketha-04-11-2021
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Asayan-Salon-2022-seithy
Mahesan-Remax-169515-Seithy
Ambikajewellers-01-08-2021-seithy
Airlinktravel-2020-01-01
Kugeenthiran-200-2022-seithy
Vaheesan-Remax-2016
Karan Remax-2010
 gloriousprinters.com 2021
Rajeef sebarasha 2023/04/19
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா