Untitled Document
May 15, 2024 [GMT]
குஜராத் மாநில பா.ஜ.க. தலைவராக தேர்வாகிறார் அமித்ஷா!
[Thursday 2016-01-14 07:00]

குஜராத் மாநிலத்தில் சமீபத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் பாரதீய ஜனதா கட்சிக்கு எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி கிடைக்கவில்லை. காங்கிரஸ் கட்சி குறிப்பிடத்தக்க இடங்களில் வெற்றி பெற்றது. இது பா.ஜ.க. மூத்த தலைவர்களிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதைத் தொடர்ந்து குஜராத் பா.ஜ.க.வுக்கு புத்துணர்ச்சி கொடுக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளது. அதன் முதல்கட்ட பணியாக குஜராத் பா.ஜ.க. தலைவர் பொறுப்பை ஏற்க அமிஷ்தா முடிவு செய்துள்ளார்.


தைப்பூசத்துக்கு தமிழக அரசு விடுமுறை அளிக்க வேண்டும்: - சீமான் வலியுறுத்தல்
[Wednesday 2016-01-13 22:00]

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர்,


ஜல்லிக்கட்டு பிரச்னையில் பாரதீய ஜனதா அரசு இரட்டை வேடம் போடவில்லை: - திமுக தலைவர் மு.கருணாநிதி
[Wednesday 2016-01-13 22:00]

ஜல்லிக்கட்டு பிரச்னையில் பாரதீய ஜனதா அரசு இரட்டை வேடம் போடுவதாக தான் நினைக்கவில்லை என திமுக தலைவர் மு.கருணாநிதி கூறினார்.சென்னையில் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ஜல்லிக்கட்டு பிரச்னையில் மாநில அரசே அவசர சட்டம் பிறப்பிக்கலாம் என மத்திய அமைச்சர் கூறியிருப்பது குறித்த கேள்விக்கு, இது ஒரு சட்டப் பிரச்னை. அதுகுறித்து ஆராய்ந்து தான் சொல்ல வேண்டும். அவசரப்பட்டு எதையும் சொல்லக் கூடாது என்றார்.ஜல்லிக்கட்டு பிரச்னையில் பாஜக அரசு இரட்டை வேடம் போடுவதாகச் சொல்லப்படுவது குறித்த கேள்விக்கு தான் அப்படி நினைக்கவில்லை என்றார் கருணாநிதி.


ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்த அனுமதி அளிக்க முடியாது: - மனுக்களை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம்
[Wednesday 2016-01-13 20:00]

ஜல்லிக்கட்டுப்போட்டியை நடத்த அனுமதிக்க முடியாது என்று கூறியுள்ள உச்ச நீதிமன்றம், ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் 5 பேர் தாக்கல் செய்த மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்த வலியுறுத்தி ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்தும் அமைப்பினர் 5 பேர் உச்ச நீதிமன்றத்தில் இன்று புதிய மனுக்களை தாக்கல் செய்தனர்.அதில், ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்த அனுமதிக்குமாறுக் கோரியிருந்தனர்.இந்த மனு இன்று பிற்பகல் 3 மணிக்கு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்த அனுமதி அளிக்க முடியாது என்று தீர்ப்பளித்து, ஜல்லிக்கட்டு ஆர்வலர்களின் மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.


ஈழத் தமிழர்களின் அடிப்படை உரிமைகளுக்கு உத்தரவாதம் வேண்டும்! - திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி
[Wednesday 2016-01-13 19:00]

ஈழத் தமிழர்களான ஆதிக்குடிகளை அன்னியப்படுத்தாமல் அவர்களின் பண்பாடு, அடிப்படை உரிமைகளுக்கு உத்தரவாதம் தேவை என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் - இலங்கையில் தமிழர்களின், இஸ்லாமியர்களின் ஆதரவுடன் மைத்திரிபால சிறிசேன தலைமையில், அரசு அமைந்து ஓராண்டு நிறைவு பெறுகிறது. இந்த அரசு தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டியது அதன் தலையாய கடமை. பேச்சுரிமை, கருத்துரிமை, எழுத்துரிமை முதலிய அடிப்படை உரிமைகள்தான் ஜனநாயகத்தின் மூச்சுக்காற்று! அதற்கு எவ்வித குந்தகமோ, தடையோ இல்லாத ஆட்சியாக தனது ஆட்சியை நடத்தவேண்டியது அதன் முக்கிய தேவையாகும்!


கரும்பு விவசாயிகளை அதிமுக அரசு ஏமாற்றுகிறது: - தேமுதிக தலைவர் விஜயகாந்த்
[Wednesday 2016-01-13 19:00]

கரும்பு விவசாயிகளை அதிமுக அரசு ஏமாற்றுகிறது என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,கரும்பு விவசாயிகள், கரும்புக்கு டன் ஒன்றுக்கு ரூபாய் 3500 கேட்டு போராடி வரும் நிலையில், தமிழக முதலமைச்சர் ஜெயலிதா ரூபாய் 2850 என ஆதாரவிலையை அறிவித்துவிட்டு, இது கரும்பு விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை அளிக்குமென கூறி இருப்பது நகைப்பிற்குரியதாகும். மத்திய அரசு ஆதார விலையை அறிவித்து பல மாதங்களுக்குப் பிறகு, கரும்பு அரவை பருவம் துவங்கி பலநாட்களுக்குப் பிறகு, தற்போதுதான் மாநில அரசின் ஆதாரவிலையை அதிமுக அரசு அறிவித்துள்ளது.


வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக மகத்தான வெற்றி பெறும்: முதல்வர் ஜெயலலிதா
[Wednesday 2016-01-13 13:00]

தீய சக்திகளிடம் இருந்து அதிமுகவைக் காப்பாற்றி வருகிறேன் என்று அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா கூறியுள்ளார்.அதிமுக தலைமை அலுவலகத்தில் தொண்டர்கள் மத்தியில் முதல்வர் ஜெயலலிதா இன்று உரையாற்றினார்.அப்போது, வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக மகத்தான வெற்றி பெறும். தீய சக்திகளிடம் இருந்து அதிமுகவை காப்பாற்றி வருகிறேன்.அதிமுக இன்னும் பல நூறு ஆண்டுகளுக்கு மக்கள் பணியாற்றும் என்று தெரிவித்தார்.அதிமுக அலுவலகம் முன்பு திரண்டிருந்த ஏராளமான தொண்டர்கள் முன்பு ஜெயலலிதா உரையாற்றியதற்கு, தொண்டர்கள் மிகுந்த வரவேற்பு அளித்தனர்.


மோசடி வழக்கிலிருந்து கருணாநிதியின் மகள் செல்வியை விடுவித்தத உயர் நீதிமன்றம்!
[Wednesday 2016-01-13 12:00]

மோசடி வழக்கிலிருந்து திமுக தலைவர் கருணாநிதியின் மகள் செல்வியை விடுவித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதுதொடர்பாக, வி.நெடுமாறன் தாக்கல் செய்த மனுவில், திமுக தலைவர் கருணாநிதியின் மகள் செல்வி, அவரது மருமகன் வி.எம்.ஜோதிமணி ஆகியோர், சென்னைக்கு அருகேயுள்ள தாழம்பூர் கிராமத்தில் ரூ. 5.14 கோடி மதிப்புள்ள 2.94 ஏக்கர் நிலத்தை விற்பதாகக் கூறினர்.ரூ. 3.5 கோடியை முன்பணமாகப் பெற்றுவிட்டு, நிலத்தை விற்கவும் இல்லை, முன்பணத்தை திருப்பித் தரவும் இல்லை. திரும்பக் கேட்டதற்கு மிரட்டல் விடுக்கப்பட்டது தொடர்பாக போலீஸாரிடம் புகார் அளிக்கப்பட்டது. பூந்தமல்லி முதலாவது நீதித்துறை நடுவர் மன்றத்தில் நிலுவையில் உள்ள இந்த வழக்கு விசாரணையை விரைந்து முடிக்க உத்தரவிட வேண்டும்' என்று கோரியிருந்தார்.


கொல்கத்தாவில் குடியரசு தின பேரணி ஒத்திகையின் போது கார் மோதி விமானப்படை அதிகாரி பலி!
[Wednesday 2016-01-13 07:00]

கொல்கத்தாவில் குடியரசு தின பேரணிக்காக ஒத்திகை பயிற்சியின் போது கார் மோதி விமானப்படை அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார். கோப்ரல் அபிமன்யு கௌட்(30) என்ற அதிகாரி கொல்கத்தாவின் ரெட் சாலையில் நடைபெற்ற குடியரசு தின விழா பேரணிக்கான ஒத்திகையை மேற்பார்வையிட்டு கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த ஆடி கார் ஒன்று அவர் மீது மோதியது.


சூரிய மின் உற்பத்தி சாதன ஊழல் தொடர்பாக கேரள முதல்வர் உம்மன் சாண்டியிடம் விசாரணை!
[Wednesday 2016-01-13 07:00]
சூரிய மின் உற்பத்தி சாதன ஊழல் தொடர்பாக கேரள முதல்வர் உம்மன் சாண்டியிடம் வரும் 25-ஆம் தேதி விசாரணை நடத்தப்படவுள்ளது. கேரளத்தில் கட்டடங்களின் மேற்கூரையில் பொருத்தப்படும் சூரிய

மின் உற்பத்தி சாதனங்களைத் தயாரிப்பதாக "டீம் சோலார்' என்ற நிறுவனம் கடந்த 2013-ஆம் ஆண்டு அறிவிப்பு வெளியிட்டது. மேலும், அந்நிறுவனத்தில் பங்குதாரர்களாக சேருவதற்கு பல முன்னணி நிறுவனங்களிடமிருந்து பல கோடி ரூபாய் பெறப்பட்டதாகக் கூறப்படுகிறது.மேலும், சூரிய மின் உற்பத்தி சாதனங்களைத் தயாரிக்க பல நிறுவனங்களுக்கு ஒப்பந்தப் புள்ளிகளும் வழங்கப்பட்டன.


நாடாளுமன்றத்தை செயல்படவிடாமல் அமளியில் ஈடுபடுவதை நியாயப்படுத்தியவர்தான் நிதியமைச்சர் ஜேட்லி: - காங்கிரஸ்
[Wednesday 2016-01-13 07:00]

நாடாளுமன்றத்தை செயல்படவிடாமல் அமளியில் ஈடுபடுவதை நியாயப்படுத்தியவர்தான் நிதியமைச்சர் அருண் ஜேட்லி என்று காங்கிரஸ் விமர்சித்துள்ளது.தில்லியில் அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, நாடாளுமன்றத்தை முடக்குவதில் நேரு குடும்பத்தினர் முக்கியப் பங்கு வகிப்பதாக தெரிவித்திருந்தார்.இந்தக் குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் வகையில், காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஆனந்த் சர்மா, செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: அமளியால் நாடாளுமன்றம் முடங்குவது குறித்து அருண் ஜேட்லி கவலை தெரிவித்து வருகிறார்.


பதான்கோட் விமான தளத்தில் ரூ. 20 கொடுத்தால் ஆடு மேய்க்கலாம்!
[Tuesday 2016-01-12 22:00]

பதான்கோட் விமான தளத்தை சுற்றியுள்ள மக்கள் ரூ. 20 கொடுத்து அங்கு தங்களது ஆடுகளை மேய்துள்ளது தற்போது தெரியவந்துள்ளது.பஞ்சாப் மாநிலம் பதான்கோட் விமான தளத்துக்குள் கடந்த 2 ஆம் தேதி பயங்கரவாதிகள் புகுந்து தாக்குதல் நடத்தினர்.இதையடுத்து பதான்கோட் பகுதியில் உள்ள பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. இதில் பதான்கோட் விமான தளத்தைச் சுற்றி வசிப்போர், தங்களது ஆடு, மாடுகளை அந்த தளத்துக்குள் அழைத்து சென்று மேய்துள்ளது தெரியவந்தது. அவர்கள் அங்குள்ள பாதுகாப்பு அலுவலர்களிடம் ரூ. 20 கொடுத்துவிட்டு உள்ளே சென்றுள்ளனர்.


ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்த இடைக்காலத் தடை: -தமிழக மக்கள் பெருத்த ஏமாற்றம்
[Tuesday 2016-01-12 21:00]

ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்த மத்திய அரசு வெளியிட்ட அறிவிக்கைக்கு இடைக்காலத் தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதால், தமிழக மக்கள் பெருத்த ஏமாற்றத்துக்குள்ளாகியுள்ளனர்.ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்த அனுமதி வழங்கும் வகையில் மத்திய அரசு கடந்த 7ம் தேதி அறிவிக்கை ஒன்றை வெளியிட்டது.இதனால், ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த அலங்காநல்லூர் உள்ளிட்ட கிராம மக்கள் அதற்கான ஏற்பாடுகளில் மகிழ்ச்சியோடு ஈடுபட்டு வந்தனர். வாடிவாசல்களில் ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்றது.


அஸ்ஸாம் மாநிலம் காஸிரங்கா தேசிய பூங்காவில் வேட்டையாடப்பட்ட காண்டாமிருகம்!
[Tuesday 2016-01-12 20:00]

அஸ்ஸாம் மாநிலம் காஸிரங்கா தேசிய உயிரியியல் பூங்காவில் மேலும் ஒரு காண்டாமிருகம் வேட்டையாடப்பட்டிருப்பது இன்று காலை தெரியவந்தது.ஞாயிற்றிக்கிழமை இரவு இப்பூங்கா பகுதியில் துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டதாகவும், அதிகமான பனிமூட்டம் இருந்ததால் சரியான இடத்தை கண்டறியமுடியவில்லை என பூங்கா அதிகாரிகள் கூறினர்.இந்நிலையில் இன்று காலை பூங்கா அலுவலர்கள் இறந்து போன காண்டாமிருகத்தின் உடலை சித்தோல்மரி பகுதியில் கண்டறிந்தனர்.


குடியரசு தினத்தன்று இலங்கை சிறையில் உள்ள 114 மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி போராட்டம்: - மீனவர் பேரவை
[Tuesday 2016-01-12 20:00]

சிறைவைக்கப்பட்டுள்ள 114 மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி வருகிற குடியரசு தினத்தன்று நாகப்பட்டிணத்தில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவது என தேசிய மீனவர் பேரவை தீர்மானித்துள்ளது.இதுகுறித்து பேரவையின் தலைவர் மா. இளங்கோ வெளியிட்ட அறிக்கை:கடந்த 26-2-2015 முதல் 10 மாதங்களாக தமிழ்நாடு, புதுச்சேரி மாநில இந்திய மீனவர்களின் மீன்பிடி படகுகள் இலங்கை அரசால் கைப்பற்றப்பட்டு அவை இலங்கை கடற்கரைகளில் மக்கி பாழாகி வருகின்றன.தமிழக மீனவர்கள் 114 பேர் இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதனால் தமிழர்களின் மிக முக்கியமான பாரம்பரிய பண்டிகையான பொங்கல் பண்டிகை கொண்டாட இயலாத நிலையில் தமிழகம் முழுவதும் மீனவ சமுதாயம் பெரும் துயரத்தில் ஆழ்ந்துள்ளது.


திருச்செந்தூர் கடல் பகுதியில் கரை ஒதுங்கிய குட்டித் திமிங்கலங்கள்!
[Tuesday 2016-01-12 07:00]

திருச்செந்தூர் கடல் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குட்டித் திமிங்கலங்கள் நேற்று ஒரே நேரத்தில் கரை ஒதுங்கியது பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கரை ஒதுங்கிய திமிங்கலங்களை பார்ப்பதற்கு நள்ளிரவிலும் பொதுமக்கள் கடற்கரைகளில் திரண்டனர்.6 அடி முதல் 18 அடி வரை நீளம் கொண்ட அந்த திமிங்கலங்களின் எடை 100 முதல் 200 கிலோ வரை இருந்தன. ஆலந்தலை முதல் கல்லாமொழி வரையிலான கடல் பகுதியின் கடற்கரைகள் இவ்வாறு சுமார் 100 திமிங்கலங்கள் வரை பரவிக் கிடந்தன. இதுகுறித்து தகவல் அறிந்ததும் உடலில் காயம்பட்ட நிலையில் காணப்பட்ட அந்த திமிங்கலங்களை மீண்டும் கடலுக்குள் அனுப்பும் பணிகளில் காவல்துறையினர், ஊர்காவல்படையினர் உள்ளிட்டோர் ஈடுபட்டனர்.


இந்திய இறையாண்மைக்கு சவால் விடும் இலங்கை அமைச்சரின் பேச்சு கடுமையாக கண்டிக்கத்தக்கது: - ராமதாஸ்
[Tuesday 2016-01-12 07:00]

வங்கக்கடலில் மீன் பிடிக்கும் தமிழக மீனவர்களில் 500 பேரை, அவர்களின் படகுகளுடன் அடுத்த ஒரு மாதத்தில் கைது செய்ய வேண்டும் என்று இலங்கை கடற்படையினருக்கு அந்நாட்டு மீன்வளத் துறை அமைச்சர் மகிந்த அமரவீரா ஆணையிட்டிருக்கிறார்.இந்திய இறையாண்மைக்கு சவால் விடும் வகையிலான இலங்கை அமைச்சரின் இந்த அகம்பாவப் பேச்சு கடுமையாக கண்டிக்கத்தக்கது என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:-இலங்கை யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற வடக்கு இலங்கை மீனவர் சங்கங்களின் கூட்டத்தில் பேசும் போது இவ்வாறு கூறியிருக்கிறார். இலங்கை கடல் எல்லைக்குள் இந்திய மீனவர்கள் மீன் பிடிப்பதை ஒரு போதும் அனுமதிக்க முடியாது.


பயங்கரவாதம் மீது காட்டும் சகிப்புத்தன்மையை பிரதமர் நரேந்திர மோடி கைவிட வேண்டும்: - சிவசேனா வலியுறுத்தல்
[Tuesday 2016-01-12 07:00]

பதான்கோட் விமானப் படைத்தளத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ள நிலையில், பயங்கரவாதம் மீது காட்டும் சகிப்புத்தன்மையை பிரதமர் நரேந்திர மோடி கைவிட வேண்டும் என சிவசேனை வலியுறுத்தியது.இதுகுறித்து அக்கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான "சாம்னா'வில் திங்கள்கிழமை வெளியான தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது:பயங்கரவாதத் தாக்குதல்களை நாம் சகித்துக் கொள்வது பாராட்டுக்குரியது என்றாலும் அதற்கென ஓர் எல்லை உண்டு.பயங்கரவாதம் மீது காட்டும் சகிப்புத்தன்மையை பிரதமர் மோடி கைவிட வேண்டும் என நாம் பிரார்த்திக்கிறோம்.பதான்கோட் பயங்கரவாதத் தாக்குதலுக்கு காரணமானவர்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாகிஸ்தானை அமெரிக்கா நிர்பந்தித்துள்ளது.


தமிழ்நாட்டில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் பூரண மதுவிலக்கை கொண்டு வருவோம்: - இளங்கோவன்
[Tuesday 2016-01-12 07:00]

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையத்தில் நேற்று இரவு காங்கிரஸ் கட்சியின் பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் கலந்து கொண்டு கட்சியின் மாநில தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேசியதாவது:


பாகிஸ்தான் உளவாளிகளுக்கு சிம்கார்டு விற்றவர் கைது!
[Tuesday 2016-01-12 07:00]

கடந்த அக்டோபர் மாதம், பாகிஸ்தான் உளவாளியான கபைதுல்லா கான் என்பவன் டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டான். அவனுடைய கூட்டாளிகளான எல்லை பாதுகாப்பு படை வீரர், ராணுவ வீரர், ஓய்வு பெற்ற ராணுவ வீரர் உள்ளிட்ட 4 பேரும் கைது செய்யப்பட்டனர். இந்த உளவு கும்பல், டெல்லியில் போலியாக உருவாக்கப்பட்ட அடையாள ஆவணங்கள் அடிப்படையில், முன்கூட்டியே


தண்டவாளத்திலிருந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பெண்: -மேற்கு வங்க மாநிலத்தில் சம்பவம்
[Tuesday 2016-01-12 07:00]

எதிர்பாராத விதமாக ரெயில்வே தண்டவாளத்தில் மாட்டிக் கொண்ட ஒருவர் உயிர் தப்புவதே அரிதான சம்பவமாக இருக்கும் நிலையில், அரிதினும் அரிதான சம்பவம் ஒன்று மேற்கு வங்க மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது.அங்குள்ள புரூலியா நகரில் ஹிமானி மாஞ்சி(45) என்ற பெண், தீதாநகர் செல்லும் ரெயிலைப் பிடிப்பதற்காக நேற்று புரூலியா ரெயில் நிலையத்திற்கு சென்று கொண்டிருந்தார். தண்டவாளத்தைக் கடந்து செல்ல முயன்றபோது, கற்கள் இடறியதால் திடீரென தண்டவாளத்திற்கு இடையில் விழுந்துவிட்டார். எதிரில் வேகமாய் வரும் ரெயிலைப் பார்த்து திகைத்த அவர் பயத்தில் என்ன செய்வதென்று தெரியாமல் சிலை போல் உறைந்து நின்றார்.


பெண்கள் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்வதை யாரும் தடுக்க முடியாது: - உச்ச நீதிமன்றம்
[Monday 2016-01-11 21:00]

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் பெண்கள் செல்வதை யாரும் தடுக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் கருத்துத் தெரிவித்துள்ளது.கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் பெண்கள் நுழைய அனுமதி அளிக்கக் கோரி பொது நலன் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட சிறப்பு அமர்வு விசாரித்தது. விசாரணையின்போது, பெண்கள் கோயிலுக்குள் நுழைய அனுமதி மறுப்பது இந்திய அரசியலமைப்புக்கு எதிரானது என்று நீதிபதிகள் கூறியுள்ளனர்.


ஆண்களை பாதுகாக்க சட்டம் இயற்ற வேண்டும்: - தில்லி நீதிமன்றம்
[Monday 2016-01-11 21:00]

பொய்யான பலாத்கார வழக்கு ஒன்றில் வழக்குரைஞர் நிரபராதி என்று விடுதலை செய்யப்பட்ட நிலையில், ஆண்களைப் பாதுகாக்க சட்டம் இயற்ற வேண்டிய தருணம் இது என்று நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. வழக்குரைஞரிடம் பணியாற்றிய பெண், அவர் மீது பொய்ப் புகார் கூறியிருந்ததும் நிரூபிக்கப்பட்டுள்ளது.பலாத்கார வழக்கில், நிரபராதி என்று தீர்ப்பளிக்கப்பட்ட வழக்குரைஞர், இந்த பொய் வழக்கால் தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுவிட்டதாகவும், வழக்கில் தான் நிரபராதி என்று நிரூபிக்கப்பட்டாலும், தன்னை ஒரு குற்றவாளியைப் போலவே இந்த சமுதாயம் கருதுவதாகக் கூறி தில்லி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.


தொழில் நுட்ப வசதியை பெறும் வகையில் விரைவில் 'டிஜிட்டல்' கிராமங்கள் தொடங்கப்படும்: - ரவி சங்கர் பிரசாத்
[Monday 2016-01-11 21:00]

இந்தியாவிலுள்ள அனைத்து கிராமங்களும் தொழில்நுட்ப வசதியை பெறும் வகையில் விரைவில் 'டிஜிட்டல்' கிராமங்கள் தொடங்கப்படும் என மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் கூறினார்.பிகி (FICCI) சார்பில் புது தில்லியில் இன்று நடைபெற்ற 'ஐ-பாரத்' நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அமைச்சர் பேசியதாவது: இந்தியாவின் அனைத்து கிராமங்களுக்கும் தொழில்நுட்ப வசதியை அளிக்கும் வகையில் 'டிஜிட்டல்' கிராமம் திட்டம் தொடங்கப்படும்.


வீட்டிலே மகள்களை விஞ்ஞானிகளாக உருவாக்கும் பாசத் தாய் இவர்!
[Monday 2016-01-11 18:00]

ராதா, ஈரோடு மாவட்டத்திலுள்ள புஞ்சை புளியம்பட்டி பகுதியில் வசிக்கிறார். இவருடைய கணவர் ராஜசுரேந்திரன். இவர்களுடைய மகள்கள் பவித்ரா, இலக்கியா இருவரும்தான் தேசிய இளம் விஞ்ஞானிகளாக வலம் வந்துகொண்டிருக்கிறார்கள். இவர் களுடைய கண்டுபிடிப்புக்கு தற்போது ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியிடம் இருந்து பரிசும், பாராட்டும் கிடைத்திருக்கிறது. மகள்கள் இருவரும் விஞ்ஞானிகளாக திகழும் மகிழ்ச்சியான தருணத்தில் மனதை வாட்டும் சோகம் ராதாவை பின்தொடர்ந்திருக்கிறது. இவருடைய கணவர் ராஜசுரேந்திரன் சமீபத்தில் மாரடைப்பால் அகால மரணம் அடைந்துவிட்டார். மகள்களை விஞ்ஞானிகளாக உருவாக்குவதற்கு துணை நின்ற கணவரின் இழப்பு ராதாவை வெகுவாக பாதித்து இருக்கிறது. தனது சோகத்தை வெளிப் படுத்தினால், மகள்களின் எதிர்காலம் பாதிக்கப்படும் என்பதை உணர்ந்து, அந்த சோகத்தில் இருந்து மீண்டு மகள்களின் லட்சிய கனவுகளுக்கு கைகொடுக்கும் தன்னம்பிக்கை தாயாக திகழ்ந்து கொண்டிருக்கிறார்.


ஆயுதங்களுடன் பிடிபட்ட அமெரிக்கக் கப்பல் வழக்கு: - 35 பேருக்கு சிறை தண்டனை
[Monday 2016-01-11 11:00]

தூத்துக்குடி துறைமுகத்தில் ஆயுதங்களுடன் அமெரிக்கக் கப்பல் பிடிபட்ட வழக்கில் 35 பேருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்தியக் கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததாகக் கூறி கடந்த 2013ம் ஆண்டு அமெரிக்கக் கப்பலான சீமேன்கார்டூகியா பிடிக்கப்பட்டது. இது குறித்த வழக்கை விசாரித்து வந்த தூத்துக்குடி நீதிமன்றம், பிடிபட்ட 35 பேருக்கும் தலா 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. உக்ரைன் நாட்டைச் சேர்ந்த 3 பேர், எஸ்டோனியாவைச் சேர்ந்த 14 பேர், பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த 6 பேர், இந்தியர்கள் 12 பேர் உட்பட 35 பேருக்கு தலா 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை பிறப்பிக்கப்பட்டுள்ளது.


ஒடிசா மாநிலத்தில் முக கிரீம் டியூப்பை விழுங்கிய நல்லபாம்பு: - அறுவை சிகிச்சை செய்து காப்பாற்றிய டாக்டர்கள்
[Monday 2016-01-11 11:00]

ஒடிசா மாநிலம் புவனேஷ்வர் நகரில் வாடகை குடியிருப்பு உள்ளது. இங்கு புகுந்த ஒரு நல்ல பாம்பு முக கிரீம் டியூப்பை விழுங்கி விட்டது. வயிற்றுக்குள் சென்ற அந்த டியூப்பால் பாம்பால் ஊர்ந்து செல்ல முடியவில்லை. உயிருக்கு போராடிக் கொண்டு இருந்தது. இதனை கண்ட அப்பகுதி மக்கள் பாம்பு பிடி வீரர்களுக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் மெகா விவசாய பல்கலைக்கழக பேராசிரியர்களும் வந்தனர்.


உலகின் மிகச் சிறந்த சுற்றுலா தலங்களாக மதுரை மீனாட்சி அம்மன் மற்றும் தஞ்சை பெரிய கோவில் தேர்வு:
[Monday 2016-01-11 07:00]

உலகின் மிகச் சிறந்த சுற்றுலா தலங்களாக மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மற்றும் தஞ்சை பெரிய கோவில் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவில் வெளியாகும் நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை ஒவ்வொரு ஆண்டும் மிகச் சிறந்த சுற்றுலா தலங்கள் குறித்த பட்டியலை வெளியிட்டு வருகிறது. இந்த நிலையில் 2016ஆம் ஆண்டு, மிகச் சிறந்த சுற்றுலா தலங்கள் குறித்த பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில், 52 சுற்றுலா தலங்கள் இடம் பெற்றுள்ளது. குறிப்பாக, உலகின் மிகச் சிறந்த சுற்றுலா தலங்களாக மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மற்றும் தஞ்சை பெரிய கோவில் தேர்வு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள கோவில்கள், கலாச்சார பெருமை வாய்ந்தவை என அதில் குறிப்பிடப்படுள்ளது.

Kugeenthiran-200-2022-seithy
 gloriousprinters.com 2021
Airlinktravel-2020-01-01
Ambikajewellers-01-08-2021-seithy
NKS-Ketha-04-11-2021
Asayan-Salon-2022-seithy
Rajeef sebarasha 2023/04/19
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Mahesan-Remax-169515-Seithy
Vaheesan-Remax-2016
Karan Remax-2010
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா