|
|
ஹீரோ ஆகும் KPY பாலா: கனவை நிறைவேற்றிய முன்னணி நடிகர்!
[Monday 2024-04-15 06:00]
|
விஜய் டிவியின் கலக்கப்போவது யாரு, குக் வித் கோமாளி உள்ளிட்ட பல ஷோக்களில் காமெடியனாக கலக்கி பாப்புலர் ஆனவர் பாலா. அவருக்கு அதிகம் ரசிகர்களும் இருக்கின்றனர். சமீப காலமாக பாலா தான் சம்பாதித்த பணத்தை கொண்டு பலருக்கும் உதவிகள் செய்து வருகிறார். மலை கிராமங்களுக்கு ஆம்புலன்ஸ் வாங்கி கொடுப்பது, மாற்று திறனாளிகளுக்கு வண்டி வாங்கி கொடுப்பது உள்ளிட்ட பல்வேறு உதவிகளை அவர் செய்து வருகிறார்.
|
|
|
இரண்டு நாட்களில் வசூலை வாரிக்குவித்த மகாராஜா!
[Sunday 2024-06-16 08:00]
|
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கும் நடிகர் விஜய் சேதுபதியின் நடிப்பில் கடந்த 14ஆம் தேதி வெளிவந்த திரைப்படம் மகாராஜா. இது விஜய் சேதுபதியின் 50வது திரைப்படமாகும். இப்படத்தை பிரபல இயக்குனர் நித்திலன் இயக்கியுள்ளார். இவர் இயக்கத்தில் ஏற்கனவே குரங்கு பொம்மை எனும் திரைப்படம் வெளிவந்து மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
|
|
|
அஜித் நடிப்பதாக இருந்து கைவிடப்பட்ட திரைப்படம்!
[Sunday 2024-06-16 08:00]
|
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் அஜித் தற்போது விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி என கைவசம் இரண்டு திரைப்படங்களை வைத்துள்ளார். இதில் மகிழ் திருமேனி இயக்கி வரும் விடாமுயற்சி திரைப்படத்தின் படப்பிடிப்பு சில காரணங்களால் தள்ளிவைக்கப்பட்ட நிலையில், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகும் குட் பேட் அக்லி படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக துவங்கியது.
|
|
|
அமைச்சர்களுக்கு அறிவுரை சொன்ன கவிஞர் வைரமுத்து!
[Saturday 2024-06-15 17:00]
|
துபாய் சென்றுள்ள கவிஞர் வைரமுத்து அங்குள்ள கழிவு மேலாண்மை குறித்து வியந்து, அமைச்சர்களுக்கு அறிவுரை ஒன்றை தெரிவித்துள்ளார். உலக அளவில் திடக்கழிவு மேலாண்மை பெரும் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. உலகம் முழுவதும் உள்ள மக்கள் டன் கணக்கில் குப்பைகளை கொட்டுகின்றனர். இதனால், குப்பைகளை தரம் பிரித்து ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்வதற்கு அரசுக்கு பெரிய பிரச்சனையாக உள்ளது.
|
|
|
தனுஷ் மீது பாய்ந்த வழக்கு!
[Saturday 2024-06-15 17:00]
|
பட்ட காலிலேயே படும் கெட்ட குடியே கெடும் என்பார்கள். இந்த பழமொழி இப்போது தனுஷ் வீட்டிற்கு சரியாக பொருந்தி விட்டது. தனுஷுக்கும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவருக்கும் இடையே விவாகரத்து அறிவிப்பு வெளியானதில் இருந்தே தனுஷ் ரொம்பவும் சைலன்ட் ஆக தான் இருக்கிறார்.
|
|
|
பிரமாண்டமாக உருவாகும் "புஷ்பா 2"!
[Saturday 2024-06-15 17:00]
|
அல்லு அர்ஜுன் திரைப்பயணத்தில் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது புஷ்பா. இப்படத்தை இயக்குனர் சுகுமார் இயக்கி இருந்தார். இசையமைப்பாளர்தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைப்பில் வெளியான பாடல்கள் அனைத்துமே நல்ல வரவேப்பை பெற்றது. அண்மையில் புஷ்பா 2 படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றது. தற்போது இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகிறது.
|
|
|
படையப்பா ரஜினியுடன் நடிக்க மறுத்த மீனா!
[Saturday 2024-06-15 06:00]
|
நடிகர் ரஜினி கெரியரில் மிகப்பெரிய ஹிட் ஆன படம் படையப்பா. அதில் நீலாம்பரியாக நடித்த ரம்யா கிருஷ்ணனின் நடிப்பை பற்றி தற்போதும் மக்கள் பேசுகிறார்கள். அந்த அளவுக்கு அந்த ரோலில் மிரட்டி இருந்தார் ரம்யா கிருஷ்ணன். நீலாம்பரி ரோலுக்கு முதலில் மீனாவை தான் நடிக்க கேட்டாராம் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார். ஆனால் இதுவரை பாசிட்டிவ் ஆக நடித்துவிட்டு திடீரென நெகடிவ் ஆக, அதுவும் ரஜினிக்கு எதிராக நடிக்க முடியுமா என குழப்பத்தில் இருந்தாராம் மீனா.
|
|
|
சன்னி லியோன் நிகழ்ச்சிக்கு தடை: கேரள ரசிகர்கள் அதிர்ச்சி!
[Saturday 2024-06-15 06:00]
|
நடிகை சன்னி லியோன் ஆபாச படங்கள் மூலமாக உலக அளவில் பிரபலம் ஆனவர். அவர் தற்போது இந்திய சினிமாவில் கவர்ச்சி ரோல்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். படங்களில் நடிப்பது மட்டுமின்றி அவ்வப்போது சில நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு டான்ஸ் ஆடுகிறார். அதன் மூலமாக அவருக்கு பெரிய வருமானமும் கிடைக்கிறது.
|
|
|
விஜயகாந்த் மாதிரி மற்றும் ஒரு இறந்த பிரபலத்தை கௌரவிக்கும் வெங்கட் பிரபு!
[Friday 2024-06-14 18:00]
|
பொதுவாக வெங்கட் பிரபு படம் சும்மா போற போக்குல ஒரு கதையை எடுக்கலாம் என்று நினைத்து ஜாலியாக எடுக்கக் கூடியவர். ஆனால் எப்படியாவது ஒரு வெற்றியை தொட்டுவிடும். அதுவும் முன்னணி நடிகர்களுக்கு இவருடைய படம் பெரிய அளவில் கை கொடுத்திருக்கிறது. அந்த வகையில் அஜித்துக்கு மங்காத்தா சிம்புவுக்கு மாநாடு போன்று இரண்டு படங்களையும் பிளாட்பஸ்டர் ஹிட் கொடுத்து இருக்கிறார்.
|
|
|
சந்தானத்தை விட தெளிவாக சூரி போடும் திட்டம்!
[Friday 2024-06-14 18:00]
|
சிவகார்த்திகேயனைப் பார்த்து பறக்க ஆசைப்பட்ட சந்தானம் இன்று இறக்கை உடைந்து தரையில் நடக்க ஆரம்பித்து விட்டார். ஹீயூமர் காமெடியில் பட்டையை கிளப்பி வந்த சந்தானம் ஹீரோவாக நடிக்க தொடங்கிய பின் தனியாக படத்தில் காமெடி பண்ணுவதை நிறுத்திவிட்டார்.
|
|
|
"ராட்சசன் 2" திரைப்படத்தின் அப்டேட்!
[Friday 2024-06-14 18:00]
|
விஷ்ணு விஷால் - ராம்குமார் கூட்டணியில் உருவாகி கடந்த 2018ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் ராட்சசன். இதற்கு முன் இந்த கூட்டணியில் வெளிவந்த முண்டாசுப்பட்டி திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாவது முறையாக இவர்கள் இருவரும் மீண்டும் இணைந்து கொடுத்த திரைப்படம் தான் இது.
|
|
|
நேருக்கு நேர் படத்தில் இருந்து அஜித் விலக உண்மையான காரணம் எது தெரியுமா?
[Friday 2024-06-14 06:00]
|
நடிகர் அஜித் மற்றும் விஜய் ஆகியோருக்கு எந்த அளவுக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள் என சொல்லி தெரியவேண்டியது இல்லை. கோலிவுட் டாப் ஹீரோக்களாக வலம் வரும் அவர்கள் தற்போது ஒரு படத்தில் இணைந்து நடித்தால் ரெஸ்பான்ஸ் எப்படி இருக்கும் என சொல்லவா வேண்டும்.
|
|
|
"எல்லா ஆண்களும் அப்படி இல்லை" - யாரை சொல்கிறார் ராஷ்மிகா?
[Friday 2024-06-14 06:00]
|
நடிகை ராஷ்மிகா தென்னிந்தியாவை தாண்டி ஹிந்தியிலும் முக்கிய நடிகையாக வலம் வர தொடங்கி இருக்கிறார். அவர் நடித்த அனிமல் படம் கடந்த வருடம் ரிலீஸ் ஆகி ஆயிரம் கோடிக்கும் மேல் வசூலித்தது. அவ்வளவு வசூல் வந்தாலும் அதன் கதை கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. பெண்களை மோசமாக நடத்தும் வகையில் வந்த காட்சிகளை பற்றி பலரும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர்.
|
|
|
அரிய வகை கருப்பை நோயால் பாதிக்கப்பட்ட நடிகை!
[Thursday 2024-06-13 18:00]
|
நடிகை அடா சர்மா அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்தி வெளியாகியுள்ளது. தென்னிந்தியாவின் முன்னணி நடியாக இருக்கும் சமந்தா மயோசிடிஸ் என்ற தசை அழற்சி நோயால் பாதிக்கபட்டிருந்தார். தீவிர சிகிச்சைக்கு பின்னர் தற்போது தான் கொஞ்சம் நலமாக இருக்கிறார்.
|
|
|
ரெண்டு கெட்டான் நிலைமையில் தள்ளாடும் விஜய் சேதுபதி!
[Thursday 2024-06-13 18:00]
|
ஒரு படம் திரையரங்குகளில் வருகிறது என்றால் நாம் எல்லாம் குடும்பத்துடன் பார்ப்பதற்கு எப்படி குதூகலமாக இருக்கிறோமோ அதைவிட ப்ளூ சட்டை மாறன் புது படத்திற்கு விமர்சனம் கொடுக்க முதல் ஆளாக வந்து விடுவார். அதுவும் இவர் கொடுக்கிற விமர்சனம் நிச்சயமாக நல்லவிதமாக இருக்காது. அந்தப் படத்தின் கதையையும், நடித்த ஆர்டிஸ்ட்களையும், எடுத்த இயக்குனர்களையும் வச்சு செய்யும் அளவிற்கு சம்பவத்தை செய்துவிட்டு போய்விடுவார்.
|
|
|
மீசைய முறுக்கு பட நடிகர் வீட்டில் சடலமாக மீட்பு!
[Thursday 2024-06-13 18:00]
|
தெகிடி, மீசைய முறுக்கு, இரும்புத்திரை, மேயதா மான், லிப்ட் உள்ளிட்ட படங்களில் குண சித்தர கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் தான் நடிகர் பிரதீப் விஜயன். சென்னையில் அவரது வீடு இரண்டு நாட்கள் திறக்காமல் இருந்த நிலையில், அவருடைய நண்பர்கள் கோட்டூர்புரம் காவல்துறையை அணுகி பூட்டை உடைத்துள்ளனர். அப்போது அந்த வீட்டில் பிரதீப் சடலமாகமீட்கப்பட்டுள்ளார்.
|
|
|
பிரேம்ஜியை புறக்கணித்து பிரபல நடிகர் மகன் திருமணத்திற்கு சென்ற இளையராஜா!
[Thursday 2024-06-13 06:00]
|
நடிகர் பிரேம்ஜியின் திருமணம் சமீபத்தில் நடைபெற்று முடிந்தது. 45 வயதாகும் பிரேம்ஜிக்கு பெற்றோர் ஏற்பாடு செய்த திருமணம் மிக சிம்பிளாக நடந்தது. இந்து என்ற பெண்ணை கரம்பிடித்த பிரேம்ஜிக்கு நடிகர்கள் பலரும் வந்து வாழ்த்து கூறினார்கள். ஆனால் இளையராஜா மட்டும் வரவில்லை.
|
|
|
கவுண்டமணி ஏன் பேட்டி கொடுப்பதில்லை? - சத்யராஜ் சொன்ன காரணம்!
[Thursday 2024-06-13 06:00]
|
நடிகர் கவுண்டமணி தமிழ் சினிமாவில் காமெடி ஜாம்பவானாக வலம் வந்தவர். வயதான பிறகு சினிமாவில் இருந்து ஒதுங்கி இருக்கும் அவர் சமீபகாலமாக அவ்வப்போது ஹீரோவாக படங்கள் நடிக்கிறார். கவுண்டமணி என்னதான் கோலிவுட்டில் முன்னணி நட்சத்திரமாக இருந்தாலும் மீடியாவுக்கு பேட்டி கொடுப்பது மிக மிக குறைவு தான்.
|
|
|
புஷ்பா ரசிகர்களுக்கு பெரிய அதிர்ச்சி தகவல்!
[Wednesday 2024-06-12 18:00]
|
அல்லு அர்ஜுன், ராஷ்மிகா, பஹத் பாசில் நடித்து இருக்கும் புஷ்பா படத்தின் இரண்டாம் பாகம் தற்போது இறுதி கட்டத்தில் இருக்கிறது. கடந்த மாதம் புஷ்பா 2 படத்தின் சிங்கிள் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. புஷ்பா 2 ரிலீசுக்கு இன்னும் இரண்டு மாதங்களே இருப்பதால் அடுத்து படத்தின் அப்டேட்கள் வர தொடங்கும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர்.
|
|
|
ரஜினியுடன் இரண்டாவது முறையாக இணையும் முன்னணி நடிகர்!
[Wednesday 2024-06-12 18:00]
|
லோகேஷ் கனகராஜ் முதல் முறையாக ரஜினிகாந்துடன் கைகோர்த்துள்ள திரைப்படம் கூலி. இப்படத்தை சன் பிச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இசையமைக்கிறார். லியோ படத்தை தொடர்ந்து லோகேஷ் இயக்கும் இப்படத்திற்காக அவர் ரூ. 60 கோடி சம்பளம் வாங்குவதாக பிரபல பத்திரிகையாளர் தெரிவித்து இருந்தார்.
|
|
|
அரசியல் கதைக்களத்தில் சிவகார்த்திகேயன்!
[Wednesday 2024-06-12 18:00]
|
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கும் சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது அமரன் மற்றும் எஸ்.கே. 23 ஆகிய படங்கள் உருவாகி வருகிறது. இதில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகி வரும் அமரன் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. மேலும் தற்போது ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் எஸ்.கே. 23 திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
|
|
|
மோசமான குணத்தை மாற்றாமல் கண்டதை பேசும் ஸ்ருதிஹாசன்!
[Wednesday 2024-06-12 06:00]
|
உலக நாயகன் கமலின் வாரிசான ஸ்ருதிஹாசன் இன்று சினிமாவில் இருக்கும் இடமே தெரியாமல் போய்விட்டார். இவர் நடிப்பில் வெளிவர இருந்த பல சூப்பர் ஹிட் படங்களை தன்னுடைய மோசமான ஆட்டிடியூடால் இழந்துள்ளார். சித்தார்த், நாக சைதன்யா, தனுஷ் என இளம் நடிகர்களுடன் டேட்டிங் ரிலேஷன்ஷிப்பில் இருந்த இவர் தமிழ் சினிமாவே வேண்டாம் என தெலுங்கு, ஹிந்தி பக்கம் சென்று விட்டார்.
|
|
|
தீவிர ஆன்மீகத்தில் இறங்கிய சமந்தா!
[Wednesday 2024-06-12 06:00]
|
நடிகை சமந்தா மயோசிட்டிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்ட பிறகு அதற்காக சிகிச்சை பெற்றுக்கொண்டே ஆன்மீகத்தில் அதிகம் ஈடுபட்டு வருகிறார்.
|
|
|
தடபுடலாக முடிந்த அர்ஜுன் மகள் திருமணம்!
[Tuesday 2024-06-11 18:00]
|
அர்ஜுன் ஹீரோவாக நடித்த காலத்திலிருந்து இப்பொழுது வரை படு பிசியான ஒரு நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். அதிலும் இப்பொழுது இவர் ஏற்கும் கதாபாத்திரங்கள் அனைத்தும் ஹீரோவுக்கு வில்லனாக தான். ஆனாலும் ஹீரோவுக்கு இணையாக பேசக்கூடிய அளவிற்கு இவருடைய நடிப்பை கொடுத்து வருகிறார்.
|
|
|
70 வயதிலும் 3 சவாலான வேடங்களில் கமல்!
[Tuesday 2024-06-11 18:00]
|
ஒருமுறை வெற்றியை ருசித்து விட்டால் தொடர்ந்து அதை நோக்கி மட்டுமே நம் கவனம் போகும். அப்படித்தான் சினிமாவில் இருக்கும் சில முக்கியமான நடிகர்கள் தொடர் வெற்றியை கொடுத்து இப்பொழுது வரை ஜெயித்துக் கொண்டு வருகிறார்கள். இதில் முக்கியமான இடத்தில் கமல்ஹாசனும் இடம் பிடித்திருக்கிறார். கிட்டத்தட்ட 5 வயதில் குழந்தை நட்சத்திரமாக சினிமாவிற்குள் அறிமுகமானார்.
|
|
|
பிரேம்ஜிக்கும், அவரது மனைவிக்கு இவ்வளவு வயது வித்தியாசமா?
[Tuesday 2024-06-11 18:00]
|
கங்கை அமரன், தமிழ் சினிமாவில் இசையமைப்பாளர், பாடகர், இயக்குனர், நடிகர் என பன்முக திறமை கொண்டவர். இவரது முதல் மகன் வெங்கட் பிரபு, தமிழ் சினிமாவில் நடிகராகவும், இயக்குனராகவும் கலக்கி வருகிறார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித்தை வைத்து மங்காத்தா படத்தை இயக்கியவர் தற்போது விஜய்யை வைத்து கோட் படத்தை இயக்கி வருகிறார்.
|
|
|
3 நாள் படப்பிடிப்பில் கோடிக்கணக்கில் சுருட்டிய கமல்!
[Tuesday 2024-06-11 06:00]
|
கடந்த இரண்டு ஆண்டுகளாக கமல் மாதிரி ஒரு பிசியான ஆர்டிஸ்ட்டை தமிழ் சினிமாவில் யாரும் பார்த்ததில்லை அந்த அளவிற்கு பிஸியாக நடித்து வருகிறார். 24 மணி நேரத்தில் கிட்டத்தட்ட 16 மணி நேரம் வேலை செய்கிறாராம். சமீப காலமாக அரசியலை ஓரங்கட்டி விட்டு முழு கவனத்தை சினிமாவில் காட்டி வருகிறார்.
|
|
|
வேட்டையன் திரைப்படத்தின் உரிமைகளை கைப்பற்றிய முன்னணி நிறுவனங்கள்!
[Tuesday 2024-06-11 06:00]
|
ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்ததாக திரைக்கு வரவிருக்கும் படம் வேட்டையன். இப்படத்தை TJ ஞானவேல் இயக்கியுள்ளார். இவர் இயக்கத்தில் இதற்குமுன் ஜெய் பீம் திரைப்படம் வெளிவந்து வெற்றிபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
|
|
|
சகிலா சொன்னதை பொய்யாக்க பயில்வான் செய்த காரியம்!
[Monday 2024-06-10 18:00]
|
நடிகர் மற்றும் சினிமா விமர்சகர்மான பயில்வான் ரங்கநாதன் ஆரம்பத்தில் நடிகராக பயணித்து வந்தாலும் சமீப காலமாக மற்றவர்களுடைய விஷயங்களில் மூக்கை நுழைத்து அதை முச்சந்தியில் உடைக்கு விதமாக வேலை பார்த்து வருகிறார். இதனால் பலருடைய வெறுப்பை சம்பாதித்து சர்ச்சைக்குரிய நபராக மாறி இருக்கிறார்.
|
|
|
|