Untitled Document
April 26, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
கிழக்கில் மாட்டு பண்ணை அமைக்கபடவில்லை! 2016 CTC நிதிசேர் நடையில் சேர்த்த பணம் எங்கே? - கனடாவில் வியாழேந்திரன் குற்றச்சாட்டு. Top News
[Wednesday 2018-10-31 18:00]

கனடாவில் இருக்கும் CTC (கனேடியத் தமிழர் பேரவை; Canadian Tamil Congress) அமைப்பின் அழைப்பின் பேரில் கனடா வந்தபின் இனிமேல் நான் எந்த நாட்டிற்கும் உதவி கேட்டு போகக்கூடாது என்று யோசித்தேன் ஏனெனில் கனடாவில் கிடைத்த அனுபவம். நேற்று மாலை மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் அவர்களுடன் ஓர் சந்திப்பு நிகழ்வு சங்கமம் மண்டபத்தில் (Sankkamam Party Hall Scarborough ont ,Oct 30, 2018) நடைபெற்றது. முகநூல் வாயிலாகவும், வானொலிகள் வாயிலாகவும் இந்த சந்திப்பு கடந்த 2 நாட்களாக அறிவிக்கப்பட்ட நிலையிலும் சந்திப்புக்கு மிகவும் குறைந்த மக்களே வந்திருந்தார்கள்.

முன்னணி அமைப்புகள் என்று கூறிக்கொள்ளும் அமைப்புக்கள் எதுவும் இந்த நிகழ்வை நடத்தவில்லை, ஆனால் முன்னனி அமைப்புகளின் முகத்திரை இங்கு கிழித்து தொங்கவிடப்பட்டது வந்தவர்களிடம் பெரும் ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. 2016 இல் CTC (கனேடியத் தமிழர் பேரவை; Canadian Tamil Congress) அமைப்பினரால் கிழக்கில் மாட்டு பண்ணை அமைக்கவென நடந்த நிதிசேர் நடையில் சேகரிக்கப்பட்ட பணத்தில் (1.1 கோடி ரூபாக்கள் | $85,000.00) இதுவரை, 2 வருடங்கள் கடந்துவிட்ட நிலையில், எந்தவிதமான பணமும் அங்கு சென்று சேரவில்லை.

மக்களின் அவசர வாழ்வாதார உதவிகள் என்று எமது மக்களிடம் சேர்த்த பணம் 2 வருடங்களாக இங்குள்ள அமைப்பே (CTC) வைத்திருக்கின்ற விடயம், போட்டுடைத்தார் கிழக்கின் பாராளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் அவர்கள். கனடிய தமிழ் காங்கிரஸ் 2016 இல் மக்களின் அவசர வாழ்வாதாரத்துக்கென நிதிசேர் நடையில் சேர்த்த பணம் இதுவரை அந்த மக்களை எந்த வகையிலும் சென்று சேரவில்லை.

அனுப்பி வைக்கப்படாமைக்கு ஆயிரம் காரணங்களை, கதைகளை சொல்லலாம். ஆனால் மக்களின் அவசர வாழ்வாதார பிரச்சனைகளை காரணமாக சொல்லி சேர்த்த பணம் கடந்த இரண்டு வருடங்களாக அனுப்பிவைக்கப்படாமை ஏற்றுக்கொள்ளக்கூடியது அல்ல என பலரும் விசனமடைந்தனர். 2016 பின்பும் வேறு காரணங்களை சொல்லி மேலும் பல நிதிசேர் நிகழ்வுகளை இந்த CTC அமைப்பு நடத்தியுள்ளது. தாயக நோக்கிய உதவிநலத்திட்ட செயல்பாடுகளில் CTC அமைப்பின் இவ்வாறான தாமதப் போக்குகள் மக்கள் மத்தியில் அந்த அமைப்பின் மீதான நம்பகத்தன்மையை மேலும் குறைவடையச்ச்செய்யும் என்பது பலரதும் கருத்தாக அமைகிறது.

தற்போது வியாழேந்திரன் கனடாவில் ஊடக சந்திப்புகளை நடாத்திவருகிறார். மட்டக்கள்ப்பில் வாழ்வாதார உதவிகள் பல கிராமங்களில் செய்யப்படவேண்டிய அவசியத்தையும் விளக்கிவருகிறார். கனேடியத் தமிழர் பேரவையிடமிருந்து மேற்படி குற்றச்ச்சாட்டுக்கான பதில் அல்லது விளக்கம் கிடைக்குமிடத்து அதை மக்களிடம் எடுத்துவருவோம் செய்தி குழுமம் தெரிவித்துக்கொள்கிறது .

  
  
   Bookmark and Share Seithy.com


 gloriousprinters.com 2021
Ambikajewellers-01-08-2021-seithy
Kugeenthiran-200-2022-seithy
Vaheesan-Remax-2016
Asayan-Salon-2022-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Mahesan-Remax-169515-Seithy
Airlinktravel-2020-01-01
Rajeef sebarasha 2023/04/19
Karan Remax-2010
NKS-Ketha-04-11-2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா