Untitled Document
October 25, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தில், பிரித்தானியாவில் நீதிக்காகத் திரண்ட மக்கள்! Top News
[Wednesday 2026-09-02 07:00]

தாயகத்தில் 1990ஆம் ஆண்டு தொடக்கம் இன்று வரை வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகளை நினைவுகூர்ந்தும், அவர்களுக்கான உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறலை வலியுறுத்தியும், பிரித்தானியாவில் நேற்று ஆகஸ்ட் 30ஆம் திகதி நினைவேந்தல் நடைபயணமும் அமைதிவழிப் போராட்டமும் இடம்பெற்றது. நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஏற்பாட்டில், லண்டன் Trafalgar Square மற்றும் லிவர்பூல் ஆகிய இடங்களில் நடைபெற்ற நிகழ்வுகளில், பெருமளவான தமிழ் சமூகத்தினர், ஆதரவாளர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

லிவர்பூல் லைம் ஸ்ட்ரீட் ரயில் நிலையத்திலிருந்து ஆரம்பமான அமைதி நடைபயணம், நகரின் முக்கிய பகுதிகளைக் கடந்து எவர்டன் பார்க் பகுதியைச் சென்றடைந்தது. நடைபயணத்தில், தாயகத்தில் பல்வேறு காலகட்டங்களில் இடம்பெற்ற வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள் மற்றும் செம்மணி மனிதப் புதைகுழிகள் தொடர்பான பதாகைகள் மற்றும் காலவரிசை விளக்கப் பலகைகளை பங்கேற்பாளர்கள் ஏந்திச் சென்றனர்.

எவர்டன் பார்க்கில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வில், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்கள் பல தசாப்தங்களாக முன்னெடுத்து வரும் போராட்டம் குறித்தும், செம்மணி மனிதப் புதைகுழிகளில் இருந்து வெளிவரும் சாட்சியங்கள் குறித்தும் விளக்கங்கள் வழங்கப்பட்டன.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சர்வதேச தினத்தை முன்னிட்டு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வெளியிட்ட “எலும்புகள் பேசத் தொடங்கியுள்ளன... எலும்புக் கூடுகள் சாட்சியம் அளிக்கத் தயாராக உள்ளன.” என்ற காத்திரமான செய்தியைக் கொண்ட காணொளியும் நிகழ்வில் ஒளிபரப்பப்பட்டது.

செம்மணி மனிதப் புதைகுழிகளில் இருந்து மீட்கப்படும் மனித எச்சங்கள், கடந்தகாலத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பான முக்கிய தடயவியல் சாட்சியங்களாக அமையக்கூடும் என்பதுடன், அவை உரிய முறையில் பாதுகாக்கப்பட்டு அறிவியல் ரீதியாக ஆய்வு செய்யப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.

நிகழ்வில் உரையாற்றிய லிபரல் கட்சியின் கவுன்சிலர் Steve Radford, உக்ரைன் மற்றும் தென் சூடானில் இடம்பெற்ற மோதல்களைச் சுட்டிக்காட்டியதுடன், இலங்கையில் இடம்பெற்ற கடத்தல்கள் மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்களுக்கும் நீதி கிடைக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

உலகின் எந்தப் பகுதியில் மனிதகுலத்திற்கு எதிரான வன்முறைகள் இடம்பெற்றாலும், சர்வதேச சமூகம் மௌனமாக இருக்க முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.

அதேவேளை, இலங்கையில் தமிழர்கள் நீண்டகாலமாக எதிர்கொண்டுவரும் அரசியல் பிரச்சினைகளுக்கு அமைதியான, ஜனநாயகபூர்வமான மற்றும் நிலையான அரசியல் தீர்வு அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இதனிடையே, செம்மணி மனிதப் புதைகுழிகள் தொடர்பான அகழ்வுகள் மற்றும் தடயவியல் விசாரணைகளை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆனையகம் கையேற்க வேண்டும் எனவும் நிகழ்வில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

மீட்கப்படும் மனித எச்சங்கள் அறிவியல் ரீதியாக அடையாளம் காணப்பட்டு, குடும்பங்களிடம் கண்ணியமாக ஒப்படைக்கப்பட வேண்டும்.

அத்துடன், DNA உள்ளிட்ட தடயவியல் ஆதாரங்கள் பாதுகாக்கப்பட்டு ஸ்ரீ லங்காவை பொறுப்புக்கூறலுக்கு உள்ளாக்க வேண்டும். சம்பவங்களுக்குப் பொறுப்பானவர்கள் எந்தப் பதவியில் இருந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.

பல தசாப்தங்களாக நீதிக்காகக் காத்திருக்கும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்களின் குரலை சர்வதேச சமூகத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் இந்த நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றன.

  
  
   Bookmark and Share Seithy.com


Kugeenthiran-200-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Karan Remax-2010
Asiaan-Salon-2022-seithy
 gloriousprinters.com 2021
Vaheesan-Remax-2016
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா