Untitled Document
October 25, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
ஒன்ராறியோ அரசு சென்டினரி மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவு விரிவாக்கத்திற்காக 82 மில்லியன் டொலர் முதலீடு செய்கிறது! Top News
[Friday 2026-08-07 07:00]

கடந்த செவ்வாய்க்கிழமை, ஆகஸ்ட் 4 அன்று, ஸ்காபரோ ரூஜ் பார்க் சட்டமன்ற உறுப்பினரும் சுகாதார இணை அமைச்சருமான விஜய் தணிகாசலம் அவர்கள், துணை முதல்வரும் சுகாதார அமைச்சருமான சில்வியா ஜோன்ஸ் மற்றும் ஸ்காபரோ சட்டமன்ற உறுப்பினர்கள் ரேமண்ட் சோ, டேவிட் ஸ்மித் ஆகியோருடன் இணைந்து, ஸ்காபரோ சுகாதார வலையமைப்பின் சென்டினரி மருத்துவமனையில் புதிய மற்றும் விரிவாக்கப்பட்ட அவசர சிகிச்சைப் பிரிவுக்கான கட்டுமானப் பணிகளை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைத்தார்.

ஒன்ராறியோ அரசின் 82 மில்லியன் டொலருக்கும் அதிகமான முதலீட்டின் ஆதரவுடன் அமைக்கப்படும் இந்த புதிய அவசர சிகிச்சைப் பிரிவு, தற்போதைய அவசர சிகிச்சைப் பிரிவை விட 36,000 சதுர அடிக்கும் அதிகமாக விரிவுபடுத்தப்படவுள்ளது. இதன் மூலம் வேகமாக வளர்ந்து வரும் ஸ்காபரோ மக்கள் தொகைக்கு விரைவான, வசதியான மற்றும் உயர்தர அவசர மருத்துவ சேவைகளை அவர்களின் வீட்டிற்கு அருகிலேயே வழங்குவதற்கான திறன் அதிகரிக்கப்படுவதுடன், இப்பகுதியில் சுமார் 400 நல்ல ஊதியமுள்ள வேலைவாய்ப்புகளும் ஆதரிக்கப்படும்.

“ஸ்காபரோ தொடர்ந்து வளர்ந்து வரும் நிலையில், எமது சமூகத்தின் தேவைகளுக்கு ஏற்ப சுகாதார சேவைகளையும் உட்கட்டமைப்பையும் விரிவுபடுத்துவது மிகவும் முக்கியமானது. சென்டினரி மருத்துவமனையின் இந்த புதிய மற்றும் விரிவாக்கப்பட்ட அவசர சிகிச்சைப் பிரிவு, குடும்பங்கள் அவர்களுக்கு தேவையான நேரத்தில், வீட்டிற்கு அருகிலேயே விரைவான மற்றும் உயர்தர சிகிச்சையைப் பெற உதவும். ஸ்காபரோ மக்களுக்காக இந்த முக்கியமான முதலீட்டை முன்னெடுப்பதில் நான் பெருமையடைகிறேன்,” என சுகாதார இணை அமைச்சர் விஜய் தணிகாசலம் அவர்கள் தெரிவித்தார்.

இந்த முதலீடு, ஸ்காபரோ சுகாதார வலையமைப்பின் ஜெனரல் மற்றும் சென்டினரி மருத்துவமனைகளில் 27 புதிய இரத்த சுத்திகரிப்பு அலகுகளை ஆதரித்தல், ஜெனரல் மருத்துவமனையில் நவீன நோயறிதல் படமெடுப்பு மையத்தை திறத்தல் மற்றும் சுகாதார உட்கட்டமைப்பு புதுப்பிப்பு நிதியை 50 சதவீதத்திற்கும் அதிகமாக அதிகரித்தல் உள்ளிட்ட ஒன்ராறியோ அரசின் தொடர்ச்சியான முதலீடுகளின் அடுத்த கட்டமாக அமைகிறது.

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க விரிவாக்கத்தின் மூலம், ஸ்காபரோ குடும்பங்களுக்கு தலைமுறைகள் கடந்தும் தேவையான உயர்தர மருத்துவ சேவைகளை அவர்களின் சமூகத்திற்கு அருகிலேயே வழங்கும் வலுவான மற்றும் நவீன சுகாதார அமைப்பை உருவாக்குவதில் ஒன்ராறியோ அரசு தொடர்ந்து முன்னேறி வருகிறது.

  
  
   Bookmark and Share Seithy.com


Karan Remax-2010
Kugeenthiran-200-2022-seithy
Vaheesan-Remax-2016
Asiaan-Salon-2022-seithy
 gloriousprinters.com 2021
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா