Untitled Document
October 25, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
தமிழீழ தேசியக்கொடி தொடர்பான இணையவழி கையெழுத்துப் போராட்டச் செய்தியை பிரசுரிக்க அனுமதி கோரல்! Top News
[Monday 2026-06-15 07:00]

ஜெர்மனியில் தமிழர் சமூகத்தின் வரலாற்று மற்றும் தேசிய அடையாளமாக விளங்கும் தமிழீழ தேசியக் கொடியை பாதுகாக்கும் நோக்கில், ஈழத்தமிழர் மக்களவை – ஜெர்மனி (VETD e.V.) சார்பில் ஜனநாயக மற்றும் சட்டப்பூர்வ அடிப்படையில் ஒரு இணையவழி கையெழுத்துப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. தமிழர்களின் வரலாறு, அடையாளம், ஜனநாயக உரிமைகள் மற்றும் தன்னாட்சி உணர்வை பிரதிபலிக்கும் இந்த முயற்சிக்கு உலகத் தமிழர்களின் பரந்த ஆதரவைப் பெற்றுக்கொள்வது மிகவும் அவசியமாக உள்ளது. அதற்காக தங்களது மதிப்புமிக்க இணையத்தளத்தின் ஒத்துழைப்பை அன்புடன் வேண்டிக் கொள்கிறோம்.

உங்கள் இணையத்தளங்களில்,

• இணைக்கப்பட்டுள்ள கட்டுரையை தங்களது இணையத்தளத்தில் பிரசுரித்தல்,

• கையெழுத்துப் போராட்டம் தொடர்பான செய்தி அல்லது அறிக்கையை வெளியிடுதல்,

• கையெழுத்திடும் நடைமுறையை வாசகர்களிடம் அறிமுகப்படுத்துதல்,

• சமூக ஊடகங்கள் மற்றும் இணையத்தளங்கள் வாயிலாக விழிப்புணர்வை பரப்புதல்,

• உலகத் தமிழர்கள் அதிகளவில் இம்முயற்சியில் பங்கேற்க உதவுதல்

போன்ற வழிகளில் ஆதரவு வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

இந்த முயற்சி எந்தவொரு வன்முறையையும் சாராத, ஜனநாயக மற்றும் சட்டப்பூர்வமான மக்கள் ஆதரவு நடவடிக்கையாகும். உலகத் தமிழர்களின் ஒற்றுமையான குரலை வெளிப்படுத்தவும், தமிழர்களின் தேசிய அடையாளத்தை பாதுகாக்கவும் இந்த கையெழுத்துப் போராட்டம் முக்கிய பங்களிப்பை வழங்கும் என நம்புகிறோம்.

இணையவழியில் கையெழுத்திடும் முறை:

1. www.eelamtamil.info இணையத்தளத்தைப் பார்வையிடவும்.

2. Petition பக்கத்திற்குச் சென்று உங்கள் பெயர் மற்றும் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்.

3. "Petition unterschreiben" என்பதை அழுத்தி கையெழுத்திடவும்.

4. பின்னர் உங்கள் மின்னஞ்சலுக்கு வரும் உறுதிப்படுத்தல் இணைப்பை கட்டாயம் அழுத்தி உறுதிப்படுத்தவும்.

5. உறுதிப்படுத்தப்படாத கையெழுத்துகள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படமாட்டாது.

இவ்விடயம் தொடர்பான மேலதிக தகவல்களை www.eelamtamil.info இணையத்தளத்திலும், vetd_official சமூக வலைத்தளப் பக்கத்திலும் அறிந்து கொள்ளலாம்.

மேலும் தகவல்கள் அல்லது விளக்கங்களுக்கு:

மின்னஞ்சல்: Media.vetd@gmail.com

"எங்கள் கொடி – எங்கள் அடையாளம் – எங்கள் உரிமை"

உலகத் தமிழர்களின் ஒற்றுமையான குரலை வலுப்படுத்தும் இந்த முயற்சிக்கு தங்களது ஒத்துழைப்பையும் ஆதரவையும் எதிர்பார்க்கிறோம்.

நன்றி.

மரியாதையுடன்,

ஈழத்தமிழர் மக்களவை – ஜெர்மனி (VETD e.V.)

  
  
   Bookmark and Share Seithy.com


Vaheesan-Remax-2016
 gloriousprinters.com 2021
Karan Remax-2010
Kugeenthiran-200-2022-seithy
Asiaan-Salon-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா