Untitled Document
October 25, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
அறிவகம் நடத்திய அனைத்துலகத் தமிழ்மொழி இறுதித் தேர்வு 2026! Top News
[Tuesday 2026-06-09 08:00]

அனைத்துலகத் தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் பாடத்திட்டங்களுக்கு அமைய, June 06, 2026 அன்று அறிவகத்தால் நடத்தப்பட்ட அனைத்துலகத் தமிழ்மொழித்தேர்வு வடஅமெரிக்கா எங்கும் சிறப்பாக நடைபெற்றது. அமெரிக்கா உள்ளிட்ட கனடிய மாகாணங்கள் பலவற்றிலும் இயங்கிவரும் அறிவகத் தமிழ்ப் பள்ளிகள் அனைத்திலும் பயிலும் மாணவர், நகரங்கள் தோறும் ஒழுங்குசெய்யப்பட்ட தேர்வுமையங்களில் தேர்வுகளை எழுதினர்.

வழமைபோல் ஏறக்குறைய ஆறாயிரத்துக்கும் அதிகமான மாணவர் தேர்வில் பங்குபற்றினர். ஒரே நாளில் நடைபெற்ற அனைத்துலகம் எங்கும் நடைபெற்ற தேர்வுகள் என்பதற்கேற்ப, சில ஐரோப்பிய மாணவர் இங்கு நடைபெற்ற தேர்வில் கலந்துகொண்டனர். அதேபோன்று சில கனடிய மாணவரும் ஐரோப்பிய நாடுகளில் நடைபெற்ற தேர்வில் இணைந்து கொண்டிருந்தனர்.

ஆசிரியரும் பெற்றோர் பலரும் மேற்பார்வையாளராகவும் தொண்டராகவும் பணியாற்றித் தேர்வுகள் சிறப்பாக நடைபெற உதவினர். தேர்வில் கலந்துகொண்ட மாணவருக்கான பெறுபேற்று வெற்றிக் கிண்ணங்கள், சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வுகள் எதிர்வரும் October மாதம் நடைபெறவுள்ளன.

நிறைவுத் தேர்வு சிறப்பாக நடைபெற்று நிறைவு பெறுவதற்குப் பெருந்துணையாகத் திகழ்ந்த அறிவக அலுவலர்கள், ஆசிரியர், பெற்றோர், தொண்டர், மாணவர் அனைவருக்கும் அறிவகம் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றது.

  
  
   Bookmark and Share Seithy.com


Asiaan-Salon-2022-seithy
Vaheesan-Remax-2016
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
 gloriousprinters.com 2021
Kugeenthiran-200-2022-seithy
Karan Remax-2010
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா