Untitled Document
October 25, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
ராவண தேசத்தை மீட்போம்!
[Monday 2025-12-29 17:00]

கடந்த கால சிங்கள அரசாங்கங்கள் தமிழர்களையும் தமிழ அரசியல் தலைவர்களையும் கொலை செய்து அழிப்பதற்காக சிங்கள பகுதிகளில் இருந்த தமிழ் தலைவர்களுக்கு ஆயுதங்கள் கொடுத்து தமிழர்கள் தமிழர்களையே கொலை செய்ய எல்லா வசதிகளும் பணமும் கொடுத்து உதவிசெய்த சிங்களர் அரசியல் தலைவர்கள் இப்போதுதமிழர் பகுதிகளில் குறிப்பாக வட பகுதியில் தங்கள் சிங்கள அரசியலை நிலைநிறுத்தவும் புதிய சிங்கள கட்சிகளுக்கு தமிழ் அடிமைகளை சேர்க்கவும் தங்களுக்கு வடபகுதியில் அஞ்சலாக இருக்கக்கூடிய தங்களால் வளர்க்கப்பட்ட தமிழ் தலைவர்களை தமிழ் மக்கள் மத்தியில் இருந்து அப்புறப்படுத்தும்வேலைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிகிறது. இந்த தமிழ் தலைவர்கள் கடந்த காலத்தின் சிங்களவர்களோடு சேர்ந்து செய்த வேலைகளை ஏற்றுக் கொள்ள முடியாவிட்டாலும், இன்று இந்த டக்ளஸ் தேவானந்தாவின் கைது தமிழர்களுக்கு புதிய மறைமுக எச்சரிக்கை விடுத்துள்ளது. வருங்காலத்தில் தமிழ் மக்கள் பெரும் அடக்குமுறைகளை எதிர்கொள்ள வேண்டி வரும் போல் உள்ளது. அரசியல் காரணங்களுக்காக டக்ளஸ் தேவ ஆனந்தாவை கைது செய்த அரசாங்கம் அவருக்கு ஆயுதம் கொடுத்த ராணுவத்தினையும் அப்போது இருந்த அரசாங்க ஜனாதிபதியையும் எப்போது கைது செய்வார்கள். அத்தோடு 1988,1989 ஆண்டு தங்கள் அரசியல் எதிரிகளை கொலை செய்ய ஜேவிபி இயக்கம் , பிளாட் இயக்கத்தை பயன்படுத்தியது எல்லோருக்கும் தெரியும். அதற்காக சித்தார்த்தன் ஐயும் ஜேவிபி இயக்கத் தலைவர்களையும் விசாரணைக்காக எப்போது கைது செய்வார்கள்.

ஊழலுக்கு எதிரான மக்களின் கொதிப்பே தேமச ஆட்சி பீடம் ஏற வழிவகுத்தது. ஊழலை ஒழிப்பதில் தேமச ஓரளவு வெற்றி கண்டு வருகிறது. அதே சமயம் அரச நிர்வாகத்தில் மாற்றமில்லை. தேமச தனது அல்லக்கைகளை உயர் பதவிகளில் அமர்த்த அயராது உழைக்கிறது. எடுத்துக் காட்டு கணக்காய்வாளர் நாயகம் பதவி. இதுவரை தமக்குச் சார்பான 4 பேரை அந்தப் பதவியில் அமர்த்த தேமக எடுத்த முயற்சி தோல்வியில் முடிந்துள்ளது. தாங்கள் பதவிக்கு வந்தால் அரச இயந்திரம் சுயாதீனமாக இயங்கும் என்ற உறுதிமொழியை அந்தக் கட்சி காற்றில் பறக்கவிட்டுள்ளது. முன்னைய ஆட்சியாளர்கள் சென்ற பிழையான வழியிலேயே தேமசயும் பயணிக்கிறது. இரத்தினபுரி நா.உ இன் மாமனார் கஞ்சாசெடி வளர்த்தார். அதனை கண்டு பிடித்த காவல்துறை அதிகாரி அதனை அழித்தார். தேமச சேர்ந்த அந்த நா.உ மாமனாருக்கு சார்பாக தொதித்தெழுந்தார். விளைவு? தனது கடமையை சரிவரச் செய்த காவல்துறை அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்று சொல்லி ஆட்சியைப் பிடித்தவர்கள் இப்போது அதனை இவ்வளவு விரைவாக மறந்து விட்டார்கள். இதனை மக்கள் உற்றுப் பார்ப்பார்கள் என நினைக்கிறேன்.

சிலப்பதிகாரத்தை இயற்றிய இளங்கோ அடிகள் அதன் பிழிவைக் கூறுகிறார்.

‘அரைசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்று ஆவதூஉம்,

உரைசால் பத்தினிக்கு உயர்ந்தோர் ஏத்தலும்,

ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும் என்பதூஉம்',

அரசியலில் பிழை செய்தவருக்கு அறமே எமனாகித் தண்டனை வழங்கும்.

பத்தினியை உயர்ந்தோர் போற்றுவர்.

ஊழ்வினை வலிமையாக வந்து விளைவினைத் தரும் என்பது இதன் பொருள்.

ஊழ்வினை முற்பிறப்பில் செய்ததாகவும் இருக்கலாம் இந்தப் பிறப்பில் செய்தததாகவும் இருக்கலாம். ஆனால் அதற்கான தண்டனை மட்டும் உறுதி.

வள்ளுவர் காலை செய்த வினை பிற்பகல் விளையும் என்கிறார்.

பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்குஇன்னா

பிற்பகல் தாமே வரும்.

பிறருக்கு / பிறர் உயிர்களுக்கு நாம் ஒரு தீங்கினை (துன்பத்தினை) காலையில் இழைத்தால் நமக்கு ஒரு தீங்கு மாலையில் தானாக தேடி வரும். ஆதலால் பிறருக்கு தீங்கு செய்யாதே என்று கூறுகிறார் திருவள்ளுவர். டக்லஸ் தேவானந்தா மீது பல கொலை, கொள்ளை, கப்பம் போன்ற குற்றச்சாட்டுக்கள் உண்டு. ஆனால் அவற்றுக்குரிய தண்டனையில் இருந்து இதுவரை தப்பி வந்திருக்கிறார். மொத்தம் 38 ஆண்டுகள். இப்போது 2001 ஆம் ஆண்டு அவரது தற்பாதுகாப்புக்குக் கொடுத்த சிறு துப்பாக்கி பாதாள உலக தாதாக்களில் ஒருவரான மகாந்துரே மதுஷிடம் இருந்து 2019 இல் கைப்பற்றப்பட்டிருந்தது. இந்த மதுஷி பின்னர் காவல்துறை ஒரு என்கவுண்டரில் சுட்டுத்தள்ளிக் கொலை செய்யப்பட்டு விட்டார்.

ஒரேயொரு துப்பாக்கிக்காக தேவானந்தா கைது செய்யப்பட்டது அநீதி, அடாது என அவரது விசுவாசிகள் கொதித்து எழுகிறார்கள். யுத்த காலத்தில் ஒட்டுக்குழுக்களாக செயற்பட்ட ஏனைய ரெலோ, புளட், இபிஆர்எல்எவ் அமைப்புகளுக்கு கொடுத்த ஆயுதங்கள் என்னாயிற்று என்று கேட்கிறார்கள். ஒரு கொலையாளி நீதிமன்றத்தில் "கனம் நீதிபதி அவர்களே ஊரில் எத்தனை கொலையாளிகள் இருக்கிறார்கள். என்னை மட்டும் பிடித்து விசாரிப்பது என்ன நியாயம்" என்று கேட்க முடியாது.

தேவானந்தாவின் இபிடிபி அரசோடு சேர்ந்து வி.புலிகளுக்கு எதிராக போராடிய காலத்தில் இயந்திரத் துப்பாக்கிகள் உட்பட நூற்றுக் கணக்கான ஆயுதங்களை இராணுவம் வழங்கியிருக்கும். அவற்றுக்கு என்ன நடந்தது என்பது தெரியாது. தேவானந்தா அவற்றை யுத்தம் முடிந்த பின்னர் பாதாள உலகக் குழுக்களுக்கு விற்று விட்டாரா?தேவானந்தா அமைச்சராக இருக்கும் வரை சட்டம் அவரை நெருங்க முடியவில்லை. இன்று அவர் சாதாரண நா.உறுப்பினர் ஆகக் கூட இல்லை. சட்டம் இப்போது அவர் மீது பாய்வதற்கு அதுவொரு காரணமாக இருக்கலாம்.

அரசாங்கம் தேவானந்தா மீதான வழக்கைத் தொடர அவ்வளவு அக்கறை காட்டுவதாக இல்லை. மூன்று மாதம் அவரை காவலில் தடுத்து வைக்க காவல்துறை முன்வைத்த கோரிக்கையை பாதுகாப்பு அமைச்சர் நிராகரித்துவிட்டார். 72 மணித்தியாலம் மட்டும் கொடுத்தார். என்ன காரணம்? ஜேவிபி விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் இராணுவத்தின் பக்கம் நின்றது. ஊர் ஊராகச் சென்று அங்குள்ள சிங்கள இளைஞர்களை இராணுவத்தில் சேர்த்தது. வி.புலிகளை தோற்கடித்ததில் புளட்டுக்கும் கணிசமான பங்குண்டு என்று மார்தட்டியவர் சித்தார்த்தவன்.

எனவே இராணுவத்தைப் போலவே ஒட்டுக் குழுக்களைக் கைது செய்து அவர்களுக்கு தண்டனை வழங்க இந்த அரசாங்கம் முன்வாராது. பிள்ளையான் கணக்கு வேறு. அவர் கிழக்கு பல்கலைக் கழக துணைவேந்தர் சுப்பிரமணியம் ரவிநாத்தை கடத்திக் கொலை செய்ததில் நேரடியாக ஈடுபட்டவர்.

இந்த அரசாங்கம் முன்னைய காலங்களில் கடத்திக் கொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களான லசந்தா விக்கிரமதுங்கா, பாதகாப்பு வலையத்துக்குள் இருந்த வீட்டில் வைத்து கொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிமலராசன், புளட் அமைப்பினால் கடத்திக் கொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சிவராம் தொடர்பாக இதுவரை எந்த நடவடிக்கைகளையும் இந்த அரசு எடுக்க வில்லை. எடுக்கும் என்ற நம்பிக்கையும் இல்லை. காரணம் ஜேவிபியினரே ஈவு இரக்கமற்ற கொலையாளிகள். அரசுக்கு எதிராக ஆயுதம் ஏந்திப் போராடியவர்கள். ஆயிரக்கணக்கில் அப்பாவி மக்களை கொலை செய்தவர்கள். கோடிக் கணக்கான அரசாங்க சொத்துக்களை நாசம் செய்தவர்கள்.

ஆக இந்த அரசாங்கத்தின் முதுகில் புண்யிருக்கிறது. தேவானந்தா விடயத்தில் மெத்தனமாகவே நடந்து கொள்ளும் என்பது எனது கணிப்பு.

  
  
   Bookmark and Share Seithy.com


Karan Remax-2010
Asiaan-Salon-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Vaheesan-Remax-2016
Kugeenthiran-200-2022-seithy
 gloriousprinters.com 2021
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா