Untitled Document
October 25, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
இலங்கையின் வடக்கு கிழக்கின் அபிவிருத்தி முயற்சிகளுக்கான சர்வதேச மாநாடு! Top News
[Friday 2025-09-12 18:00]

சர்வதேச மகாநாடு எதிர்வரும் ஒக்டோபர் 10ம்திகதி முதல் 12ம்திகதி வரை Toronto வில் நடைபெற உள்ளது.

Dates and Venue:

October 10th and 11th - University of Toronto, Scarborough Campus

October 12th - Scarborough Convention Centre

இந்த சர்வதேச கல்வியாளர் மாநாடு, உலகெங்கும் பரவி வாழும் தமிழர்களின் மொழி, கலாச்சாரம், கல்வி, சமூக முன்னேற்றம், அபிவிருத்தி மற்றும் அறிவியல் ஆராய்ச்சி போன்ற துறைகளில் முன்னேற்றகரமான வழிமுறைகள் குறித்த ஆய்வுக் கட்டுரைகளையும் கருத்து வெளிப்பாடுகளையும் பகிர்ந்து கொள்ளும் மிக முக்கியமான ஒரு தளமாக அமையவுள்ளது.

எமது தாயகத்தில் நிலையான பொருளாதார சமூக அபிவிருத்தியை நோக்கமாக கொண்டு இந்த மாநாடு வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த மாநாடு முதலீட்டாளர்கள், செயல்பாட்டாளர்கள், ஆய்வுப் படிப்பைமேற்கொள்வோர் மற்றும் வடக்கு கிழக்கு தேசத்தின் மேம்பாடு போன்றவைக்கு உதவியளிக்கும். இந்த மகாநாடு தமிழர்களின் அறிவியல் பங்களிப்பு, கலாச்சார பாரம்பரியம் மற்றும் உலகளாவிய ஒற்றுமையை வலியுறுத்தும் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாக அமையவுள்ளது.

உலகில் பல்வேறு நாடுகளில் பரந்து வாழும் தமிழ் அறிஞர்கள் பலரும் தமது ஆய்வுக் கட்டுரைகளை இந்த மாநட்டில் சமர்ப்பிக்கவுள்ளனர். இந்த ஆய்வுகள் எமது தாயகத்தின் முன்னேற்றத்தை மையப்படுத்தியதாக அமையும் என்பதோடு அங்குள்ள கள நிலைமையினை அறிவுபூர்வமாக அணுகுவதற்கான ஒருவாய்ப்பினையும் வழங்கும் என்று நாம் நம்புகின்றோம்.

இதன் மூலமாக வடக்கு கிழக்கின் முன்னேற்றத்திற்கு நாம் மேற்கொள்ள வேண்டிய முக்கிய விடயங்கள் குறித்த தெளிவினை நாம் பெற்றுக் கொள்ள முடியும். அத்துடன் இங்கு அடையாளப் படுத்தப்படும் சில முக்கியமான விடயங்களுக்கு தீர்வினை காணும் வகையிலான செயல் திட்டங்களை ஒருங்கிணைப்பதற்கும் அனைத்துலகத் தமிழர் பேரவை தயாராக இருக்கின்றது.

இந்த மகாநாடு தொடர்பான விடயங்களை conference.tamilfederation.org என்ற எமது இணையத்தளத்தில் பெற்றுக் கொள்ள முடியும். இந்த மாநாடு குறித்த விடயங்களை தங்களின் ஊடகங்களில் வெளியிடுவதன் மூலம் இந்த விடயத்தை மக்கள் மத்தியில் கொண்டு செல்வதற்கு உதவுமாறு மிகவும் பணிவன்புடன் வேண்டி நிற்கின்றோம்.

நன்றி

அனைத்துலகத் தமிழர் பேரவை

  
  
   Bookmark and Share Seithy.com


Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Kugeenthiran-200-2022-seithy
Karan Remax-2010
 gloriousprinters.com 2021
Asiaan-Salon-2022-seithy
Vaheesan-Remax-2016
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா