Untitled Document
October 25, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
கனடாவில் திறந்து வைக்கப்பட்டது தமிழர் இனவழிப்பு நினைவுத்தூபி! Top News
[Sunday 2025-05-11 18:00]

இலங்கையில் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்படவில்லை என தெரிவிப்பவர்களிற்கு கனடாவில் இடமில்லை! கொழும்பிற்கு திரும்பி செல்லுங்கள் பிரம்டன் மேயர் தெரிவிப்பு! கனடா பிரம்டனில் தமிழர் இனவழிப்பு நினைவுத்தூபி உத்தியோகபூர்வமாக திறந்துவைக்கப்பட்டுள்ளது. இலங்கை அரசாங்கத்தின் இனப்படுகொலையை நினைவுகூரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள தமிழர் இனவழிப்பு நினைவுத்தூபியை திறந்துவைக்கும் நிகழ்வு சிங்காவுசி பூங்காவில் இடம்பெற்ற வேளை கனடா அரசியல்வாதிகள் உட்பட பெருமளவானவர் திரண்டிருந்தனர்.

இனப்படுகொலைக்குள்ளானவர்களை நினைவுகூரும் வகையில் அகவிளக்கேற்றுவதுடன் நினைவுத்தூபி திறப்பு விழா நிகழ்வுகள் ஆரம்பமாகின. இதன் பின்னர் கனடாவின் அரசியல்வாதிகள் உட்பட பல நாடாவை வெட்டி நினைத்தூபியை திறந்து வைத்தனர்.

அங்கு உரையாற்றிய பிரம்டன் மேயர் பட்ரிக் பிரவுண் கனடாவில் தமிழர் இனவழிப்பு நினைவுத்தூபியை நிர்மாணிப்பதில் தான் எதிர்கொண்ட சவால்கள் குறித்து நினைவுதூபி திறப்பு விழாவில் கருத்து வெளியிட்டுள்ளார். நாங்கள் தமிழர்கள் இனவழிப்பின் அளவை மறக்ககூடாது என அவர் தெரிவித்தார்.

இலங்கையில் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்படவில்லை என தெரிவிப்பவர்களிற்கு பிரம்டனில் இடமில்லை கனடாவில் இடமில்லை கொழும்பிற்கு திரும்பிசெல்லுங்கள் என அவர் தெரிவித்தார். ஆயிரக்கணக்கான தமிழர்கள் இலங்கை அரசாங்கத்தினால் படுகொலை செயப்பட்டார்கள் .

இலங்கை அரசாங்கம் தவறான தகவல்களை பரப்பி வருகின்றது என தெரிவித்த பிரம்டன் மேயர் அவர்கள் உண்மைக்காகவும் நீதிக்காவும் குரல் கொடுத்த தமிழர்களை இழிவுபடுத்தவும் தாக்கவும் முயன்றனர். இது ஒரு உடல்ரீதியான இனப்படுகொலை மாத்திரமல்ல உலகின் அனைத்து பகுதிகளிலும் உள்ள தமிழர்கள் மீதான தாக்குதல் என தெரிவித்தார்.

தமிழர் படுகொலை நினைவுதூபி என நகரத்தில் உருவாகியுள்ளமை குறித்து நான் பெருமிதம் அடைகின்றேன் ஆனால் இன்னமும் செய்யவேண்டிய பணிகள் உள்ளன என அவர் தெரிவித்துள்ளார்.

  
  
   Bookmark and Share Seithy.com


 gloriousprinters.com 2021
Karan Remax-2010
Asiaan-Salon-2022-seithy
Kugeenthiran-200-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Vaheesan-Remax-2016
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா