Untitled Document
October 25, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
கனடா பாராளுமன்றத்திற்கு அழைக்கப்பட்ட முதல் தமிழ் நடிகர் கருணாஸ்! Top News
[Thursday 2024-11-28 21:00]

ஈழப் போரின் போது மக்களுக்காக களத்தில் நின்று பணியாற்றிய மருத்துவப் போராளிகளின் அசாத்திய பங்களிப்பையும், தமிழர் போர் மரபில் கடைபிடித்த மருத்துவ அறத்தையும் பறைசாற்றும் வகையில் வெளிவந்துள்ள திரைப்படம்தான் “ சல்லியர்கள்” இந்த படத்தை இயக்குநர் கிட்டு அவர்கள் இயக்கியுள்ளார். நடிகர் கருணாஸ் & ப. கரிகாலன் இணைந்து தயாரித்துள்ளனர். வருகின்ற ஜனவரி 1 ஆம் தேதி உலகெங்கும் இத்திரைப்படம் வெளியாகிறது. இந்நிலையில் நடிகர் கருணாஸ் அவர்கள், சல்லியர்கள் திரைப்படத்தின் சிறப்பு காட்சிகள் வெளியிடுவதற்காக பிரான்சு, இலண்டன், சுவிஸ்சர்லாந்த், நோர்வே, உள்ளிட்ட நாடுகளுக்குச் சென்றார். புலம்பெயர் தமிழர்களின் வரவேற்பில் சல்லியர்கள் திரைப்படம் பேராதரவைப் பெற்றுள்ளது.

வருகிறது 30.11.2024 கனடாவில் சிறப்பு காட்சி திரையிடல் நடைபெறவிருக்கிறது. இதனை அறிந்த மார்க்கம் தோர்ண்ஹில் தொகுதியின் மாகாணப் பாராளுமன்ற உறுப்பினர் லோகன் கணபதி அவர்கள். நடிகர் கருணாஸ் அவர்களை சிறப்பு அழைப்பாளராக கனடா பாராளுமன்றத்திற்கு அழைத்து தனது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளார். ஏற்கனவே இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமானை அழைத்திருந்தாலும், பாராளுமன்ற அவைக்குள் ஒரு தமிழ் நடிகர் கருணாஸ் அவர்கள் அழைத்துப் பாராட்டப்பெற்றது இதுவே முதல்முறையாகும்.

படத்தை பற்றி பாராளுமன்ற உறுப்பினர் லோகன் கணபதி பேசும் பேது, "மாவீரர் நாள்" உலகெங்கிலும் உள்ள தமிழர்களுக்கும், தமிழ் சமூகத்திற்கும் குறிப்பாக மார்க்கம்-தோர்ன்ஹில் தமிழர்களுக்கும் முக்கியத்துவம் வாய்ந்தது, இலங்கையின் உள்நாட்டுப் போரின் போது பல உயிர்களை நாம் இழந்திருக்கிறோம். அதனை எடுத்துக்காட்டும் வகையில், நடிகர் சேது கருணாஸ் அவர்கள், தனது “சல்லியர்கள்” திரைப்படத்தை இங்கு மார்க்கம் மற்றும் யார்க் பிராந்தியத்தில் வெளியிட தமிழ்நாட்டிலிருந்து (இந்தியா) இங்கே வந்துள்ளார்.

இறுதிக்கட்டப் போரின் போது மருத்துவப் பணியாளர்களின் அசாத்திய சேவையை இந்தப் படம் எடுத்துக் காட்டுகிறது. இந்தத் திரைப்படம் எங்களின் ஒரு கலாச்சார சான்றாகும். இரக்கமுள்ள உலகத்தை தொடர்ந்து நாம் கட்டமைக்க இந்தக் சல்லியர்கள் திரைப்படத்திலிருந்து பலத்தைப் பெறுவோம். நன்றி கருணாஸ்!” என்று பேசியுள்ளார். நடிகர் கருணாஸ் அவர்கள் கனடா பாராளுமன்ற அவைக்கு சென்று அங்குள்ள அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களையும் சந்தித்து தனது நன்றியினை தெரிவித்தார்.

  
  
   Bookmark and Share Seithy.com


 gloriousprinters.com 2021
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Kugeenthiran-200-2022-seithy
Karan Remax-2010
Asiaan-Salon-2022-seithy
Vaheesan-Remax-2016
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா