Untitled Document
October 25, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
பாண்டியன்குளம் மகா வித்தியாலயத்தில் இலவச மருத்துவ முகாம்! Top News
[Sunday 2023-09-24 08:00]

முல்லைத்தீவு மாவட்டம் மாந்தை கிழக்கு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குற்பட்ட பாண்டியன்குளம் மகா வித்தியாலயத்தில் நேற்று (23-09-2023) இலவச மருத்துவ முகாம் ஒன்று இடம்பெற்றிருந்தது. யாழ் மருத்துவ சங்கம் மல்லாவி ஆதார வைத்தியசாலையுடன் இணைந்து குறித்த இலவச மருத்துவ முகாமினை நடாத்தியிருந்தது.

குறித்த மருத்துவ முகாமில் யாழ் போதனா வைத்தியசாலை வைத்திய நிபுணர்கள், வைத்தியர்கள், மல்லாவி வைத்தியசாலையின் வைத்தியர்கள் தாதியர்கள் மற்றும் சுகாதார உத்தியோகத்தர்கள் 55 பேர் கொண்ட மருத்துவ குழுவினர் இணைந்து குறித்த மருத்துவ முகாமினை நடத்தியிருந்தனர். காலை 8.30 மணி முதல் மாலை 2.30 மணி வரை இம் மருத்துவ முகாம் நடைபெற்றிருந்தது.

பொதுவைத்திய நிபுணர், சத்திரசிகிச்சை நிபுணர், மகப்பேறு மற்றும் பெண் நோயியல் வைத்திய நிபுணர், பெண் புற்று நோயியல் வைத்திய நிபுணர், தோல் வைத்திய நிபுணர், கண் வைத்திய நிபுணர், சிறுவர்களுக்கான விசேட வைத்திய நிபுணர், இருதய சத்திரசிகிச்சை நிபுணர், பல் வைத்தியர் முதலானோருடன் இணைந்து ஏனைய மருத்துவர்கள் சிகிச்சை வழங்கினார்கள்.

400 க்கும் மேற்பட்டோர் குறித்த இலவச முகாமில் பயன் பெற்றிருந்தனர் . தேவையானவர்களுக்கு நோய்களுக்கான மருந்துகளும் மற்றும் மல்லாவி ஆதார வைத்தியசாலைக்கு வந்து மேலதிக சிகிச்சை பெறுவதற்கான மருத்துவ அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டிருந்தன.

  
  
   Bookmark and Share Seithy.com


Vaheesan-Remax-2016
 gloriousprinters.com 2021
Kugeenthiran-200-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Asiaan-Salon-2022-seithy
Karan Remax-2010
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா