Untitled Document
October 25, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
கனடாவைத் தலைமை அலுவலகமாகக் கொண்டு இயங்கும் உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் தலைமையகம் விடுக்கும் முக்கிய அறிவித்தல்! Top News
[Friday 2020-01-10 09:00]

1974ம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் தமிழ் அறிஞர்களாலும் ஆர்வலர்களாலும் ஆரம்பித்து வைக்கப்பெற்ற எமது உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கமானது தற்போது கனடாவில் தலைமையகத்தை முழுப் பலத்தோடும் வளங்களோடும் கொண்டு வெற்றிகரமாக இயங்கிவருகின்றது. இயக்கத்தின் தற்போதைய தலைவராக வினாசித்தம்பி துரைராஜா அவர்களும், செயலாளர் நாயகமாக ஜேர்மனி வாழ் துரை கணேசலிங்கம் அவர்களும் வடஅமெரிக்க கிளைகளின் தலைவராக கனடா வாழ் சிவா கணபதிப்பிள்ளை அவர்களும் கனடாக் கிளையின் தலைவராக ஆர். என். லோகேந்திரலிங்கம் அவர்களும் சர்வதேச ஊடகப் பொறுப்பாளராக பத்திரிகையாளர் செந்தில்வேலவர் அவர்களும் இலங்கைக் கிளையின் காப்பாளராக முன்னாள் அமைச்சர் இராதாகிருஸ்ணன் அவர்களும் மேலும் பல நாடுகளில் வாழும் அறிஞர் பெருமக்களும் ஆர்வலர்களும் பலமான தூண்களாக இயங்கிய வண்ணம் உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தைப் பக்தியுடனும் அர்ப்பணிப்புடனும் பாதுகாத்து வருகின்றனர். கடந்த காலங்களில் இந்த இயக்கம் பல காத்திரமான சேவைகளை எமது தமிழ் மொழிக்கும் பண்பாட்டுக்கும் அவற்றின் நலன்களுக்காக ஆற்றியுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது. இயக்கத்தின் 13வது மாநாட்டை கடந்த 2017ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் யாழ்ப்பாணம் பல்கலைக் கழகத்தில் சிறப்பாக நடத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதேவேளையில், தமிழ்நாட்டில் சிறப்புற இயங்கிவரும் எஸ.ஆர். எம் பல்கலைக் கழகத்தின் ஆதரவோடு தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் தமிழ் மொழியைக் கற்பிக்கும் ஆசிரிய ஆசிரியைகளுக்கு விசேட பயிற்சியைக் அளிக்கும் வகையில் தென்னாபிரிக்கா, கனடா, ஜேர்மனி, சுவிஸ்லாந்து ஆகிய நாடுகளில் பல பயிற்சிப் பட்டறைகளை நடத்தி ஆசிரிய ஆசிரியைகளுக்கு பயனுள்ள வகையில் டிப்ளோமாச் சான்றிதழ்களையும் வழங்கியது. இதனால் அந்த ஆசிரியர்கள் தற்போது மிகுந்த ஆற்றலுடன் சிறப்பாக தங்கள் கற்பித்தல் பணிகளைச் செய்து வருகின்றனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இதைப் போன்ற பல பணிகளை நாம் அடுக்கிக்கொண்டே போகலாம்.

இவ்வாறான எமது தமிழ்ப் பண்பாட்டுப் பாதையில் கற்களும் முட்களும் போல சில கபடத்தனம் கொண்ட ஏமாற்றுப் பேர்வழிகள் எம்மோடு வந்திணைந்தனர். அவர்கள் புதிதாக இணைந்தவர்கள் என்ற வகையில் எமது அமைப்பின் பரந்து பட்ட சேவைகளையும் உலகெங்கும் செல்வாக்குக் கொண்ட இயக்கமாகவும் இருப்பதைக் கண்டு காழ்ப்புணர்ச்சியும் கயமையும் கொண்டு மறைமுகமாக பல பாதிப்புக்களை எற்படுத்தத் தொடங்கினார்கள். இவர்களுள் பாண்டிச்சேரியைச் சேர்ந்த பஞ்ச் இராமலிங்கம், ஜேர்மனி வாழ் மாவை தங்கராசா, கனடாவாழ் ம.இரவிச்சந்திரன் ஆகியோர் மறைமுகாக பாதகமாக செயல்களை செய்யத் தொடங்கினர். காரணம் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் 2018ம் ஆண்டு நடைபெற்ற 13வது அகில மாநாட்டை நடத்தும் குழுவில் எமது அங்கீகாரம் எதுவும் இன்றி இணைந்து கொண்டு இந்த மாநாட்டை நடத்தும் பொறுப்பை ஏற்று நடத்துபவர்கள் போல பாசாங்கு செய்து கொண்டு மாநாட்டின் தேவைக்காக எம்மால் சேகரிக்கப்பெற்ற நிதியையும் மாநாட்டு நாட்களில் அங்கத்தவர்களிடம் இருந்து சேகரிக்கப்பெற்ற பணத்தையும் தலைமையத்திற்கு கணக்குகளைக் காட்டாமல் இந்த மூவரும் மோசடியில் ஈடுபட்டார்கள். எனவே எமது அகிலத் தலைவர் திரு துரைராஜாவும் செயலாளர் நாயகம் திரு துரை கணேசலிங்கமும் இவர்களிடம் விளக்கம் கேட்டு கடிதங்களை அனுப்பினார்கள். ஆனால் அவைகளுக்கு எல்லாம் பதிலளிக்காமல், தற்போது சதி முயற்சி போன்று திட்டமிட்டு உலகில் உள்ள பல அறிஞர்களுக்கு பொய்யான விபரங்களைத் தெரிவித்தும் உண்மைகளை மறைத்தும் காரியங்களில் இறங்கியுள்ளனர்.

இவ்வாறான பாதகமான செயல்களில் ஒன்றாக எதிர்வரும் பெப்ரவரி மாதம் 6ம் திகதி தொடக்கம் இரண்டு நாட்கள் இந்தியாவில் உள்ள புதுச்சேரி பல்கலைக் கழகத்தில் எமது உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் பெயரில் சட்டத்திற்கு முரணான வகையில் 14வது மாநாட்டை நடத்துவது போன்று பாசாங்கு செய்கின்றனர். தமிழ்நாட்டிலும் புதுச்சேரியிலும் பல நிறுவனங்களிடம் பொய்களைக் கூறி பாரிய நிதிவசூலிப்புகளையும் செய்துள்ளனர். அத்துடன் புதுச் சேரி பல்கலைக் கழகத்தின் துணைவேந்தரையும் நிர்வாகத்த்தையும் மேலும் புதுச்சேரி அரசாங்கத்தையும் ஏமாற்றுகின்றனர்.

இந்த மோசடியில் தற்போது புதுச்சேரி பல்கலைக் கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றும் பஞ்ச் இராமலிஙகம் என்பவர் இந்த மோசடிக் குழுவின் தலைவராகச் செயற்பட்டு புதுச் சேரி பல்கலைக்கழகம் மற்றும் இந்திய பல்கலைக் கழகங்களின் ஆணைக்குழு ஆகியவற்றையும் ஏமாற்றிய வண்ணம் செயற்படுகின்றார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. இவர் புதுச் சேரி பல்கலைக்கழகம் மற்றும் இந்திய பல்கலைக் கழகம் மற்றும் இந்திய பல்கலைக்கழங்களின் ஆணைக்குழு ஆகியவற்றிடம் தவறான அனுமதி பெற்று சுவிஸ்சலாந்து சென்று அங்கு இந்த மோசடிக்குழுவில் இயங்கும் மாவை தங்கராசா, கனடா இரவிச்சந்திரன் மற்றும் இங்கிலாந்தில் தற்போது வாழும் இன்னாசிமுத்து ஆகிய நால்வர் மட்டுமே கூடி ஒரு கூட்டத்தை நடத்தி இந்த ஏமாற்று நாடகத்தை ஆரம்பித்துளளனர் என்பது இ ங்கு குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் பஞ்ச் இராமலிங்கம் என்னும் இந்த நபர் தான் பேராசிரியராகப் பணியாற்றும் புதுச்சேரி பல்கலைக் கழகத்தையும் இந்திய பல்கலைக் கழக ஆணைக்குழுவையும் எமாற்றியயே தனது கபடத் தனத்தை அரங்கேற்றுகின்றார் என்பது புலனாகின்றது அல்லவா!!

எமது உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தோடு 2017ம் ஆண்டு வந்து இணைந்து கொண்ட பஞ்ச் இராமலிங்கம் இந்த மாபெரும் இயக்கத்தை சிதைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு அதற்காக தான் கடமையாற்றும் புதுச்சேரி பல்கலைக் கழகத்தையே பதவி ஆசைகொண்டு ஏமாற்றுகின்றார் என்பதே வெளிச்சமாகத் தெரிகின்றது. அத்துடன் இந்த மோசடிக் குழுவில் உள்ள ஜேர்மனி வாழ் மாவை தங்கராசா என்பவர் (இவர்தான் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற 13வது மாநாட்டிற்கான நிதிக்கு பொறுப்பாக இருந்து பல இலட்சம் ரூபாங்களுக்கான கணக்கை இன்னமும் எமக்கு சமர்பிக்காமல் ஏமாற்றுபவர்) பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா அவர்களையும் தனது சகோதரர் என்ற வகையில், தங்கள்; மோசடிக்களுக்கு துணைபோகும் வகையில புதுச்சேரி மாநாட்டில் உரையாற்ற அழைத்துள்ளனர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது

இந்த மாநாடு ஆனது உண்மையான எமது உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் மாநாடு அல்ல என்பதையும் இந்த மாநாட்டில் கலந்து கொள்பவர்கள் ஒரு தவறான செயற்பாட்டிற்கு ஆதரவை வழங்குகின்றார்கள் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும் என்றும் நாம் அறியத்தருகின்றோம். எனவே 2020 பெப்ரவரி 6ம் திகதி புதுச்சேரி பல்கலைக் கழகத்தில் நடைபெறுவதாக அறிவிக்கப்பெற்றுள்ள இந்த மாநாடு என்பது ஒரு சட்டவிரோதமான செயற்பாடு என்பதையும் கனடாவில் மத்திய அரசாங்கத்தில் பதிவு செய்யப்பெற்ற ஒரு அமைப்பாக உள்ள எமது உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்திற்கு எதிராகவும் நிதிமோசடிகள் போன்றவற்றில் ஈடுபடும் நோக்கத்திற்காகவும் நடத்தப்படுகின்ற இந்த மாநாட்டை அனைவரும் புறக்கணிக்க வேண்டும் என்றும் இந்த பொய்யான பேர்வழிகளை நிராகரிக்க வேண்டும் என்றும் வேண்டிக்கொள்கின்றோம்.

இங்ஙனம்

வினாசித்தம்பி துரைராஜா- அகிலத் தலைவர் உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம்- கனடா.-தலைமைகம்...

துரை கணேசலிங்கம்- செயலாளர் நாயகம்- உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம்- கனடா- தலைமையகம்

சிவா கணபதிப்பிள்ளை -வட அமெரிக்கப் பிராந்திய தலைவர்.- உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம்- கனடா- தலைமையகம்

பத்திரிகையாளர் செந்தில்வேலவர் -சர்வதேச ஊடகப் பொறுப்பாளர்- உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம்- கனடா- தலைமையகம்

ஆர். என். லோகேந்திரலிங்கம்- சிறப்புத் தலைவர் - கனடாக் கிளைத் தலைவர் - உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம்- கனடா- தலைமையகம்

  
  
   Bookmark and Share Seithy.com


Karan Remax-2010
 gloriousprinters.com 2021
Kugeenthiran-200-2022-seithy
Vaheesan-Remax-2016
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Asiaan-Salon-2022-seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா