Untitled Document
November 15, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
வெளி உலக மக்கள் போனால் கதை முடிந்தது: இந்தியாவில் இருக்கும் மர்ம தீவு!
[Saturday 2026-11-14 16:00]

மின்சாரம் கிடையாது.. இண்டர்நெட் கிடையாது.. அடிப்படை வசதிகள் எதுவுமே கிடையாது.. சொல்லப்போனால் வெளி உலக மக்கள் தொடர்பு அறவே இல்லாமல் இந்தியாவில் ஒரு தீவில் மக்கள் வசிக்கிறார்கள்.. யாராவது அந்த தீவுக்கு செல்ல முயன்றாலும் உயிர் மிஞ்சாது.. இப்படி ஒரு மர்மமான தீவு இந்தியாவின் கட்டுப்பாட்டில் இருக்கிறது என்பது உங்களுக்கு தெரியுமா? உலகின் மர்மமான பகுதிகளில் ஒன்றாக அறியப்படும் இந்த தீவு இந்தியாவில் எங்கே இருக்கிறது?, இந்த தீவில் எத்தனை பேர் வசிக்கிறார்கள் என்பது பற்றிய விவரங்களை பார்க்கலாம். தனியாக வசிக்கும் மக்கள் வங்காள விரிகுடா கடலில் உள்ள அந்தமான் நிகோபார் தீவுகளின் அருகே வடக்கு சென்டினல் தீவு உள்ளது.

இந்தியாவுக்கு சொந்தமான இந்த தீவில் சென்டினல்கள் என்ற பழங்குடியின மக்கள் வசித்து வருகிறார்கள். இங்கு வசிக்கும் மக்கள்தான் வெளி உலகத்தில் எந்த தொடர்பும் இல்லாமல் தனியாக வசித்து வருகிறார்கள். அங்கு வசிக்கும் மக்கள் என்ன மொழி பேசுகிறார்கள் என்பது கூட யாருக்கும் தெரியாது. இந்த தீவு ஆழமற்ற பாறைகளால் சூழப்பட்டுள்ளது. இதனால், இந்த தீவுப் பகுதிக்கு செல்வதும் கடினமான ஒன்றாகும். இந்த தீவில் 80 முதல் 150 பேர் வசிக்கலாம் என்று கணிக்கப்பட்டு இருக்கிறது. 59 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட சிறிய தீவான இதில் வசிக்கும் பழங்குடியின மக்கள் வேட்டையாடி உணவுகளை சேகரித்து உயிர் வாழ்கிறார்கள் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றார்கள்.

யார் சென்றாலும் தாக்குதல் தீவில் உள்ள பழங்கள், கிழங்குகள், உள்ளிட்டவையும் அவர்களின் உணவு ஆகும். வேடையாடுவதற்காக வில் மற்றும் கூர்மையான ஆயுதங்களை பயன்படுத்துகிறார்கள். கடலில் கரை ஒதுங்கும் இரும்பு பொருட்களை எடுத்துசென்று அவற்றையும் ஆயுதமாக்கி பயன்படுத்துகிறார்களாம். தீவில் வசிக்கும் மக்கள் வெளி உலகத்தில் இருந்து யார் சென்றாலும் அவர்கள் மீது தாக்குதல் நடத்துகிறார்கள். கடந்த 2018 ஆம் ஆண்டு அமெரிக்க மத போதகர் ஒருவர் இந்த தீவுக்கு செல்ல முயன்றார். ஆனால் அங்குள்ள மக்கள், அவரை தாக்கி கொன்றனர். அவரது உடலை எடுக்க கூட அந்த தீவில் இருந்த பழங்குடியின மக்கள் விடவில்லை. இந்த சம்பவத்திற்கு பிறகு சென்டினல் தீவு குறித்து உலக அளவில் பேசப்பட்டது.

சென்டினல் தீவில் வசிக்கும் மக்களின் தனித்துவமான வாழ்க்கை முறையையும் அவர்களின் ஆரோக்கியத்தை பாதுகாப்பதற்காக, அந்த தீவை வெளி உலக நபர்கள் தொடர்பு கொள்ளா இடமாக இந்தியா அறிவித்துள்ளது. அந்த தீவுக்குள் வெளிநபர்கள் யாரும் செல்வது சட்ட விரோதமாகும். ஆங்கிலேயே ஆட்சி காலத்தில் இருந்து இந்த தீவுப்பகுதிக்கு பலரும் செல்ல முயன்ற நிலையில், அவர்களுடன் வெளி உலக மக்கள் யாரும் நெருங்கியது இல்லை. மீறி சென்றவர்களும் தாக்குதலுக்கு ஆளாகி கொல்லப்படவே செய்து இருக்கிறார்கள்.

கடந்த 2004 ஆம் ஆண்டு சுனாமி ஏற்பட்ட போது, இந்த தீவில் வசிக்கும் மக்கள் அதிசயமாக உயிர் தப்பியது தெரியவந்தது. இயற்கையோடு ஒன்றி வாழும் வாழ்க்கை முறையால் இந்த பழங்குடியின மக்கள் சுனாமி ஏற்படுவதை முன்கூட்டியே உணர்ந்து தப்பித்து இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் நம்புகிறார்கள். உலகில் பல்வேறு தீவுகளில் மக்கள் தொடர்பே இல்லாமல் பழங்குடியின மக்கள் வசித்து வந்தால் காலப்போக்கில் அவர்கள் வெளி உலக தொடர்பை ஏற்படுத்திக் கொண்டனர். ஆனால் சென்டினல் தீவில் வசிக்கும் மக்கள் இதுநாள் வரை வெளி உலகத்தோடு தொடர்பை ஏற்படுத்தாமல் தங்கள் ஆதி கால வாழ்க்கை முறையையே தொடர்கிறார்கள்..

  
  
   Bookmark and Share Seithy.com


Vaheesan-Remax-2016
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Karan Remax-2010
Kugeenthiran-200-2022-seithy
 gloriousprinters.com 2021
Asiaan-Salon-2022-seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா