Untitled Document
June 22, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
2 தலை, 1 இதயம்: ஒட்டி பிறந்த இரட்டைக் குழந்தைகள்!
[Tuesday 2026-03-24 17:00]

இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தின் அலிகரில் ஒட்டிய நிலையில் இரட்டைக் குழந்தைகள் பிறந்த அரிய சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன. அலிகர் சாஸ்னி கேட் பகுதியைச் சேர்ந்த ஆகாஷ் குமார் என்பவரின் மனைவி நீரு, பிரசவ வலியால் மாவட்ட மகளிர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ஒரே இதயம் இருப்பதால் எதிர்காலத்தில் சிக்கல்கள் ஏற்படும் வாய்ப்பு கடந்த17 ஆம் திகதி, இவருக்கு அறுவை சிகிச்சை மூலம் இரட்டைக் குழந்தைகள் பிறந்தது. இந்த குழந்தைகள் இரண்டு தலை, இரண்டு கை, நான்கு கால்களுடன் பிறந்தன.

ஆனால், இதயம் ஒன்று. இது குறித்து மருத்துவர் கூறுகையில், “குழந்தைகள் தற்போது நலமாக உள்ளனர். சாதாரண குழந்தைகள்போல பால் குடித்து வருகின்றனர். தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் வைத்துள்ளோம். ஆனால், ஒரே இதயம் இருப்பதால் எதிர்காலத்தில் சிக்கல்கள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது” என்றார்.

அறிவியல் வளர்ச்சி எவ்வளவு முன்னேறியிருந்தாலும், இயற்கையின் இத்தகைய அரிய நிகழ்வுகள் மனிதர்களை ஆச்சரியப்படுத்திக்கொண்டே இருக்கின்றன. அறுவை சிகிச்சைக்கு பிறகு தாயின் உடல்நிலை மோசமடைந்ததால், தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

  
  
   Bookmark and Share Seithy.com


Kugeenthiran-200-2022-seithy
Karan Remax-2010
Asiaan-Salon-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Vaheesan-Remax-2016
 gloriousprinters.com 2021
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா