Untitled Document
June 22, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
கடலுக்கு அடியில் வாழும் பேய் மீன்!
[Thursday 2026-02-26 16:00]

கடலில் வாழும் 'ரெட் லிப்ட் பேட்ஃபிஷ் (Red-Lipped Batfish)' எனப்படும் சிவப்பு உதடு கொண்ட மீன் பற்றி பதிவில் பார்க்கலாம். இந்த உலகத்தில் பல அதிஷயங்கள் உள்ளது. அது ஒவ்வொன்றும் நாம் கேட்கும் போது பார்க்கும் போது இப்படியும் இருக்கிறதா என ஆச்சரியமாக இருக்கும். அதிலும் கடல்வாழ் உயிரினங்களை எல்லோருக்கும் ஆராய்ச்சி செய்து பார்ப்பதில் ஒரு விருப்பமும் ஆர்வமும் இருக்கும். கடல் வாழ் உயிரினங்கள் எவ்வளவோ உள்ளது.

அதில் நமக்கு தெரிந்தவை நிறைய இருக்கும். நமக்கு தெரியாதவை நிறைய இருக்கும். அந்த வகையில் தற்போதும் ஒரு மீன் வகை உள்ளது. இந்த மீன் பார்ப்பதற்கே மிகவும் வித்தியாசமாக இருக்கும்.

வீட்டில் தேவையற்ற பொருள் இருந்தால் அந்த பொருட்களை எல்லாம் சேர்த்து நாம் ஒரு உருவம் செய்தால் எப்படி இருக்மோ அப்படிதான் இந்த மீனின் உருவமும் இருக்கும்.

மீன்கள் என்றால் நிந்துபவை என்று தான் எல்லோருக்கும் தெரியும். இந்த மீன் வௌவால் மீன் என்றும் அழைக்கப்படுகின்றது. இந்த வௌவால் மீனுக்கு நீந்தவே தெரியாதாம்.

இது தரை பகுதிக்கு கால்களை பயன்படுத்தி தவழ்ந்து தான் வருமாம். சில வேளை தத்தி தத்தியும் வரும். இப்படி இந்த மீன் வருவது யோகாசனத்தில் ஒருவர் கைகளை மடித்துப் பின்னோக்கி வளைவது போலத் தோன்றும்.

இதன் உதடுகள் மனிதர்கள் லிப்ஸ்டிக் போட்டது போல பார்க்கவே அவ்வளவு அழகாக இருக்கும். இந்த மீனின் நீளம் நாற்பது சென்டிமீட்டர் வளரக்கூடியது.

பசிபிக் பெருங்கடலில் உள்ள கேலபகோஸ் தீவுகளுக்கு அருகே, சுமார் முன்னூறு மீட்டர் ஆழத்தில் இந்த ரெட் லிப்ட் பேட்ஃபிஷ் வசிக்கிறது. இது சிறு வேறு இன மீன்வகையை சாப்பிட்டு உயிர்வாழும்.

இந்த மீனின் தலையில் 'இலிசியம்' எனப்படும் ஒரு நீளமான முள் இருக்கும். அந்த முள்ளின் நுனியில் இருந்து ஒருவித வெளிச்சம் வரும்.

அந்த வெளிச்சத்தைக் கண்டு ஏமாந்து வரும் சிறு மீன்களை இது அப்படியே பிடித்து விழுங்கிவிடும். இது தான் இதன் வேட்டை தந்திரம்.

  
  
   Bookmark and Share Seithy.com


Vaheesan-Remax-2016
Asiaan-Salon-2022-seithy
Kugeenthiran-200-2022-seithy
 gloriousprinters.com 2021
Karan Remax-2010
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா