Untitled Document
June 22, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
சீனாவில் தாய்க்கு பிரசவம் பார்த்த 13 வயது சிறுவன்!
[Saturday 2025-03-29 18:00]

சீனாவில் 13 வயது சிறுவன் தனது தாய்க்கு வீட்டிலேயே பிரசவம் பார்த்த சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் ஃபுஜியன் மாகாணத்தில் நடந்துள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில், 13 வயது சிறுவன் ஒருவன் அவசர சிகிச்சை மையத்தை அழைத்து, தனது 37 வார கர்ப்பிணித் தாயின் பனிக்குடம் உடைந்து விட்டதாகவும், அவருக்கு கடுமையான வலி ஏற்பட்டதாகவும் தெரிவித்தார்.

எனினும் ஆம்புலன்ஸ் வர தாமதமானதால், செல்போனில் மருத்துவ உதவியாளர் சென் சாயோஷூனின் ஆலோசனையின் படி தனது தாய்க்கு சிறுவன் பிரசவம் பார்த்துள்ளார்.

இதில் அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. சிறிது நேரத்திற்குப் பிறகு, மருத்துவ உதவியாளர்கள் வந்து தாயையும் குழந்தையையும் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.

இந்நிலையில் தற்போது தாயும் சேயும் நலமாக உள்ளதாக கூறப்படும் நிலையில் 13 வயது சிறுவன் தனது தாய்க்கு வீட்டிலேயே பிரசவம் பார்த்த சம்பவம் இணையவாசிகளை திகைக்க வைத்துள்ளது.

  
  
   Bookmark and Share Seithy.com


Asiaan-Salon-2022-seithy
Vaheesan-Remax-2016
 gloriousprinters.com 2021
Karan Remax-2010
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Kugeenthiran-200-2022-seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா