Untitled Document
June 22, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
துபாய் பாலைவனத்தில் “உபெர் ஒட்டக சவாரி”!
[Thursday 2024-10-24 06:00]

துபாயின் பரந்த பாலைவனத்தில் சிக்கிக் கொண்ட பெண் சுற்றுலா குழு ஒன்று, ஆச்சரியம் ஏற்படுத்தும் உபெர் பயணத்தின் மூலம் தங்கள் சாகசத்தை மேலும் சுவாரஸ்யம் ஆக்கியுள்ளனர். துபாயில் உள்ள பாலைவனத்தில் பெண் சுற்றுலா பயணிகளின் வாகனம் பழுதடைந்து எதிர்பாராத சிக்கலில் மாட்டிக் கொண்டுள்ளனர். அப்போது உதவி தேடும் கடினமான பணியை எதிர்கொண்ட அவர்களுக்கு ஆச்சரியமான தீர்வு ஒன்றை உபெர்(Uber) வழங்கியுள்ளது.

இது தொடர்பாக வைரலான வீடியோ காட்சிகளில், அந்த பெண்கள் துபாய் - ஹட்டா சாலையிள் Al Badayer அருகே சிக்கித் நின்றுள்ளனர்.

உதவிக்காக மீட்பு குழுவினர் தொடர்பு கொள்ள முயற்சித்த அவர்கள், உபெர் செயலியை திறந்துள்ளனர்.

அதில் அவர்களுக்கு ATV-கள் மற்றும் அவர்களுக்கு ஆச்சரியம் வழங்கும் விதமாக ஓட்டக சவாரி போன்ற தனித்துவமான போக்குவரத்து விருப்பங்கள் காண்பித்துள்ளது.

இதனை கண்டு உற்சாகமடைந்து அந்த பெண் வீடியோவில், "நாங்கள் தொலைந்து போய் பின்னர் உதவிக்காக உபெரை சரிபார்க்க முடிவு செய்தோம், மற்றும் அங்கு என்ன தெரியுமா? அதில் ஒரு ஒட்டகம் இருக்கிறது!" என்று கூறினார்.

அத்துடன் அந்த வசதியை அவர்கள் தேர்வு செய்யவே ஒரு மனிதர் விரைவில் ஒரு ஒட்டகத்துடன் வந்து, தன்னை “உபெர் ஒட்டக ஓட்டி"(Uber Camel Rider) என்று அறிமுகப்படுத்திக் கொண்டுள்ளார்.

அவரது அசாதாரண தொழிலைப் பற்றி கேட்டபோது, ஓட்டி பாலைவனத்தில் தவிக்கும் பயணிகளுக்கு உதவுவதில் நிபுணத்துவம் பெற்றவர் என்று விளக்கியுள்ளார்.

இந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவிய நிலையில், இதன் நம்பகத்தன்மை குறித்து பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

  
  
   Bookmark and Share Seithy.com


Karan Remax-2010
 gloriousprinters.com 2021
Asiaan-Salon-2022-seithy
Vaheesan-Remax-2016
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Kugeenthiran-200-2022-seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா