Untitled Document
June 22, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
கிணறு ஏன் வட்ட வடிவில் இருக்கிறது? பின்னணியில் இருக்கும் ஆச்சரிய காரணம்!
[Sunday 2024-08-18 16:00]

கிணறுகள் வட்ட வடிவில் ஏன் இருக்கிறது என்பதையும், அதற்கு பின்னணியில் இருக்கும் காரணத்தையும் இந்த பதிவில் பார்க்கலாம். பண்டைய காலங்களில் இருந்து கிணறுகளில் தண்ணீர் சேமிக்கப்பட்டு வருகிறது. கிராமங்களில் இன்றும் கிணறுகள் இருந்து வருகிறது. நகரங்களிலும் சில இடங்களில் நாம் கிணறுகளை பார்க்க முடியும்.

நாம் பார்க்க கூடிய கிணறுகள் அனைத்தும் வட்ட வடிவிலே இருந்திருக்கும். இந்த கிணறுகள் முக்கோணமாகவோ, சதுரமாகவோ அல்லது வேறு வடிவத்திலோ இருந்ததில்லை.

வட்ட வடிவத்தில் கிணறுகள் இருப்பதற்கு பின்னால் அறிவியல் காரணம் ஒன்று உள்ளது. வட்டக் கிணறுகள் மிகவும் வலிமையான அடித்தளத்தை கொண்டது.

மேலும், வட்ட கிணறுகளில் மூலைகள் இல்லாததால் கிணற்றைச் சுற்றியுள்ள நீரின் அழுத்தத்தை சமமாக வைத்திருக்கும்.

ஆனால், சதுர வடிவில் கிணறுகள் இருந்தால் அதில் இருக்கும் நான்கு மூலைகளிலும் நீரின் அழுத்தம் இருக்கும். இதனால், நீண்ட காலம் கிணறுகள் நீடிக்காதது மட்டுமல்லாமல், சரிவு அபாயமும் அதிகமாக இருக்கும்.

இந்த காரணத்தினால் தான் வட்ட வடிவத்தில் கிணறுகள் இருக்கின்றன. சீரான அழுத்தம் இருப்பதாலும், மண் சரிவதற்கான வாய்ப்பு மிகக் குறைவாக இருப்பதாலும் தான் கிணறுகள் வட்ட வடிவில் உருவாக்கப்படுகின்றன.

மேலும், சதுரம் மற்றும் முக்கோண வடிவில் கிணறுகளை உருவாக்குவது மிகவும் அரிதானது. வட்ட வடிவில் கிணறுகளை தோண்டுவது எளிமையாக இருப்பதால் இந்த வடிவத்தில் உருவாக்குகின்றனர்.

  
  
   Bookmark and Share Seithy.com


 gloriousprinters.com 2021
Karan Remax-2010
Vaheesan-Remax-2016
Asiaan-Salon-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Kugeenthiran-200-2022-seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா