Untitled Document
June 22, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
"வெறித்தனமாக காதலிக்கிறேன்" - மருமகளை திருமணம் செய்து கொண்ட மாமியார்!
[Wednesday 2024-08-14 18:00]

கணவரை விட்டு பிரிந்து தனது மருமகளை மாமியார் ஒருவர் திருமணம் செய்து கொண்ட சம்பவம் பேசுபொருளாகியுள்ளது. இந்திய மாநிலமான பீகார், கோபால் கஞ்ச் மாவட்டத்தில் உள்ள பெல்வா கிராமத்தைச் சேர்ந்தவர் சுமன். இவருடைய சொந்த மருமகள் ஷோபா. இவருக்கு கடந்த 3 ஆண்டுகளாக மருமகள் மீது காதல் ஏற்பட்டுள்ளது.

இருவரும் வீட்டில் இருக்கும் போது நெருக்கமாக இருந்துள்ளனர். இது, இவர்களின் கணவர்களுக்கு தெரியவந்ததும் கண்டித்துள்ளனர்.

இதனால், இருவரும் ஓடிச்சென்று திருமணம் செய்ய வேண்டும் என்று முடிவு செய்தனர். பின்னர், இருவரும் வீட்டை விட்டு வெளியேறி கோயிலில் இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டனர்.

திருமணத்தின் போது மாமியார் சுமன் பேண்ட் சட்டை அணிந்து மணமகன் போல காட்சியளித்தார். மருமகள் ஷோபா அலங்காரம் செய்து மணமகள் போல காட்சியளித்தார்.

இருவரும் மாலை மாற்றி கொண்டு தாலி கட்டி திருமணம் செய்து கொண்டார். இதன்பிறகு, நெருப்பை சுற்றி வந்து அக்னிசாட்சியாக நாங்கள் எப்போதும் ஒன்றாக இருப்போம் என உறுதி ஏற்றனர்.

இதுகுறித்து மாமியார் கூறுகையில், "எனது மருமகளை நான் வெறித்தனமாக காதலிக்கிறேன். வேறொருவருடன் திருமணம் செய்து கொண்டதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

நாங்கள் திருமணம் செய்து கொண்டோம். மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்று கவலை இல்லை. எப்போதும் நாங்கள் பிரிய மாட்டோம்" என்றார்.

தற்போது, இவர்கள் திருமணம் செய்து கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

  
  
   Bookmark and Share Seithy.com


Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Asiaan-Salon-2022-seithy
Kugeenthiran-200-2022-seithy
Karan Remax-2010
 gloriousprinters.com 2021
Vaheesan-Remax-2016
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா