Untitled Document
June 22, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
ஏலியனுக்கு கோயில் கட்டி கும்பிடும் பக்தர்!
[Friday 2024-08-02 16:00]

குஷ்பு, ரஜினி உள்ளிட்டவர்களுக்கு ரசிகர்கள் கோயில் கட்டிய நிலையில், பக்தர் ஒருவர் ஏலியனுக்கு கோயில் கட்டி கும்பிட்டு வருகிறார். தமிழக மாவட்டமான சேலம், மல்லமூப்பம்பட்டியை அடுத்த ராமகவுண்டனூரைச் சேர்ந்தவர் லோகநாதன். இவர், வேற்றுகிரகவாசிகள் என்று கூறப்படும் ஏலியனுக்கு கோயில் அமைத்து வழிபாடு செய்து வருகிறார்.

இந்த கோயிலை ஏலியன் சித்தர், கைலாய சிவன் கோவில் என்று அழைக்கின்றனர். இந்த கோயிலுக்கு தினமும் பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

கடந்த 2021 -ம் ஆண்டு முதல் இந்த ஏலியன் கோயில் கட்டும் பணி நடைபெற்று வந்தது. இந்த கோயிலானது சித்தர் பாக்யா என்று அழைக்கப்படும் லோகநாதனின் குருநாதர் சித்தர் பாக்யா ஜீவசமமாதி அருகே அமைக்கப்பட்டுள்ளது. அங்கு, ஏலியன் சித்தர் மற்றும் அகத்திய முனிவர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பாக லோகநாதன் கூறுகையில், "இதுவரை எந்த இடத்திலும் ஏலியன் சித்தர் இல்லை. தற்போது, கோயிலில் திருப்பணி பூஜை நடந்து வருகிறது.

இதனால், குறைந்த அளவு பூஜை செய்யப்படுகிறது. கும்பாபிஷேகம் முடிந்த பிறகு அனைத்து விதமான பூஜைகளும் செய்யப்படும்" என்றார்.

  
  
   Bookmark and Share Seithy.com


Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Vaheesan-Remax-2016
 gloriousprinters.com 2021
Kugeenthiran-200-2022-seithy
Asiaan-Salon-2022-seithy
Karan Remax-2010
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா