Untitled Document
June 22, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
30 ஆண்டுகள் ஆகியும் கெட்டு போகாமல் இருக்கும் பர்கர்!
[Tuesday 2024-05-28 19:00]

ஆஸ்திரேலியாவில் ஒரு பர்கர் சுமார் 30 ஆண்டுகளாக கெட்டு போகாமல் உள்ளதாக வெளியான தகவல் சமூக வலைதளங்களில் பேசுபொருளாகி உள்ளது. ஆஸ்திரேலியாவை சேர்ந்த கேசிடீன் மற்றும் எட்வார்ட்ஸ் நிட்ஸ் ஆகியோர் கடந்த 1995-ம் ஆண்டில் அடிலெய்டில் உள்ள மெக்டொனால்டு உணவகத்தில் சீஸ்டுன் கூடிய பர்கரை வாங்கியுள்ளனர். குறித்த பர்கர் 30 ஆண்டுகள் ஆகியும் இதுவரையில் எதுவும் ஆகவில்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் கேசிடீன் மற்றும் எட்வார்ட்ஸ் நிட்ஸ் கூறுகையில், நாங்கள் நிறைய உணவுகளை ஆர்டர் செய்து விட்டோம். அது அளவுக்கு அதிகமாக போய் விட்டது.

இதனால் அந்த பர்கரை என்ன செய்யலாம் என ஆலோசித்தோம். அப்படி பேசும் போது அந்த பர்கரை அப்படியே வைத்தால் என்ன நடக்கும் என்று யோசித்தோம். அதைத்தான் செய்தோம் என்றனர்.

சுமார் 30 ஆண்டுகள் ஆகி இருக்கும் நிலையில் அந்த பர்கரில் நுண்ணுயிர் வளர்ச்சியின் அறிகுறிகள் தென்படவில்லை. கெட்டுப்போன வாசம் கூட அதில் இருந்து வரவில்லை என கூறியுள்ளனர்.

இது தொடர்பான தகவல்கள் இணையத்தில் வைரலான நிலையில் பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

  
  
   Bookmark and Share Seithy.com


Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Vaheesan-Remax-2016
Asiaan-Salon-2022-seithy
Karan Remax-2010
Kugeenthiran-200-2022-seithy
 gloriousprinters.com 2021
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா