Untitled Document
June 22, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
டைட்டானிக் கப்பல் மூழ்க காரணமாக இருந்த பனிப்பாறை: ஒரு அபூர்வ புகைப்படம்! Top News
[Saturday 2024-04-13 18:00]

மூழ்கடிக்க முடியாத கப்பல் என பெயர் பெற்ற டைட்டானிக் கப்பல் இரண்டு துண்டாக உடைந்து கடலில் மூழ்கிய சம்பவம், டைட்டானிக் திரைப்படம் வந்த பிறகு அனைவருக்கும் தெரிந்த ஒரு விடயம் என்றே கூறலாம். அந்த துயர சம்பவத்தில் 1,522 பேர் பலியானார்கள். தற்போது, அந்த கப்பல் மூழ்க காரணமாக இருந்த பனிப்பாறையின் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

1912ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 14ஆம் திகதி இரவு 10.20 மணிக்கு, டைட்டானிக் கப்பல் ஒரு பனிப்பாறையில் மோதியுள்ளது. மறுநாள், அதாவது, ஏப்ரல் 15 அன்று, அதிகாலை 2.20 மணிக்கு மூழ்கியுள்ளது.

உலகைகே அதிரவைத்த அந்த தகவல் வெளியானதும், ஏப்ரல் மாதம் 17ஆம் திகதி கனடாவின் ஹாலிஃபாக்சிலிருந்து 100 சவப்பெட்டிகள் மற்றும் 100 டன் பனிக்கட்டிகளுடன் Mackay-Bennett என்னும் கப்பலில் இறுதிச்சடங்கு மைய உரிமையாளரான John Snow Jr என்பவர் தனது ஊழியர்களுடன் புறப்பட்டுள்ளார்.

அவர்தான் இந்த பனிப்பாறையின் புகைப்படத்தை எடுத்ததாக கருதப்படுகிறது. தற்போது அந்த அபூர்வ புகைப்படம் ஏலத்தில் விற்பனை செய்யப்பட உள்ளது. அது, 4,000 முதல் 7,000 பவுண்டுகள் வரை ஏலத்தில் எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

  
  
   Bookmark and Share Seithy.com


 gloriousprinters.com 2021
Karan Remax-2010
Kugeenthiran-200-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Vaheesan-Remax-2016
Asiaan-Salon-2022-seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா