Untitled Document
June 22, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
சூரிய கிரகணத்தின்போது கனேடியர்கள் நிகழ்த்திய கின்னஸ் சாதனை!
[Tuesday 2024-04-09 18:00]

உலக நாடுகள் பல, முழு சூரிய கிரகணம் என்னும் அபூர்வ நிகழ்வைக் காண ஆங்காங்கே கூடியிருந்த அதே நேரத்தில், கனேடியர்கள் சிலர், கின்னஸ் சாதனை ஒன்றை முறியடிக்கத் திட்டமிட்டார்கள். ஆம், 2020ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம் நிகழ்ந்த சூரிய கிரகணத்தின்போது, சீனாவின் Guangdong மாகாணத்தில், 287 பேர், சூரியனைப்போல உடையணிந்து ஒன்று திரண்டு கின்னஸ் சாதனை ஒன்றைப் படைத்தார்கள்.

அந்த சாதனையை முறியடிக்கும் வகையில், கனடாவின் ஒன்ராறியோவிலுள்ள நயாகரா நகரில், நயாகரா நீர்வீழ்ச்சியின் முன் 309 பேர் சூரியனைப்போல மஞ்சள் நிறத்தில் உடையணிந்து ஒன்று திரண்டார்கள்.

புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த ஒருவர் உட்பட, பலர், பல்வேறு காரணங்களுக்காக, இந்த அரிய நிகழ்வின்போது கின்னஸ் சாதனை படைக்கக் கூடியது, தங்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்துவதாக அமைந்ததாக தெரிவித்தார்கள்.

  
  
   Bookmark and Share Seithy.com


Karan Remax-2010
Kugeenthiran-200-2022-seithy
Asiaan-Salon-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
 gloriousprinters.com 2021
Vaheesan-Remax-2016
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா