Untitled Document
June 22, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
40 கொள்ளுப் பேரன் பேத்திகளுடன் 100வது பிறந்தநாள் கொண்டாடிய தமிழக முதியவர்!
[Monday 2023-12-11 06:00]

தமிழகத்தின் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த ஜவுளி வியாபாரி குமரகுரு தனது 5 தலைமுறை வாரிசுகளுடன் தன்னுடைய 100வது பிறந்தநாளை கொண்டாடி அசத்தியுள்ளார். தமிழகத்தின் ஈரோடு மாவட்டம் சூரம்பட்டியை சேர்ந்த ஜவுளி வியாபாரி குமரகுரு தன்னுடைய 5 தலைமுறை வாரிசுகளுடன் தன்னுடைய 100வது பிறந்தநாளை வெகு சிறப்பாக கொண்டாடியுள்ளார்.

இந்த விழாவில் அவரது 3 மகன்கள், 3 மகள்கள், 45 பேரன் மற்றும் பேத்திகள், 40 கொள்ளு பேரன் மற்றும் பேத்திகள் என கிட்டத்தட்ட 5 தலைமுறைகளைச் சேர்ந்த 100 பேர் கலந்து கொண்டுள்ளனர்.

எந்தவொரு உடல்நல குறைவும் இல்லாமல் ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும் தங்களுடைய தாத்தா இருப்பதற்கு அவருடைய எளிமையான வாழ்க்கை முறையும் கடின உழைப்பும் தான் காரணம் என்று அவரது வாரிசுகள் பெருமையுடன் தெரிவித்துள்ளனர்.

மேலும் தாத்தா தங்களுக்கு மிகப்பெரிய ரோல் மாடலாக இருப்பதாகவும் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.

இந்த பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டவர்களுக்கு மதியம் கறி விருந்தும், பரிசு பொருட்களும் வழங்கப்பட இருப்பதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

  
  
   Bookmark and Share Seithy.com


Asiaan-Salon-2022-seithy
 gloriousprinters.com 2021
Vaheesan-Remax-2016
Karan Remax-2010
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Kugeenthiran-200-2022-seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா