Untitled Document
June 22, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
பெண்களை பார்த்தாலே அஞ்சும் விசித்திர மனிதர்!
[Friday 2023-10-20 18:00]

ஆப்பிரிக்க நாடான ரூவாண்டாவை சேர்ந்த கேலிட்ஸி நிசாம்வித்தா என்ற 71 வயது நபருக்கு பெண்களை பார்த்தாலே பயம் வரும் வித்தியாசமான பாதிப்பால் அவதிப்பட்டு வருகிறார். நம்மில் சிலருக்கு வித்தியாசமான விஷயங்களை கண்டு காரணம் இல்லாமல் மனதில் பயம் எழுவது உண்டு, அந்த வகையில் சிலருக்கு குறிப்பிட்ட விலங்குகளை கண்டால் பய உணர்வு ஏற்படும், சிலருக்கு இரத்தத்தை கண்டால் மனதில் பய உணர்வு ஏற்படும்.

அந்த வகையில் ஆப்பிரிக்க நாடான ரூவாண்டை சேர்ந்த கேலிட்ஸி நிசாம்வித்தா என்ற 71 வயது நபருக்கு பெண்களை பார்த்தாலே பயம் வரும் வித்தியாசமான பாதிப்பால் பாதிக்கப்பட்டுள்ளார்.

இதற்காக தன்னை வீட்டிற்குள்ளேயே 55 ஆண்டுகளாக தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். மேலும் பெண்களை பார்க்க கூடாது என்பதற்காக தன்னுடைய வீட்டை சுற்றி 15 அடி சுவர் ஒன்றை எழுப்பியுள்ளார்.

பெண்களை பார்த்தாலோ அல்லது அவர்களை பற்றி நினைத்தாலோ பயம் ஏற்படும் உணர்வுகளை கைனோபோபியா என்று மருத்துவ ரீதியாக அழைக்கப்படுகிறது.

இத்தகைய பய உணர்வின் மூலம் நெஞ்சில் ஒருவித படபடப்பு, அதிகப்படியான வியர்த்தல், இதய இறுக்கம், மூச்சுத் திணறல் போன்ற சிரமங்கள் ஏற்படலாம் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

கேலிட்ஸி நிசாம்வித்தா சிறு வயது முதலே பெண்களை பார்ப்பதை தவிர்த்து வந்தாலும், அப்பகுதி பெண்கள் தொடர்ந்து அவருக்கு உதவி வருகின்றனர்.

அவருக்கு உதவ வேண்டும் என்றால் அப்பகுதி மக்கள் அவருக்கு தேவையான பொருட்களை வெளியிலிருந்து வீட்டிற்குள் வீசம் நிலையில் தான் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

  
  
   Bookmark and Share Seithy.com


 gloriousprinters.com 2021
Kugeenthiran-200-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Karan Remax-2010
Asiaan-Salon-2022-seithy
Vaheesan-Remax-2016
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா