Untitled Document
June 22, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
128 ஆண்டுகளுக்கு பிறகு கைதியின் உடல் அடக்கம்: நடந்தது என்ன?
[Tuesday 2023-10-10 18:00]

அமெரிக்காவின் பென்சில் வெனியா மாகாணத்தில் உள்ள சிறைக்கைதியின் உடலானது 128 ஆண்டுகளுக்கு பிறகு அடக்கம் செய்யப்பட்டுள்ளது. கடந்த 1895 -ம் ஆண்டு அமெரிக்காவின் பிலடெல்பியாவின் ரீடிங் பகுதியில் திருட்டு வழக்கில் கைதான ஒருவர் சிறையில் உயிரிழந்தார். இவர், சிறையில் அடைக்கப்பட்ட போது தனது உண்மையான பெயரை வெளியில் சொல்லாமல் ஜேம்ஸ் மர்பி என்று பதிவு செய்திருந்தார்.

இதனால், இவரது உடலை யாரும் வாங்கி செல்ல வரவில்லை. இதனையடுத்து, உடலை வாங்கி செல்ல யாராவது வரும்வரை எம்பாமிங் நுட்பங்களை பயன்படுத்தி மம்மியாக மாற்றினர். பின்பு, உடலை பதப்படுத்தி பாதுகாத்து வந்தனர்.

இஸ்ரேல்-ஹமாஸ் போரில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவு! முன்னாள் Porn நடிகை மியா கலிஃபாவை அதிரடியாக நீக்கிய கனேடிய ஒலிபரப்பாளர் இஸ்ரேல்-ஹமாஸ் போரில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவு! முன்னாள் Porn நடிகை மியா கலிஃபாவை அதிரடியாக நீக்கிய கனேடிய ஒலிபரப்பாளர் பின்பு, இவருக்கு ஸ்டோன்மேன் வில்லி என்று பெயரிடப்பட்டு 128 ஆண்டுகளாக ரீடிங் பகுதியில் உள்ள ஆமன் தேவாலயத்தில் இவரது உடல் வைக்கப்பட்டது. இதனை, பொதுமக்கள் ஆர்வமுடன் பார்க்க வந்தனர்.

இந்நிலையில், ஸ்டோன்மேன் வில்லியின் உடலை அடக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டதையடுத்து பாரெஸ்ட் ஹில்ஸ் மெமோரியல் பூங்காவில் உள்ள கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டது.

இதனிடையே, ஸ்டோன்மேன் வில்லி ஐரிஷ் வம்சாவளியை சேர்ந்தவர் என்றும், நியூயார்க்கில் வசித்தார் என்றும், குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர் என்றும் கண்டுபிடிக்கப்பட்டது.

அதுமட்டுமல்லாமல், இவரது தந்தை பணக்காரர் என்பதால் திருட்டு வழக்கில் கைதான போது உண்மையான பெயரை சொல்லவில்லை என ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

  
  
   Bookmark and Share Seithy.com


Vaheesan-Remax-2016
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Asiaan-Salon-2022-seithy
Karan Remax-2010
 gloriousprinters.com 2021
Kugeenthiran-200-2022-seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா