Untitled Document
June 22, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
இணையத்தில் வைரலாகும் உருண்டை வடிவ முட்டை!
[Tuesday 2023-06-20 18:00]

ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஜாக்குலின் பெல்கேட் என்பவர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள வீடியோவில் உருண்டை வடிவ முட்டை குறித்த காட்சிகள் உள்ளது. ஆஸ்திரேலியா- வூல்வொர்த் பகுதியில் உள்ள ஒரு மளிகை கடையில் பெண் ஒருவர் ஷாப்பிங் செய்ய சென்றுள்ளார். அப்போது அங்கு தான் உருண்டை வடிவ முட்டையை கண்டுள்ளார்.

பார்ப்பதற்கு வித்தியாசமாக தெரிந்ததால் உடனே அந்த முட்டையை வாங்கிய அவர் இதுபோன்ற வடிவில் வேறு எங்காவது முட்டைகள் இருக்கிறதா என கூகுளில் தேடியுள்ளார்.

அப்போது 10 லட்சத்தில் ஒன்று தான் இதுபோன்ற வடிவில் இருக்கும் என தெரியவந்துள்ளது. கடைசியாக இது போன்று கிடைத்த ஒரு முட்டை இந்திய மதிப்பில் ரூ.1.14 லட்சத்திற்கு விற்பனையாகி இருப்பதும் அவருக்கு தெரியவந்தது.

அவர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள முட்டை தற்போது இணையத்தில் வைரலாகி வரும் உருண்டை வடிவ முட்டை வீடியோ இதுவரை 2 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வைகளை குவித்துள்ளது.

  
  
   Bookmark and Share Seithy.com


Kugeenthiran-200-2022-seithy
Vaheesan-Remax-2016
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Karan Remax-2010
Asiaan-Salon-2022-seithy
 gloriousprinters.com 2021
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா