Untitled Document
June 22, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
செவ்வாய் கிரக மேற்பரப்பில் கரடியின் முகம்! Top News
[Wednesday 2023-02-01 18:00]

செவ்வாய் கிரகத்தில் பாறையில் கரடி முகம் அமைப்பு இருப்பது போன்ற படத்தை நாசா வெளியிட்டுள்ளது. அமெரிக்க விண்வெளி கழகமான நாசா பல்வேறு செயற்கை கோள்களை அனுப்பி செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்து வருகின்றன. இங்கு உயிர்கள் வாழ வாய்ப்பு உள்ளதா? என்று ஆய்வு மும்முரமாக நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் செவ்வாய் கிரகத்தில் பாறையில் மிருகம் ஒன்றின் முகம் அமைப்பு இருப்பது போன்ற படத்தை நாசா வெளியிட்டுள்ளது.

நாசா அனுப்பிய ஆர்பிட்டர் மூலம் இந்த புகைப்படம் எடுக்கப்பட்டு உள்ளது.

அதில் மேலே இரண்டு சிறிய குழிகள் காணப்படுகின்றன. அவை ஒரே நேர்கோட்டில் சரியாக உள்ளன. அவைகள் கண்கள் போல் உள்ளது.

அதன் கீழ் பகுதியில் பெரிய குழி உள்ளது. இது நீளமாகவும் அது வாய் மற்றும் மூக்கு பகுதி போல் உள்ளது. இயற்கையாக ஏற்பட்ட இந்த குழி பார்ப்பதற்க கரடியின் முகத்தை போல் காட்சியளிக்கின்றது.

இந்த உருவம் மொத்தம் 2 ஆயிரம் மீட்டர் அகலத்திற்கு உள்ளது.

அதிநவீன கேமரா மூலம் படம் இந்த புகைப்படம் மூக்கு பகுதியை போன்று இருப்பது ஒரு எரிமலையாக இருக்கலாம் அல்லது மண் துவாரமாக இருக்கலாம் என்றும் சுற்றி தெரியும் வட்ட வடிவமானது எரிமலை குழம்பு அல்லது மண் சரிவாக இருக்கலாம் என்றும் விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றது..

இருப்பினும் இந்தபுகைப்படம் குழப்பத்தை ஏற்படுத்துவதாகவும் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

  
  
   Bookmark and Share Seithy.com


Karan Remax-2010
Kugeenthiran-200-2022-seithy
 gloriousprinters.com 2021
Asiaan-Salon-2022-seithy
Vaheesan-Remax-2016
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா