Untitled Document
June 22, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
எவ்வாறு கடலின் ஆழம் கணக்கிடப்படுகிறது?
[Sunday 2022-10-09 16:00]

புவியின் பரப்பில் 70 விழுக்காட்டை ஆக்கிரமித்துள்ள உப்பான நீர் கொண்ட தொடர்ச்சியான நீர்நிலையே கடல் ஆகும். இதன் ஆழத்தை கண்டறிய 19ம் நூற்றாண்டில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது, அப்போது நவீனக் கருவிகள் இல்லாததால் மிக நீளமான கயிற்றை அல்லது சங்கிலியைக் கடலின் உள்ளே ஆங்காங்கே இறக்கி மிகவும் பழமையான முறையை மேற்கொண்டு, சுமார் 7000 இடங்களில் ஆழம் கண்டறிந்தனர்.

இந்த முறையில் குறிப்பிட்ட இடத்தின் ஆழத்தை மட்டும் அறியமுடிந்ததே தவிர, கடலின் அடிமட்டம் குறித்து அறிய வரைபடம் தயாரிக்க இது உதவவில்லை.

அல்ட்ராசோனிக் சவுண்ட்(Ultrasonic Sounds) என்னும் ஒலிகளை கொண்டே கடலின் ஆழம் கண்டறியப்படுகிறது.

கடலின் மேற்பரப்பிலிருந்து அனுப்பப்படும் அல்ட்ராசோனிக் ஒலி அலைகள், கடலின் ஆழத்தில் தலைப்பகுதியை தொட்டுத் திரும்புகின்றன.

அவ்வாறு திரும்பும் ஒலி அலைகளை குறிப்பிட்ட ஒலி ஏற்பான்களால் பெறப்பட்ட அவை பதிவு செய்யப்படுகின்றன.

கடல் நீரில் அல்ட்ராசோனிக் ஒலிகளின் வேகம் ஏற்கனவே கணக்கிடப்பட்டுள்ளன. ஒரு கடல் பகுதிக்குள் செலுத்தப்படும் ஒலி அலைகள் திரும்பி வரும் நேரத்தை பொறுத்து கடலின் ஆழம் கணக்கிடப்படுகிறது.

  
  
   Bookmark and Share Seithy.com


Kugeenthiran-200-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
 gloriousprinters.com 2021
Asiaan-Salon-2022-seithy
Vaheesan-Remax-2016
Karan Remax-2010
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா