Untitled Document
June 22, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
கடலுக்கடியில் 11 வருடங்களாக மனைவியின் உடலை தேடிவரும் நபர்!
[Friday 2022-10-07 18:00]

ஜப்பானில் சுனாமியில் சிக்கி மாயமான தனது மனைவியை 11 ஆண்டுகளாக கணவர் ஒருவர் தொடர்ந்து தேடி வரும் சம்பவம் தொடர்ப்பில் தகவல் வெளியாகியுள்ளது. ஜப்பானில் 2011ல் ஏற்பட்ட சக்திவாய்ந்த சுனாமியால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட பகுதி Onagawa என கூறப்படுகிறது. இந்த பகுதியில் தான் Yasuo Takamatsu தமது மனைவியை சுனாமியில் தொலைத்துள்ளார்.

2011 மார்ச் 11ம் திகதி ஏற்பட்ட இந்த Tōhoku சுனாமியால் சுமார் அரை மில்லியன் மக்கள் குடியிருப்பை இழந்ததுடன், 20,000 பேர்கள் கொல்லப்பட்டனர். அத்துடன் , 2,500 பேர்களின் சடலம் மீட்கப்பட்டாத நிலையில் அவர்கள் மாயமானவர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டு தேடப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில், Yasuo Takamatsu தமது மனைவியை கடந்த 11 ஆண்டுகளாக தொடர்ந்து தேடி வருகிறார்.

ஆழ்கடலில் மூழ்கி தேடுதல் சுமார் இரண்டரை ஆண்டு காலம் சுனாமியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தமது மனைவியை தேடி வந்த Yasuo Takamatsu, 2013ல் ஆழ்கடலில் மூழ்கி தேடுதலை தொடர்வதற்கான பயிற்சிகளை மேற்கொண்டார்.

வங்கி ஊழியரான குறித்த பெண்மணியின் மொபைல்போனானது, அவர் பணியாற்றிய கட்டிடத்தின் வாகன நிறுத்துமிடத்தில் இருந்து Yasuo Takamatsu மீட்டுள்ளார். சுனாமி ஏற்பட்டு சில மாதங்களுக்கு பின்னர் அவரது மொபைல்போன் மீட்கப்பட்டதை அடுத்து, தமது தேடுதல் நடவடிக்கையை Yasuo Takamatsu தீவிரப்படுத்தியுள்ளார்.

தற்போது 65 வயதாகும் Yasuo Takamatsu வாரத்தில் ஒருநாள் ஆழ்கடலில் மூழ்கி தமது மனைவியின் உடலை தேடி வருகிறார். இநிலையில் கடலின் போக்கு காரணமாக அவரது உடலை தாம் மீட்காமல் போகலாம், ஆனால் தேடுவதை மட்டும் நிறுத்தப்போவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tōhoku சுனாமிக்கு முன்னர் ஆழ்கடலில் ஏற்பட்ட நிலநடுக்கமானது 9.1 ரிக்டர் அளவில் பதிவானது.

மேலும் ஜப்பானில் ஏற்பட்ட மிக மோசமான நிலநடுக்கம் மட்டுமின்றி, மனிதகுல வரலாற்றில் மிக மோசமான 4வது பேரிடர் இதுவென ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

  
  
   Bookmark and Share Seithy.com


Vaheesan-Remax-2016
Kugeenthiran-200-2022-seithy
Karan Remax-2010
Asiaan-Salon-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
 gloriousprinters.com 2021
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா