Untitled Document
June 22, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
சுடுகாட்டில் 6 அடி ஆழ குழியில் வாழும் விசித்திர மனிதர்!
[Saturday 2022-09-24 20:00]

தொண்டைப் பகுதியில் இருந்த கேன்சர் நோய் மருத்துவமனைக்கு போகமலேயே சரியானதால் அம்மனுக்கு சுடுகாட்டில் 6 அடி குழி தோண்டி அதில் இரவு பகலாக நபர் ஒருவர் விரதமிருந்து பூஜை செய்து வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

தென் தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோவில் திருவிழாவில் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் நேர்த்திக்கடன் செய்வதை வழக்கமாக வைத்துள்ளனர்.

நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள சங்கனாங்குளம் ஊரைச் சேர்ந்த கூலித் தொழிலாளி சந்திரன். இவர் சுமார் 35 ஆண்டுகளாக விதவிதமான வேடமணிந்து அம்மனை தரிசித்து வருகிறார்.

கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு இவருக்கு தொண்டை பகுதியில் கேன்சர் ஏற்பட்டு சிகிச்சைக்கு சென்ற நிலையில், மருத்துவர்கள் குணப்படுத்த முடியாது என்று கூறியுள்ளனர்.

பின்பு அம்மனை மனம் உருகி வழிபட்டு அவருக்கு புற்றுநோய் சரியாகியதால், அம்மனுக்கு நன்றி கடன் செலுத்தும் விதமாக 4 ஆண்டுகளாக சுடுகாட்டு காளி வேடம் அணிந்து விரதம் இருந்து நேர்த்திக்கடன் செலுத்தி வருகிறார்.

இதுகுறித்து அவர் கூறுகையில் தனது நோய் குணமாகியதால், கடந்த 4 ஆண்டுகளாக சுடுகாட்டு காளி வேடமணிந்து 21 நாட்கள் அன்ன ஆகாரம் உண்ணாமல் சுடுகாட்டில் உடல் அடக்கம் செய்ய தோண்டப்படும் குழி போன்று குழி தோண்டி அந்த குழியில் தங்கி இரவு பகல் வசித்து வருகிறேன்.

அதனால் தான் உயிருடன் இருக்கும் போதே இறந்துவிட்டதாக நினைத்து சுடுகாடு வரை சென்று உயிருடன் திரும்புகிறேன். முத்தாரம்மனின் ஒரு அவதாரம் சுடுகாட்டு காளி'' என்றார். இவரிடம் அருள்வாக்கு பெறுவதற்காக ஏராளமான பக்தர்கள் அவரை தேடி வருவது குறிப்பிடத்தக்கது.

  
  
   Bookmark and Share Seithy.com


Kugeenthiran-200-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
 gloriousprinters.com 2021
Karan Remax-2010
Vaheesan-Remax-2016
Asiaan-Salon-2022-seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா