Untitled Document
June 22, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
பசியைப்போக்கும் இயந்திரத்தை அறிமுகப்படுத்திய துபாய்!
[Wednesday 2022-09-21 19:00]

பசியுடன் ஒருவரும் வாடக்கூடாது என்ற உயர்ந்த எண்ணத்தில், துபாய் முழுதும் ஆங்காங்கே சூடான ரொட்டியை இலவசமாக அளிக்கும், ‘வெண்டிங்’ இயந்திரங்களை அந்நாட்டு அரசு நிறுவியுள்ளது. மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சின் துபாயில், வெளிநாடுகளில் இருந்து வந்து பணிபுரிவோர் அதிக எண்ணிக்கையில் வசிக்கின்றனர்.

இவர்களில் பெரும்பாலானோர் கட்டிட வேலை, கார் மற்றும் கனரக வாகன ஓட்டுனர்கள், ‘டெலிவரி’ ஊழியர்களாக பணியாற்றுகின்றனர்.

குடும்பத்தினருக்கு பணத்தை சேமிப்பதற்காக இவர்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் மூன்றுவேளை சாப்பிடாமல் பட்டினியுடன் நாட்களை கழிக்கின்றனர்.

இந்நிலையை மாற்ற வேண்டும் என, ஐக்கிய அரபு எமிரேட்சின் பிரதமர் ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தோம் (Sheikh Mohammed bin Rashid Al Maktoum)கடந்த ஆண்டு தெரிவித்தார்.

இதன் ஒருபகுதியாக, துபாயில் இலவச உணவு அளிக்கும், ‘வெண்டிங் மிஷின்’ எனப்படும், தானியங்கி இயந்திரங்களை நகரின் பல்வேறு பகுதிகளிலும் அவர் நிறுவியுள்ளார்.

இந்த உணவு இயந்திரங்கள் கடந்த 17ஆம் திகதி முதல் செயல்பாட்டுக்கு வந்தன. துபாயின், ‘அஸ்வாக்’ மளிகை கடைகளின் வாயிலில் இந்த இயந்திரங்கள் பொருத்தப்பட்டுள்ளன.

இதில், அரபி ரொட்டி மற்றும், ‘பிங்கர் ரோல்’ ஆகிய இரண்டு வகை உணவுகள், சுடச்சட தயாரிக்கப்பட்டு ஒரு நிமிடத்தில் அளிக்கப்படுகின்றன. இந்த இலவச உணவு திட்டத்துக்கு தனிநபர்களும் நன்கொடை அளிக்கலாம் என துபாய் அரசு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

  
  
   Bookmark and Share Seithy.com


Vaheesan-Remax-2016
Asiaan-Salon-2022-seithy
Karan Remax-2010
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
 gloriousprinters.com 2021
Kugeenthiran-200-2022-seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா