Untitled Document
June 22, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
திடீரென சிவப்பு நிறத்தில் மாறிய உக்ரைன் நதி!
[Saturday 2022-09-17 16:00]

உக்ரைனிலுள்ள நதி ஒன்று திடீரென சிவப்பு நிறத்தில் மாறியுள்ளதால் மக்கள் குழப்பமடைந்துள்ளார்கள். வியாழக்கிழமை, மத்திய உக்ரைனிலுள்ள Kryvyi Rih என்ற நகரின்மீது ரஷ்யப் படைகள் எட்டு ஏவுகணைகளை வீசின. இந்தத் தாக்குதலில், நகரின் நீரேற்று மையம் ஒன்று சேதமடைந்ததால், Inhulets நதியில் வெள்ளம் பெருக்கெடுத்தது.

உக்ரைனின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்றான Kryvyi Rih நகரில் 650,000 பேர் வாழ்ந்துவரும் நிலையில், வெள்ளப்பெருக்கு காரணமாக ஏராளமானோர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறவேண்டியதாயிற்று. இதற்கிடையில், நேற்று திடீரென நதி வெள்ளம் சிவப்பு நிறத்தில் மாறியது.

பலரும் அதனால் அதிர்ச்சியடைந்தாலும், உள்ளூர் மக்களோ, நதிக்கரையில் உள்ள சிவப்புக் களிமண், வெள்ளத்தால் அடித்துவரப்படுவதால் தண்ணீர் சிவப்பு நிறமாக மாறியிருக்கலாம் என்று கூறியுள்ளார்கள்.

  
  
   Bookmark and Share Seithy.com


Karan Remax-2010
Asiaan-Salon-2022-seithy
 gloriousprinters.com 2021
Vaheesan-Remax-2016
Kugeenthiran-200-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா