Untitled Document
June 22, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
வயிறு வலியால் துடித்த இளைஞர்: மருத்துவர்களுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!
[Wednesday 2022-09-14 18:00]

மேற்கு வங்க மாநிலத்தில் வயிறு வலியால் துடித்த இளைஞர் ஒருவரின் வயிற்றில் ஏழரை இன்ச் அளவிலான சென்ட் பாட்டில் இருந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்க மாநிலத்தில் இயங்கிவரும் பர்த்வான் மருத்துவக் கல்லூரிக்கு கடந்த வாரம் புதன்கிழமை 27 வயது இளைஞர் ஒருவர் வயிற்றுவலி காரணமாக சிகிச்சைக்கு மருத்துவரை அணுகியுள்ளார்.

குறித்த இளைஞரை பரிசோதித்த மருத்துவர்கள் வயிற்றில் பாட்டில் ஒன்று இருப்பதை உணர்ந்துள்ளனர். சுமார் ஏழரை இன்ச் அளவிலான சென்ட் பாட்டில் இருப்பது தெரியவந்துள்ளது.

பின்பு அவசரமாக அறுவைசிகிச்சைக்கு ஏற்பாடு செய்த மருத்துவர்கள் இரண்டு மணிநேரத்திற்கு பின்பு குறித்த பாட்டிலை வெளியே எடுத்துள்ளனர். இது மருத்துவர்களுக்கு பெரிய சவாலாக இருந்துள்ளது.

சுமார் 20 தினங்களுக்கு முன்பு மலக்குடல் வழியாக பாட்டில் உட்செலுத்தப்பட்டிருக்கலாம் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

அதன் பிறகுதான் வயிற்று வலியால் அவதிப்பட்டதுடன், கடந்த சில நாள்களாக இயற்கை உபாதைகூட கழிக்க முடியாமல் அவதிப்பட்டிருக்கிறார் என்று தெரிவித்துள்ளனர்.

வயிற்றில் பாட்டில் இருந்ததால் நோயாளியின் குடல் பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. அதை விரைவில் மற்றொரு அறுவை சிகிச்சை மூலம் சரிசெய்வோம்" எனத் தெரிவித்துள்ளனர்.

  
  
   Bookmark and Share Seithy.com


Mahesan-Royallepage-01-01-2025-Seithy
 gloriousprinters.com 2021
Karan Remax-2010
Kugeenthiran-200-2022-seithy
Asiaan-Salon-2022-seithy
Vaheesan-Remax-2016
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா