Untitled Document
June 22, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
சிவராத்திரி நாளில் மட்டும் தென்படும் அதிசய சங்கு: எங்கு தெரியுமா?
[Wednesday 2022-08-17 17:00]

பீகார் மாநிலத்தில் மந்தர் மலைப் பகுதியில் சிவராத்திரி நாளில் மட்டும் தண்ணீர் வற்றி, ஒரு அதிசய சங்கு ஒன்று பொதுமக்களின் கண்களுக்கு தென்படும் சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவனை ஜோதி வடிவில் பார்க்கும் நாளை சிவராத்திரியாக ஆண்டு தோறும் கொண்டாடி வரும் நிலையில், இந்த நாளில் அதிசயம் ஒன்றும் ஆண்டு தோறும் அரங்கேறகின்றதை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

பீகார் மாநிலம் பாங்கா மாவட்டத்தின், கடற்கரையை ஒட்டி மந்தர் மலைப்பகுதியில் சங்கு குளம் ஒன்று அமைந்துள்ளது. இந்த சங்கு குளத்தில், 'பாஞ்சசன்ய சங்கு' என்று அழைக்கப்படும் சங்கு உள்ளது.

இந்த சங்கானது, வருடம் முழுவதும் சுமார் 70 அடி முதல் 80 அடி ஆழத்தில் தண்ணீரில் மூழ்கிய நிலையில் இருக்கும். சிவராத்திரிக்கு முந்தைய தினம் மட்டும் தண்ணீர் வற்றி, சங்கு பொதுமக்களின் கண்களுக்கு தென்படும்.

ஒரே நாளில் தண்ணீர் வற்றி சங்கு தென்படுவதும், மறுநாளே தண்ணீர் பெருக்கெடுத்து சங்கு மூழ்கிப்போவதும் ஆச்சரியமாக உள்ளதாக அங்கு வசிக்கும் பொது மக்கள் கூறி வருகின்றனர்.

புராண கதைகளின் படி, இந்த மந்தர் மலையானது, பாற்கடலை கடைந்து அமிர்தம் எடுக்க, தேவர்களும் அசுரர்களும், மந்தார மலையை மத்தாக பயன்படுத்தினர் என கூறப்படுகிறது.

பீகார், கடல் பகுதியில் உடைந்த மத்து போன்ற, மந்தார மலை கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இந்த மலைப்பகுதி பாகல்பூர் என்ற இடத்தில் இருந்து 25 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.

இந்த மலைக்கு பிரதோ‌ஷம், அமாவாசை, பவுர்ணமி ஆகிய நாட்களில் திரளான பக்தர்கள் வருகை தரும் நிலையில், இப்பகுதி வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது என்பதால் மலைக்கு செல்ல பக்தர்கள் அனுமதி பெற வேண்டியது அவசியம் என்றும் கூறப்படுகின்றது.

  
  
   Bookmark and Share Seithy.com


Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Asiaan-Salon-2022-seithy
Kugeenthiran-200-2022-seithy
 gloriousprinters.com 2021
Vaheesan-Remax-2016
Karan Remax-2010
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா