Untitled Document
June 22, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
அவுஸ்திரேலியாவில் மீன் பிடிக்க சென்ற நபரை துரத்திய "நாய் மனிதன்": திடுக்கிடும் சம்பவம்!
[Saturday 2022-07-30 16:00]

அவுஸ்திரேலியர் ஒருவர் தான் மீன் பிடிக்கசென்றபோது பாதி மனித உடலும், பாதி நாய் உடலும் கொண்ட ஒரு உருவத்தை சந்தித்ததாக தெரிவித்துள்ளார். தான் மீன் பிடித்துக்கொண்டிருக்கும்போது தன்னை ஒரு உருவம் தொடர்ந்து வருவதை கவனித்த ஜான் என்னும் அந்த அவுஸ்திரேலியர், அந்த உருவத்தை தனது மொபைலில் புகைப்படம் எடுத்துள்ளார்.

வீட்டுக்குச் சென்று அந்த புகைப்படத்தைப் பார்த்த ஜான் திடுக்கிட்டுள்ளார். அது 1887ஆம் ஆண்டு, அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்திய நாய் மனிதன் என்பதை தான் உணர்ந்துகொண்டதாக தெரிவிக்கிறார் ஜான்.

பிறகு மற்றொரு நாள் அதே இடத்துக்கு மீன் பிடிக்கச் சென்றபோதும் அதே உருவம் தன்னைப் பின்தொடர்வதைக் கவனித்துள்ளார் ஜான். இம்முறை அது ஜானைத் துரத்தியுள்ளது. பயங்கரமாக உறுமி சத்தமிட்டவண்ணம் அவரை அந்த உருவம் இம்முறை துரத்த, உயிருக்கு பயந்து ஓட்டம் பிடித்திருக்கிறார் ஜான்.

தன் கையில் சிறு கத்தி போன்ற ஆயுதம் எதுவும் இல்லாமல், தனது மொபைலுக்கும் சிக்னல் கிடைக்காமல், உயிருக்குப் பயந்து ஓடிய அந்த பத்து நிமிடங்களைத் தன்னால் ஒருபோதும் மறக்கமுடியாது என்கிறார் ஜான்.

தன்னைப்போலவே தெரியாமல் அந்த இடத்துக்கு யாராவது சென்று அவர்கள் தாக்கப்படக்கூடாது என்பதற்காகத்தான் தான் இந்த விடயத்தை வெளியுலகுக்குத் தெரிவித்துள்ளதாக கூறுகிறார் ஜான்.

  
  
   Bookmark and Share Seithy.com


Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Karan Remax-2010
 gloriousprinters.com 2021
Asiaan-Salon-2022-seithy
Vaheesan-Remax-2016
Kugeenthiran-200-2022-seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா