Untitled Document
June 22, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
கனேடிய தம்பதியை கோடீஸ்வரர்களாக்கிய மூக்கு கண்ணாடி!
[Thursday 2022-07-14 08:00]

கனடாவில் கணவன் மூக்கு கண்ணாடி அணிந்ததால் தம்பதி பெரும் கோடீஸ்வரர்களாக மாறியுள்ளனர். பிரிட்டீஷ் கொலம்பியாவை சேர்ந்தவர் மைக்கேல் ஸ்ட்ரேஞ். இவர் மனைவி ஜெனிபர். இவர்கள் லொட்டோ மேக்ஸ் லொட்டரி டிக்கெட் வாங்கியிருந்த நிலையில் அதில் பரிசு விழுந்ததா என்பதை தெரிந்து கொள்ள லொட்டரி சீட்டை மைக்கேல் சரிபார்த்துள்ளார்.

மூக்கு கண்ணாடி அணியாமல் லொட்டரி சீட்டுக்கு பரிசு விழுந்துள்ளதா என மைக்கேல் பார்த்த நிலையில் கனேடிய டொலரில் $10 (கிட்டத்தட்ட ரூ 2500) பரிசு விழுந்ததாக நினைத்தார். சரி, மிக சிறிய பரிசு தான் விழுந்துள்ளது என நினைத்து கொண்ட போது தான் அந்த ட்விஸ்ட் அரங்கேறியது.

ஏனெனில் மூக்கு கண்ணாடியை அணிந்து மீண்டும் ஒருமுறை பார்த்த போது பல பூஜ்ஜியங்களை அவர் படிக்காமல் விட்டிருந்தது தெரியவந்தது. ஆம்! உண்மையில் தம்பதிக்கு லொட்டரியில் $1 மில்லியன் (கிட்டத்தட்ட ரூ 27,64,86,968.20) பரிசு விழுந்தது தெரியவந்தது.

அதன்படி இந்த தம்பதி பெரும் கோடீஸ்வரர்கள் ஆகியுள்ளனர். மைக்கேல் கூறுகையில், இவ்வளவு பெரிய வெற்றி உண்மையில் அதிர்ச்சியை கொடுத்தது. மூக்கு கண்ணாடி அணிந்ததால் தான் உண்மையான பரிசு பணம் குறித்து அறிய முடிந்தது.

பரிசு பணத்தை வைத்து முதலில் புதிய கார் வாங்கிவிட்டு வீட்டை புதுப்பிப்போம். எங்கள் வாழ்க்கையே மாறி போன தருணம் இது, எங்கள் குடும்பத்தினருக்கு பேச்சே வரவில்லை என இன்ப அதிர்ச்சியுடன் கூறியுள்ளார்.

  
  
   Bookmark and Share Seithy.com


 gloriousprinters.com 2021
Vaheesan-Remax-2016
Asiaan-Salon-2022-seithy
Kugeenthiran-200-2022-seithy
Karan Remax-2010
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா