Untitled Document
June 22, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
யாருமே கண்டிராத பிரபஞ்சத்தின் புகைப்படத்தை வெளியிட்ட நாசா! Top News
[Wednesday 2022-07-13 16:00]

உலகமே கண்டிராத புகைப்படத்தை நாசா வெளியிட்டுள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது. பிரபஞ்சத்தின் ஆரம்ப காலத்தை காட்டு விதமாக ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி எடுத்த புகைப்படத்தை அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா வெளியிட்டுள்ளது. நட்சத்திர துகள்களால் நிறைந்து காணப்படும் இப்புகைப்படம் பிரபஞ்சம் குறித்து இதுவரை கிடைத்துள்ள புகைப்படங்களிலேயே மிகவும் ஆழமானது என்பதாகும்.

உலகிலேயே மிகப்பெரிய, சக்திவாய்ந்த விண்வெளி தொலைநோக்கியை நாசா கடந்த ஆண்டு டிசம்பா் மாதம் விண்வெளியில் செலுத்தியது.

இந்த விண்வெளி தொலைநோக்கி எடுத்த புகைப்படத்தைதான் நாசா வெளியிட்டுள்ளது. மேலும், நாசா வெளியிட்டுள்ள இந்தப் புகைப்படத்தில் ஏராளமான நட்சத்திர திரள்கள் காணப்படுகின்றன.

புகைப்படத்தின் முன்பகுதியில் மாபெரும் நட்சத்திர திரள்களும், பின்பகுதியில் தொலைதூரத்தில் உள்ள நட்சத்திர திரள்களும் பிரகாசமாக ஒளிர்கின்றன.

கரீனா நிபுலாவின் என்.ஜி.சி. 3324 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த பகுதியில் இருந்தே நட்சத்திரங்கள் உருவாகலாம் என்று நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

  
  
   Bookmark and Share Seithy.com


Karan Remax-2010
Vaheesan-Remax-2016
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Kugeenthiran-200-2022-seithy
 gloriousprinters.com 2021
Asiaan-Salon-2022-seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா