Untitled Document
June 22, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
எலுமிச்சை பழத்தால் கோடீஸ்வரியான அமெரிக்க இளம்பெண்!
[Thursday 2022-06-30 16:00]

எலுமிச்சை பழங்களால் 17 வயது பெண் ஒருவர் பெரும் கோடீஸ்வரர் ஆகியுள்ளார். அமெரிக்காவை சேர்ந்த 17 வயது மிகைலா உல்மர்(Mikaila Ulmer). இவரின் சொத்து மதிப்பு 5 மில்லியன் டொலர்கள் (ரூ 1,81,35,67,500.00) வரை இருக்கும். இவ்வளவு பணத்தையும் எலுமிச்சை பழங்கள் மற்றும் தேனீக்கள் தான் இவருக்கு கொடுத்தது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? மீ அண்ட் தி பீஸ் லெமனேட் என்ற நிறுவனத்தின் தலைவராக மிகைலா உல்மர்(Mikaila Ulmer) உள்ளார்.

17 வயதில் மிகைலா உல்மர்(Mikaila Ulmer) தொழிலதிபராகக் காரணமே தேனீக்கள்தான். தேனடைகளில் இருந்து எடுக்கப்படும் தேனுடன், சுவையான புதினா, ஆளிவிதை, எலுமிச்சை ஆகியவற்றைக் கலந்து ‘பீ ஸ்வீட் லெமனேட் என்னும் பெயர் கொண்ட இயற்கைப் பானத்தைத் தயாரித்து பெரிய அளவில் விற்பனை செய்து வருகிறார்.

அமெரிக்காவில் பல இடங்களில் கிளைகளைக் கொண்டு இயங்கும் ஹோல் புட்ஸ் என்ற சூப்பர் மார்க்கெட் நிறுவனம் தனது 55 கடைகளில் மிகைலா உல்மர்(Mikaila Ulmer)நிறுவனம் தயாரிக்கும் பானத்தை விற்பனை செய்து வருகிறது. அதற்காக, மிகைலா உல்மர்(Mikaila Ulmer) ரூ. 70 கோடிக்கு ஒப்பந்தம் ஒன்று போடப்பட்டுள்ளது.

மேலும், ‘ஷார்க் டாங்க் என்ற தொலைக்காட்சி ரியாலிட்டி நிகழ்ச்சி மூலம் இச்சிறுமிக்கு ரூ. 38.59 லட்சம் முதலீடு கிடைத்துள்ளது. இந்த வகை பானங்களை கடந்த 1940-ல் மிகைலாவின் பாட்டி முதலில் தயாரித்தார். அதற்கான ரகசியம், வாழையடி வாழையாகத் தற்போது மிகைலா உல்மர்(Mikaila Ulmer) வரை வந்து சேர்ந்துள்ளது.

மிகைலா உல்மர்(Mikaila Ulmer)-வுக்கு இந்த வியாபாரத்துக்கான யோசனை 4 வயதாக இருக்கும் போது வந்திருக்கிறது. நான்கு வயதில் அவரை தேனீ கடித்துள்ளது. அப்போது வலியால் துடித்த மிகைலா உல்மர்(Mikaila Ulmer), பின்னர் அதன் மேல் கொண்ட ஆர்வத்தால் தேனீக்களை குறித்துப் படிக்கத் தொடங்கியுள்ளார்.

அதன் பின்னர் பீ ஸ்வீட் லெமனேட் பானம் தயாரிக்கும் தொழிலை கடந்த 2009-ல் தொடங்கினார். தன் வருமானத்தில் ஒரு குறிப்பிட்ட தொகையை தேனீக்களைக் காப்பாற்றுவதற்காகச் செலவிட்டு வரும் மிகைலா உல்மர்(Mikaila Ulmer), தேனீக்களைக் காப்பதே தன் மிகப்பெரிய குறிக்கோள் என்கிறார்.

இதன்போது மிகைலா உல்மர்(Mikaila Ulmer) தனது முயற்சியைத் தொடங்கியதிலிருந்து தேனீக்களைக் காப்பாற்றும் தொண்டு நிறுவனங்களுக்கு லாபத்தில் 10% நன்கொடையாக அளித்துள்ளார்.

  
  
   Bookmark and Share Seithy.com


Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Karan Remax-2010
Kugeenthiran-200-2022-seithy
 gloriousprinters.com 2021
Asiaan-Salon-2022-seithy
Vaheesan-Remax-2016
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா