Untitled Document
June 22, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
அமெரிக்க பெண்ணுக்கு 2 முறை அடித்த பேரதிர்ஷ்டம்!
[Monday 2022-06-13 16:00]

கொடுக்கும் தெய்வம் கூரையை பிய்த்துக்கொண்டு கொடுப்பதுபோல அமெரிக்க பெண் ஒருவருக்கு 2 ஆண்டுகளுக்கு பின் 2வது முறையாக லாட்டரியில் ரூ.1.5 கோடி பரிசு விழுந்து உள்ளமை பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் தெற்கு கரோலினா மாகாணத்தில் உள்ள கொலம்பியா நகரில் ஸ்பிரிங் வேலி பகுதியில் வீட்டுக்கு தேவையான பொருட்கள் விற்பனை செய்யும் கடை ஒன்றில் பெண் ஒருவர் லாட்டரி சீட்டு வாங்கியுள்ளார். இதில் அவருக்கு 2 லட்சம் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் ரூ.1.5 கோடி) உச்சபட்ச பரிசு தொகை கிடைத்திருக்கிறது.

அந்த பெண்ணுக்கு பரிசு விழுவது இது முதல் முறையல்ல. ஏற்கனவே கடந்த 2020ம் ஆண்டு இதே கடையில், விற்பனை செய்யும் இதே நபர்களிடம் அவர் லாட்டரி சீட்டு ஒன்றை வாங்கி சென்றுள்ளார்.

அதில் அவருக்கு, 2.5 லட்சம் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் ரூ.1.9 கோடி) அளவுக்கு பரிசு தொகை கிடைத்தது. இதுகுறித்து அவர் கூறுகையில்,

முதல் முறை பரிசு கிடைத்தபோது, அதனை வைத்து வாழ்வின் ஒவ்வொரு தருணமும் மகிழ்ச்சியாக இருந்தேன். இந்த முறை நான் வீடு ஒன்று வாங்க போகிறேன் என கூறியுள்ளார்.

அதேவேளை கடந்த மாதம், தெற்கு கரோலினாவில் காலையில் காபி போட பால் இல்லை என்பதற்காக, ஓடி சென்று பால் வாங்கிய நபர் ஒருவர், விருப்பமின்றி வாங்கிய லாட்டரி சீட்டில் ரூ.15 கோடிக்கு பரிசு கிடைத்த சம்பவமும் நடந்துள்ளது.

  
  
   Bookmark and Share Seithy.com


Vaheesan-Remax-2016
Karan Remax-2010
 gloriousprinters.com 2021
Kugeenthiran-200-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Asiaan-Salon-2022-seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா