Untitled Document
June 22, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
21 வருடங்களாக மனைவியின் சடலத்துடன் வாழ்ந்துவந்த நபர்!
[Friday 2022-05-06 16:00]

தாய்லாந்தில் காதல் மனைவியின் சடலத்தை 72 வயதான முதியவர் 21 ஆண்டுகளுக்குப் பிறகு தகனம் செய்துள்ள சம்பவம் ஒறு பதிவாகியுள்ளது. தற்போது, மனைவியின் சாம்பலை வீட்டிலேயே வைத்து, அவரது பெயரில் அறப்பணி செய்துவருகிறார் சார்ன் ஜன்வாட்சாக்கல் (Mr Charn) எனும் காதல் கணவர்.

மனைவி மீது இவர் வைத்திருக்கும் ஆழமான காதல் பலரது உள்ளங்களை நெகிழவைத்துள்ளது. கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக மனைவியின் உடலை வீட்டிலேயே வைத்து அதனுடன் பேசியும் மனைவியின் சடலம் வைக்கப்பட்ட சவப்பெட்டி பக்கத்தில் சார்ன் (Mr Charn) தூங்கி வந்தார் .

இதை ஏற்றுக்கொள்ள முடியாத அவரது இரண்டு மகன்களும் வீட்டைவிட்டு வெளியேறிய பின்னர், மனைவிக்கு முறையான இறுதிச்சடங்கு நடக்குமா என்ற அச்சம் எழுந்த பிறகு, தாம் உயிருடன் இருக்கும் போதே மனைவிக்குப் பிரியாவிடை சார்ன் கொடுக்க முடிவெடுத்தார்.

மனைவியின் நல்லுடல் தகனச்சாலைக்கு எடுத்துசெல்லப்பட்டபோது, சார்ன் (Mr Charn) கதறி கதறி அழுதாக கூறப்படுகின்றது.

அதன்பின்னர் அவர், மனைவியின் சாம்பலை ஒரு வெள்ளைத் துணியில் சுற்றி அதை வீட்டுக்கு எடுத்துச்சென்றார்.

தாய்லாந்து இராணுவத்தில் மருத்துவராகப் பணியாற்றிக் கொண்டிருந்தபோது, சுகாதார அமைச்சில் வேலைபார்த்துக்கொண்டிருந்த தமது மனைவியைச் சந்தித்த அனுபவத்தை சார்ன் நினைவுகூர்ந்துள்ளார்.

இந்நிலையில் தன் மனைவி மீது இவ்வளவு அன்புவைக்க ஒருவரால் முடியுமா என நெட்டிசன்கள் ஆச்சர்யமடைதுள்ளனர்.

  
  
   Bookmark and Share Seithy.com


Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Vaheesan-Remax-2016
 gloriousprinters.com 2021
Kugeenthiran-200-2022-seithy
Karan Remax-2010
Asiaan-Salon-2022-seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா