Untitled Document
June 22, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
அவுஸ்திரேலிய கடற்கரையில் செத்து ஒதுங்கிய கடல் டிராகன்கள்! Top News
[Thursday 2022-04-14 16:00]

கடற்பகுதியில் மட்டுமே காணப்படும் அரிய வகை கடல் டிராகன்கள் அதிக அளவில் செத்து கரையில் ஒதுங்கியுள்ளது சர்வதேச அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலியா நாட்டின் கிழக்கு மற்றும் தெற்கு கடலோர பகுதிகளில் கடல் டிராகன்கள் அதிகளவில் வசித்து வருகின்றன. நீண்ட மூக்குடன், பார்ப்பதற்கு குட்டி டைனோசார்கள் போன்று காணப்படும் இந்த கடல் டிராகன்கள் அரிய இன வகையாக கருதப்படுகிறது. பல லட்சக்கணக்கான ஆண்டுகளாக கடல்நீரில் வாழ்கின்றன. இதனை பாதுகாக்கவும் ஆஸ்திரேலியா அரசு கவனம் செலுத்தி வருகிறது.

இந்த நிலையில் தற்போது கடல் டிராகன்கள் எண்ணிக்கையில் குறைந்து வருகின்றன. வலிமையான நீரோட்டங்களின்போதும் அவற்றில் சிக்காமல் இவை தாக்குப்பிடித்து தங்களது வசிப்பிடங்களிலேயே தொடர்ந்து நீடிக்கும் திறன் கொண்டவை. எனினும் புயல்களால் இவற்றுக்கு பாதிப்பு ஏற்படும் ஆபத்து உள்ளது.

இந்த நிலையில், சமீப நாட்களாக இவை திடீரென அதிக அளவிலான எண்ணிக்கையில் கரையில் செத்து ஒதுங்கி வருவது சுற்றுச்சூழல் ஆர்வலர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதுபற்றி கடல் டிராகன் நிபுணர் மற்றும் கடல்வாழ் சூழலியலின் பேராசிரியரான டேவிட் பூத் கூறும்போது, கடந்த 2 வாரங்களாக 20க்கும் அதிகமான கடல் டிராகன்கள் செத்து கரைப்பகுதியில் ஒதுங்கி வருகின்றன. இந்த எண்ணிக்கை சிட்னியில் 50க்கும் கூடுதலாக இருக்க கூடும். ஆனால், அதுபற்றிய தகவல்கள் வெளிவரவில்லை. இதற்கு அதிர்ச்சி தரக்கூடிய வகையிலான தட்பவெப்ப நிலை மாறுபாடு, கடல் மாசு ஆகியவற்றின் மொத்த பாதிப்பு காரணிகளாக உள்ளன என்று அவர் கூறியுள்ளார்.

தொடர்ந்து ஏற்படும் பருவநிலை மாறுபாட்டால், அரிய வகை மற்றும் அழிந்து வரும் உயிரினங்களில் ஒன்றாக உயிரியியலாளர்களால் வகைப்படுத்தப்பட்டு உள்ள இந்த கடல் டிராகன்களின் எண்ணிக்கை வடக்கு பகுதியில் குறைந்து வருவது அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்துவதாக கூறினார். குளிர் நிறைந்த நீர்ப்பகுதியை நோக்கி அவை பயணிக்க கூடிய சூழலும் ஏற்பட்டு உள்ளதாக தெரிவித்தார்.

  
  
   Bookmark and Share Seithy.com


Kugeenthiran-200-2022-seithy
Asiaan-Salon-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Vaheesan-Remax-2016
 gloriousprinters.com 2021
Karan Remax-2010
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா