Untitled Document
June 23, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
உலகின் மிக நீளமான கார்: என்னென்ன சிறப்பம்சங்கள் தெரியுமா? Top News
[Saturday 2022-03-12 16:00]

அமெரிக்காவைச் சேர்ந்த ஜோ ஓர்பெர்க் என்பவர் கார்களை மறுசீரமைக்கும் பணிகளை செய்து வருபவர். இவர் 1986-ல் 60 அடி நீளமும் 26 சக்கரங்களையும் கொண்ட உலகின் மிக நீண்ட காரை வடிவமைத்து கின்னஸ் சாதனை பெற்றார்.

தற்போது இந்தக் காரை மறுசீரமைப்புச் செய்து 60 அடியிலிருந்து 100 அடியாக மாற்றி தன் பழைய சாதனையை முறியடித்துள்ளார். இந்தக் கார் 'அமெரிக்கரின் கனவுக் கார் (American Dream Car)' என்றழைக்கப்படுகிறது.

இருபுறமும் இயங்கும் இந்தக் காரில் V8 ரக இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 75 நபர்கள் பயணிக்கும் அளவிற்கு வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் நீச்சல் குளம், சிறிய கோல்ஃப் மைதானம், ஃபிரிட்ஜ், டிவி மற்றும் 5 ஆயிரம் பவுண்ட் எடையைத் தாங்கும் அளவிற்கு ஹெலிகாப்டர் இறங்குதளம் என பல வசதிகள் உள்ளன. இந்தக் காரை சீரமைக்க மொத்தம் 2,50,000 டாலர் செலவானதாகக் கூறப்படுகிறது. மேலும் காரின் நீளம் அதிகமாக உள்ளதால் பயிற்சி பெற்ற ஓட்டுநர் மட்டுமே இந்தக் காரை ஓட்ட முடியும், சாதாரண சாலைகளிலெல்லாம் ஓட்ட முடியாது. எனவே இந்தக் கார் தற்போது பார்வைக்கு மட்டும் வைக்கப்பட்டுள்ளது.

  
  
   Bookmark and Share Seithy.com


Vaheesan-Remax-2016
 gloriousprinters.com 2021
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Kugeenthiran-200-2022-seithy
Asiaan-Salon-2022-seithy
Karan Remax-2010
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா