Untitled Document
June 23, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
திடீரென பிரபலமாகும் Balmain டி ஷர்ட்: விலை எவ்வளவு தெரியுமா?
[Thursday 2022-03-10 18:00]

இந்திய திரையுலக நடிகர்கள் எந்த விழாக்களுக்கு சென்றாலும், குறிப்பிட்ட பிராண்டின் டி ஷர்ட்டை அணிவது வழக்கமாகிவிட்டது. அந்த வகையில், ஷாருக்கான், ஜாக்குலின், கிரிக்கெட் வீரர் தோனி, அல்லு அர்ஜூன், என இவர்கள் வரிசையில் தற்போது சிவகார்த்திகேயனும் இணைந்துள்ளார். அப்படி பிரபலங்கள் அணிந்த அந்த பிராண்ட் டி-ஷர்ட் Balmain என்ற கம்பெனி தான். அப்படி என்ன இதில் இருக்கு எவ்வளவு விலை என தெரிந்துகொள்வோம் வாங்க...

Balmain விலை

பொதுவாக இந்த பிராண்டின் டி-ஷர்ட் ஒவ்வொரு விலையில் உள்ளன. . ரூ 22,500 என்பது இதுவரை நிர்ணயிக்கப்பட்ட குறைந்த விலையாகும். அடுத்து, தோனி அணிந்திருந்த டி-சர்ட்டின் விலை ரூ.37,744 ஆகும்.

நம்ம சிவகார்த்திகேயன் டான் திரைப்பட வெளியீட்டிற்கு தயாராகி வரும் நடிகர் சிவகார்த்திகேயன் சமீபத்தில் இந்த வாரம் நடந்த டிஜிட்டல் விருது நிகழ்ச்சியில் விருந்தினராக கலந்து கொண்டார்.

அப்போது அந்த நிகழ்ச்சியில் அணிந்திருந்த பால்மெயின் டீ ஷர்ட்டின் விலை வெறும் ரூ.45,000ரூபாய் எனக்கூறப்படுகிறது.

Balmain நிறுவனத்தின் நோக்கம் என்ன?

மேலும், பிரபலங்கள் இந்த டி-ஷர்ட்டை சாதாரண தோற்றமாக அணிந்து பெருமையுடன் செல்கின்றனர். இந்த நிறுவனத்திற்கு இலக்கானது சமானிய மக்கள் அல்ல பிரபலங்கள் தான்.

உலகம் முழுவதும் பல்வேறு துறைகளில் பிரபலமான நட்சத்திரங்களை தேர்வு செய்து அவர்களின் ரசனைக்கு ஏற்ப ஆடைகளை தயாரித்து விற்பனை செய்து வருகிறது.

மேலும், Balmain நிறுவனத்தில் அவர்களின் கார்ப்பரேட் பிராண்டுகளை என்ன விலையில், எந்த நட்சத்திரம் அணிந்துள்ளார்கள் என்பதைக் கண்காணிக்க ஒரு தனி குழு வேலை செய்கிறது.

Balmain paris என்பது இந்த பிராண்டின் முழுப்பெயர். இந்த பிராண்ட் ஹாலிவுட் பிரபலங்களுக்கு மிகவும் பிடித்த ஒரு பிராண்ட். இதன்படி, இந்த பிராண்டிங் நிறுவனம் அதிகாரப்பூர்வ வணிக இணையதளத்தில் அதிக எண்ணிக்கையிலான சேகரிப்புகளை விற்பனை செய்கிறது.

எங்கு எல்லாம் தயாரிக்கின்றனர்?

பால்மெயின் ஆடைகள் பிரான்ஸ், இத்தாலி, போர்ச்சுகல், சீனா, பல்கேரியா, ஜப்பான் மற்றும் போலந்து ஆகிய நாடுகளில் தயாரிக்கப்படுகின்றன. தொடர்ந்து, Balmain 1945 இல் இருந்து செயல்படும் பழமையான நிறுவனம். இது Pierre Balmain என்பவரால் தனது சொந்த பெயரில் தொடங்கப்பட்டது.

தற்போது பிரான்சின் தலைநகரான பாரிஸில் தலைமையகம் உள்ளது . ஆடைகள் மட்டுமின்றி, ஷூ, பைகள், தொப்பிகள் போன்ற அனைத்து பிரபலங்களின் இலக்கு சேகரிப்புகளும் இந்த இணையதளத்தில் கிடைக்கின்றன. இந்த டி சர்ட் விலை வைத்து நெட்டிசன்கள் பலரும் மீம்ஸ்களை வெளியிட்டு வைரலாக்கி வருகின்றனர்.

  
  
   Bookmark and Share Seithy.com


 gloriousprinters.com 2021
Kugeenthiran-200-2022-seithy
Karan Remax-2010
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Vaheesan-Remax-2016
Asiaan-Salon-2022-seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா